Published : 20 Feb 2024 06:35 AM
Last Updated : 20 Feb 2024 06:35 AM

தனுஷ்கோடியில் வலையில் சிக்கிய 8 ஆமைகள் - கடலில் விட்ட மீனவர்கள்

தனுஷ்கோடியில் வலையிலிருந்து விடுவித்ததும் உற்சாகமாக கடலுக்குள் சென்ற ஆமைகள்.

ராமேசுவரம்: தனுஷ்கோடி கரைவலை மீனவர்களின் வலையில் சிக்கிய அரிய வகை 8 சித்தாமைகள் மீண்டும் கடலில் விடப்பட்டன.

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கடற்பகுதியில், பாரம்பரிய கரைவலை மீன்பிடிப்பில் மீனவர்கள் நேற்று வழக்கம் போல ஈடுபட்டிருந்தனர். மீனவர்கள் வலையை கரையில் இழுக்கும் போது அதில் மீன்களோடு சேர்ந்து அரிய வகை 8 சித்தாமைகளும் வந்தன. உடனே மீனவர்கள் வலைகளில் இருந்து ஆமைகளை பாதுகாப்பாக விடுவித்து மீண்டும் கடலுக்குள் விட்ட னர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: கடலில் விடப்பட்டவை சித்தாமைகள் (Olive ridley) எனும்அரியவகை ஆமைகள். டிசம்பர் முதல் மார்ச் வரை சித்தாமைகளின் இனப் பெருக்க காலம் ஆகும். அப்போது தனுஷ்கோடி மன்னார் வளைகுடா பகுதியில், முட்டை இடுவதற்காக இவை கரையோரங்களில் ஒதுங் கும். மீன்பிடி வலைகளில் இது போன்ற அரியவகை ஆமைகள் சிக்கும்போது, உடனடியாக மீனவர்கள் கடலில் உயிருடன் விட்டு வனத் துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x