நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து பிடிபடும் பாம்புகள்

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து பிடிபடும் பாம்புகள்
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று மேலும் ஒரு பாம்பு பிடிபட்டது.

திருநெல்வேலியில் தாமிர பரணி ஆற்றங்கரையில் கொக்கிர குளத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளக் கட்டுப் பாட்டு அறையில் புகுந்த பாம்பை நேற்று முன்தினம் தீயணைப்பு படையினர் லாவகமாக பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

இந்நிலையில், ஆட்சியர் அலுவலக பிரதான நுழைவு வாயில் பகுதியில் ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரின் கார்கள் நிறுத்தும், அழகு செடிகள் வளர்க்கப்படும் இடத்தில் நேற்று காலையில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை ஊழியர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

தீயணைப்பு படையினர் அங்குவந்து அந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். அது கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் இனத்தை சேர்ந்தது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரைத்தளத்தில் செயல்படும் பல்வேறு அலுவல கங்களிலும், அலுவலக வளாகத் திலும் பாம்புகள் ஏதும் உள்ளனவா என்று பாளையங்கோட்டை மற்றும் பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in