

கோவை: கோவையில் ஆடுகளை வேட்டையாடி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடித்த நிலையில் சிறிது நேரத்தில் உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது.
கோவை, ஓணாபாளையத்தில் ஆடுகளை சிறுத்தை வேட்டையாடி வந்தது. மீண்டும் ஆடுகள் அடைக்கப்பட்ட இடத்துக்கு சிறுத்தை வந்து சென்றது கேமரா மூலம் கண்டறியப்பட்ட நிலையில், திங்கள்கிழமை இரவு வனத்துறையினர் ‘ட்ராப் நெட்’ மூலம் சிறுத்தையைப் பிடித்தனர்.
‘ட்ராப் நெட்’ மூலம் பிடித்து கூண்டில் அடைக்கப்பட்ட சிறுத்தை உடனடியாக மருதமலை வன பணியாளர் குடியிருப்பு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு வன கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் உடல்நிலை மிக மோசமாக இருந்த காரணத்தால் சிகிச்சை பலனின்றி சிறுத்தை இன்று (மார்ச் 11) மதியம் 1 மணியளவில் உயிரிழந்தது.