

கோவை: தடாகம் சாலையில் உள்ள கோயில் அருகே தொட்டியில் தண்ணீர் குடிக்கும் போது காகத்தை கண்டு பின்வாங்கிய யானைகள் தொடர்பான மொபைல்போன் வீடியோ சமூக வலைதளங்களில் வைராக பரவி வருகிறது.
வனத்துறை சார்பில், கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கோடை காலத்தில் வனவிலங்குகள் பயன்பெறும் வகையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை தடாகம் சாலையில் உள்ள பொன்னூத்து அம்மன் கோவில் அருகே வனத்துறை சார்பில் வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்த யானைகள் குட்டியுடன் வந்தன.
தண்ணீர் அருந்திய போது காகம் ஒன்று திடீரென தொட்டியில் மேல் அமர்ந்தது. இதை கண்ட யானைகள் பின்வாங்கின. யானைகள் அச்சப்பட்ட இச்சம்பவம் தொடர்பாக மொபைல் போனில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.