

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து பழநி செல்லும் மலைச் சாலையில் ,மேல்பள்ளம் என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு வனப் பகுதியில் தீப்பற்றியது.
தகவலறிந்து அங்கு சென்றவனத் துறையினர் பொதுமக்களுடன் இணைந்து தீ மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். காற்றின் வேகத்தில் தீ வேகமாகப் பரவியது. சுமார் 3 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீயை முற்றிலும் அணைத்தனர்.
அந்த வழியாகச் சென்ற நபர்கள் யாரேனும் சிகரெட்டை புகைத்துவிட்டு, தீயை அணைக்காமல் வீசியதால் தீப்பற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.