கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 52 பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 52 பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது கோடையில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் குடிநீர் வழங்கல் தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகள் மீது உடனுக்குடன் தீர்வு காண ஏதுவாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவில் குடிநீர் குறைதீர் கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட் டுள்ளது.

பொதுமக்கள் குடிநீர் வழங்கலில் ஏற்படும் குறைபாடுகளை தெரிவிக்கும் வகையில் 04151-222001, 04151-222002 என்ற இரு தொலைபேசி இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு மையம் 24 மணிநேரமும் தொடர்ந்து செயல் படும். கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் கோரிக்கைகள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு குறைகளை களைந்து குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் கட்டுப்பாட்டு அறைக்கு, கள்ளக்குறிச்சி நகராட்சி, உளுந்தூர்பேட்டை நகராட்சி, வடக்கனந்தல் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் இருந்து 6 புகார்களும்,கள்ளக்குறிச்சி, உளுந்தூர் பேட்டை, சங்கராபுரம், கல்வராயன் மலை, திருநாவலூர், சின்னசேலம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து 52 புகார்களும் பெறப்பட்டன.

அதில் 23 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருநாவலூர் ஊராட்சியில் 6 பகுதிகளில் பெறப்பட்ட புகார்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் அப்பகுதி மக்கள் தினம் ஒரு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நடவடிக்கை எடுக்கப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in