மூணாறு மலைச் சாலையில் 32 இடங்கள் யானை குறுக்கிடும் பகுதி!

படங்கள்:என்.கணேஷ்ராஜ்
படங்கள்:என்.கணேஷ்ராஜ்
Updated on
2 min read

மூணாறு: தனுஷ்கோடி - கொச்சின் தேசிய நெடுஞ்சாலை, தமிழக-கேரளத்தை இணைக்கும் பிரதான வழித்தடமாகும். இச்சாலையானது தமிழகத்தின் போடிமெட்டு மலைச்சாலை வழியே, கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தின் பூப்பாறை, ராஜாக்காடு, அடிமாலி பகுதிகளில் செல்கிறது. மேலும், புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மூணா றையும் இச்சாலை இணைக்கிறது.

இப்பகுதிகள் அனைத்தும் தேயிலை தோட் டங்கள், பசுமையான பள்ளத்தாக்குகள், வனங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. சமீபகாலமாக, காட்டுப் பகுதியில் இருந்து யானைகள் அதிகளவில் இந்த சாலைக்கு வருகின்றன. பெரும்பாலும், மூணாறைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் இந்நிலை அதிகம் காணப்படுகிறது.

மனித உயிரிழப்புகள்: சாலையோரங்களில் விற்பனை செய் யப்படும் மக்காச்சோளம், மாங்காய், வெள் ளரிக்காய், கேரட், இளநீர் உள்ளிட்டவற்றால் கவரப்பட்டு, இவை அதிகம் வனத்தை விட்டு வெளியேறுகின்றன. மேலும், காய்கறி பயிர்களை உண்ணவும் இப்பகுதிகளுக்கு வருகின்றன. இதனால் சில நேரங்களில் மனித உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக, வாகனம், வீடுகள், தோட்டங்கள் உள்ளிட் டவற்றை சேதப்படுத்தும் நிகழ்வு அதிகளவில் நடைபெறுகின்றன.

யானை நடமாடும் பகுதி, அதன் குணம், தப்பிச் செல்லும் முறையை உள்ளூர்வாசிகள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். ஆனால், வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்று லாப் பயணிகளுக்கு இதுகுறித்த விவரம் தெரி யாததால், பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, பூப்பாறை, அடிமாலி, தேவிகுளம், மூணாறு உள்ளிட்ட சாலைகளில் யானை குறுக்கிடும் பகுதிகள் என 36 இடங்களில் அறிவிப்பு பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.

பூப்பாறை அருகே வைக்கப்பட்டுள்ள யானை குறுக்கிடும் பகுதி என்ற அறிவிப்பு பலகை.
பூப்பாறை அருகே வைக்கப்பட்டுள்ள யானை குறுக்கிடும் பகுதி என்ற அறிவிப்பு பலகை.

இடுக்கி மாவட்டத்தின் நுழைவுப் பகுதியான போடிமெட்டு அருகே இதுகுறித்த விவரத் துடன் கேரள வனத்துறை சார்பில் வைக்கப் பட்டுள்ளது. மேலும், யானை குறுக்கிடும் ஒவ்வொரு பகுதியிலும் எச்சரிக்கை பலகைகள் சாலை யோரங்களில் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், சோதனைச்சாவடிகளில் வெளிமாநில வாகன ஓட்டுநர்களுக்கு இது குறித்து கேரள வனத்துறையினர் எச்சரித்தும் வருகின்றனர்.

புகைப்படம் எடுக்க தடை: இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், யானை சாலையில் குறுக்கிட்டால், பதற்றப்படாமல் வாகனத்தை அப்படியே நிறுத்த வேண்டும். ஒலி எழுப்பவோ, கூச்சலிடவோ கூடாது. முக்கியமாக, வாகனத்தில் இருந்து இறங்கி புகைப்படம் எடுத்தல் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளது.

போடிமெட்டு அருகே இடுக்கி மாவட்ட நுழைவுப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள யானை நடமாட்டம் குறித்த அறிவிப்பு பலகை.
போடிமெட்டு அருகே இடுக்கி மாவட்ட நுழைவுப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள யானை நடமாட்டம் குறித்த அறிவிப்பு பலகை.

சாலைக்கு வரும் யானை தானாகவே ஒதுங்கிப் போய்விடும். அதுவரை பொறுமை காக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். வழக்கமாக வேகத் தடை, ரயில்வே கேட், வளைவுகள் உள்ளிட்ட சாலையோர அறிவிப்பு களையே பார்த்து பழக்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு, யானை குறுக்கிடுவது குறித்த அறிவிப்பு வித்தியாசமாகவே தென்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in