பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் வறட்சியால் கிணறு தூர்வாரும் பணி தீவிரம்

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் கிணறு தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் கிணறு தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
Updated on
1 min read

அரூர்: பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை காப்பாற்றுவதற்காக கிணறுகளை தூர்வாரும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் வாணியாறு அணையை ஆதாரமாக கொண்டு சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தென்னை, வாழை, கரும்பு, நெல், பாக்கு, மா போன்ற பயிர்களும் கத்தரி, வெண்டை உள்ளிட்ட காய்கறிகளும், கீரை வகைகளும் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. கடந்த பருவ மழை சீசனில் மழை போதிய அளவு பெய்யாததால் நீர்நிலைகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது.

மேலும், தற்போது கோடை வெப்பம் சுட்டெரிப்பதால் கடுமையான வறட்சி நிலவுகிறது. கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்த நிலையில் இருக்கும் நீரைக் கொண்டு விவசாயிகள் பயிர்களை காப்பாற்றி வருகின்றனர். கோடை வெப்பத்தால் அணையில் தண்ணீர் முற்றிலுமாக குறைந்து விட்டதால் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் கிணறு மற்றும் ஆழ்துளை குழாய் கிணறுகளில் நீர் இருப்பு குறைந்து வருகிறது. விளை நிலத்தில் உள்ள பயிர்கள், கால்நடைகளை காக்க புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணிகளில் சில விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சில விவசாயிகள் கிணறுகளில் உள்ள சேற்றை அள்ளி சுத்தப்படுத்தினால் ஊற்று நீர் கிடைக்கும் என்ற நோக்கத்தில் தூர்வாரி வருகின்றனர். இதற்காக சேலம், ஓமலூர், மேச்சேரி பகுதியில் இருந்து கிணறு வெட்டும் கூலித் தொழிலாளர்களை வரவழைத்து கிணறு தூர்வாரும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.Environment

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in