

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் பூக்கும் ‘அரிஸ்டோலோச்சியா ரிங்கிஸ்’ எனும் வாத்து வடிவிலான மலர்கள் பூத்து குலுங்குவதை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப வெளிநாட்டு அரிய வகை மலர்களும் மலர்கின்றன. பிரையண்ட் பூங்காவில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் பூக்கும் வாத்து வடிவிலான (அரிஸ்டோலோச்சியா ரிங்கிஸ்) பூக்கள் பூத்து குலுங்க தொடங்கி உள்ளன, இந்த மலரானது பிரவுன் மற்றும் வெள்ளை நிறம் என இரு வண்ணங்களில் பூத்து குலுங்குகிறது.
தென் அமெரிக்காவை பூர்விகமாக கொண்ட இந்த மலர் செடிகள். குளிர்ந்த மலைப் பிரதேசத்தில் மட்டும் மலர்கின்றன. இந்த பூ செடியில் வாத்து உருவம் போன்று பூக்கள் மலர்வதால் இதை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிக்கின்றனர்.