

கோவை: கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஏ.வி.முகேஷ் (34). இவர், மலையாள பத்திரிகையின் பாலக்காடு மாவட்ட தலைமை புகைப்படக் கலைஞராக பணியாற்றினார். இவர் நேற்று கோட்டக்காடு பகுதியில் யானைகள் நடமாட்டத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக யானை தாக்கி முகேஷ் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் முகேஷை மீட்டு பாலக்காடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.