கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்: பொது மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்: பொது மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
Updated on
1 min read

சென்னை: ‘கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெப்பம் அதிகரிக்க தொடங்கியது. மார்ச் மாதத்தில் வெப்பநிலை மேலும் அதிகரித்து கடந்த இரு வாரங்களாக பல்வேறு நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடந்த மார்ச் 27-ம் தேதி 10 நகரங்களிலும், 28-ம் தேதி 11 நகரங்களிலும் வெப்பநிலை 100 டிகிரிக்கு மேல் பதிவானது. அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி பதிவானது.

நகர்ப்புறங்களில் கோடை காலத்தில் வெப்பம் மேலும் அதிகரித்து வருகிறது. இதனால், பறவைகள் அருந்த நீர் மற்றும் இரை கிடைக்காமல் அவதியுறுகின்றன. குறிப்பாக நகர்ப்புறங்களில் தான் பறவைகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தின் மொட்டை மாடியில், கையில் ஒரு சிறிய நாயை வைத்துக் கொண்டு, பறவைகளுக்கு உணவு அளிக்கும் புகைப்படத்துடன்,‘ கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்’’ என தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in