பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்

திருவண்ணாமலையில் சுட்டெரிக்கும் வெயில் - பொதுமக்கள் அவதி

Published on

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தொடர்ந்து 100 டிகிரி வெப்பம் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அக்னி பூமி என்றழைக்கப்படுவதற்கு ஏற்ப, திருவண்ணாமலையில் குறைவின்றி வெப்பம் நிலவுகிறது. அக்னி நட்சத்திரம் ஒரு வாரத்தில் தொடங்க உள்ள நிலையில், பங்குனி மாத இறுதியில் இருந்து கடும் வெப்பம் சுட்டெரிக்கிறது.

அனல் காற்று: ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து 100 டிகிரி வெப்பம் வதைக்கிறது. இதில் அதிகபட்சமாக கடந்த 20-ம் தேதி 107 டிகிரி அளவில் வெப்பம் இருந்தது. நேற்றும் 100 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது. வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து நீடிப்பதில், அனல் காற்று வீசுகிறது.

இதனால், வீட்டில் இருந்து வெளியே வருவதை நோயாளிகள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் தவிர்க்குமாறு சுகாதாரத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் நீர், மோர் உள்ளிட்ட நீரா காரங்களை எடுத்துக் கொள்ளவும், துரித உணவுகளை தவிர்த்து நீர்ச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in