வருசநாடு மலைப் பகுதியில் பெய்த மழையால் மூல வைகையின் முகத்துவாரத்தில் நீர்வரத்து

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பெய்த மழையால் வருசநாடு அருகே உருட்டுமேடு தடுப்பணையில் ஏற்பட்ட நீர்வரத்து.
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பெய்த மழையால் வருசநாடு அருகே உருட்டுமேடு தடுப்பணையில் ஏற்பட்ட நீர்வரத்து.
Updated on
1 min read

கண்டமனூர்: மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பெய்த கோடை மழையால் மூல வைகையின் முகத்துவாரத்தில் நீர்வரத்து தொடங் கியது.

தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வெள்ளிமலை அமைந்துள்ளது. இங்குள்ள அரசரடி, இந்திரா நகர், வெள்ளிமலை, புலி காட்டு ஓடை, பொம்முராஜபுரம், காந்தி கிராமம், வாலிப் பாறை, தும்மக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை சிற்றாறுகளாக உருவெடுக் கின்றன. பின்பு மூல வைகையாக பெருக்கெடுத்து வைகை அணைக்குச் செல்கின்றன. கடந்த சில மாதங்களாகவே கோடை வெயில் சுட்டெரித்ததாலும், மழை இல்லாததாலும் மூல வைகை வறண்டது.

இதனால் உறை கிணறுகளில் நீர்சுரப்பு குறைந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் கோடை மழை பெய்தது. இதனால் நீர்ப்பெருக்கு ஏற்பட்டு மூல வைகையில் நீர்வரத்து தொடங்கியது. முகத்துவாரப் பகுதியான வருசநாடு அருகே உருட்டுமேடு தடுப்பணை பகுதிகளில் நேற்று நீர்வரத்து ஏற்பட்டது.

குறைவான மழை அளவு என்பதால் மயிலாடும்பாறை, கட மலைக்குண்டு, அம்மச்சியாபுரம் உள்ளிட்ட வழித்தடத்தில் நீர் வரத்து இல்லை. இருப்பினும் கோடை மழையால் ஏற்பட்ட நீர்வரத்தின் மூலம் உறை கிணறுகளில் நீர்சுரப்பு ஏற்பட்டு குடிநீர் பிரச்சினை ஓரளவுக்கு நீங்கியுள் ளது. அடுத்தடுத்து மழை பெய்தால் மட்டுமே மூல வைகையின் வழிநெடுகிலும் நீர்வரத்து ஏற்படும் நிலை உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in