Published : 03 Mar 2024 04:20 AM
Last Updated : 03 Mar 2024 04:20 AM

மாம்பழச்சிட்டு, கருந்தலை மாங்குயிலை கண்டறிந்த குழுவினர் @ கொடைக்கானல், ஒட்டன்சத்திரம்

கொடைக்கானல்: கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் வனப் பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

தமிழகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணியானது ஆண்டு தோறும் வட கிழக்கு பருவ மழை முடிந்த பின்பு நடைபெறும். அதன்படி, ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு ஈர நிலங்களில் வாழும் பறவைகள், நிலப்பரப்பில் வாழும் பறவைகள் என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஈர நிலங்களில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, மார்ச் மாதத்தில் நடத்தப்படும் நிலப்பரப்பில் வாழும் பறவைகளின் கணக் கெடுப்பு நேற்று நடைபெற்றது.

பாரடைஸ் ப்ளை கேட்சர், சாம்பல் நெற்றி பச்சை புறா, மாம்பழச்சிட்டு
நீல நிற கரும்பிடரி, கருந்தலை குயில் கீச்சான்

கொடைக்கானல் வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா தலைமையில், உதவி வனப் பாதுகாவலர் சக்தி வேல் முன்னிலையில் வனச்சரக அலுவலர்கள், வன பணியாளர்கள், பறவை ஆர்வலர்கள், கொடைக்கானல் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் ஆகியோர் குழுக்களாக பிரிந்து பறவைகள் கணக்கெடுப்பு பணி யில் ஈடுபட்டனர். கொடைக்கானல் மன்னவனூர், பூம்பாறை, ஏரிப்பகுதி ஆகிய இடங்களில் நடத்திய கணக்கெடுப்பில் அரியவகை பறவை இனங்கள் கண்டறியப்பட்டன.

இதேபோல், ஒட்டன்சத்திரம் வனச்சரக அலுவலர் ராஜா தலைமையில் வனப் பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பெத்தேல்புரம், சிறுவாட்டுக் காடு, ரெங்கமலை கரடு, குழந்தை வேலப்பர் கோயில் ஆகிய பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பை நடத்தினர். இதில், பாரடைஸ் ப்ளை கேட்சர், சாம்பல் நெற்றி பச்சைப் புறா, மாம் பழச்சிட்டு, நீல நிற கரும்பிடரி, கருந்தலை மாங்குயில், கருந்தலை குயில் கீச்சான் உள்ளிட்ட பறவைகள் கண்டறியப்பட்டன. இன்றும் ( மார்ச் 3 ) பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x