பெருங்குடியில் சுற்றுச்சூழல் பூங்கா: 8-ம் தேதி கருத்து கேட்பு

பெருங்குடியில் சுற்றுச்சூழல் பூங்கா: 8-ம் தேதி கருத்து கேட்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை பெருங்குடி குப்பைகொட்டும் வளாகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்கும்கூட்டம் வரும் 8-ம் தேதி பள்ளிக்கரணையில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்கும் கூட்டம், ஜன.8-ம் தேதி காலை 11 மணிக்கு பள்ளிக்கரணை ஐஐடி காலனியில் உள்ள மாநகராட்சி சமுதாய நலக்கூடத்தில் தொடங்குகிறது.

மேயர் பிரியா, ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். பொதுமக்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பது தொடர்பாக தங்கள் கருத்துகளை முன்வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in