சட்ட பல்கலை. வளாகத்தில் சுற்றுச்சூழல் வகுப்பறை: மரங்களுக்கு நடுவே மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஏற்பாடு

தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் வகுப்பறையை பல்கலைக்கழக துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமார் தொடங்கி வைத்து பாடம் நடத்தினார்.
தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் வகுப்பறையை பல்கலைக்கழக துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமார் தொடங்கி வைத்து பாடம் நடத்தினார்.
Updated on
1 min read

சென்னை: சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் மரங்களுக்கு நடுவே மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் சார்ந்த கல்வியையும், சட்ட கோட்பாடுகளையும் இயற்கை சூழலில் கற்பிக்கும் வகையில், சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் மியாவாக்கி காடுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமாரின் கனவு திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் சட்டம், சட்ட ஒழுங்கு துறை மற்றும் ஈகோ கிளப் மாணவர்கள் இணைந்து விதைகளை தூவினர். தற்போது அந்த விதைகள் மரமாக வளர்ந்து, பசுமை பரப்பாக உருவாகியுள்ளது.

இந்நிலையில், பசுமை பரப்புக்கு நடுவே மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் நடைமுறையை துணைவேந்தர் சந்தோஷ்குமார் நேற்று தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் அதன் நடைமுறை அமலாக்கங்கள் பற்றிய விரிவான விளக்கங்களை வழங்கினார். சுற்றுச்சூழல் சட்டத் துறையின் துறை தலைவர் ஆர்.ஹரிதா தேவி, உதவி பேராசிரியர்கள் ஸ்டான்லி, நவீன், கதிரவன் மற்றும் ஈகோ கிளப் மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in