ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஏற்காட்டில் நேற்று கடும் பனிமூட்டம் நிலவியது. மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்ற வாகன ஓட்டி.
ஏற்காட்டில் நேற்று கடும் பனிமூட்டம் நிலவியது. மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்ற வாகன ஓட்டி.
Updated on
1 min read

சேலம்: ஏற்காட்டில் கடும் பனிப் பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனிப் பொழிவு அதிகரித்து வருகிறது. காலை வரை நீடிக்கும் பனியால் மக்கள் அவதிப் பட்டு வருகின்றனர். இதே போல, ஏற்காட்டிலும் கடும் பனிப் பொழிவு உள்ளது. மாலை தொடங்கும் பனிப் பொழிவு மறுநாள் காலை 10 மணி வரை நீடிக்கிறது.

மலைப் பாதையில் மேகம் போர்த்தியது போல பனிப் பொழிவு காணப் படுகிறது. இதை சுற்றுலாப் பயணிகள் ரசித்தபடி செல்கின்றனர். சிலர் கேமரா மற்றும் செல்போன்களில் புகைப்படங்கள் எடுத்துக் கொள்கின்றனர். ஏற்காடு மலைப் பாதையில் நிலவும் அதிகப்படியான பனிப் பொழிவால் முகப்பு விளக்கு களை ஒளிரவிட்டபடி வாகனங்கள் செல்கின்றன. பனிப் பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப் படைந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in