ஏற்காட்டில் நிலவி வரும் மூடுபனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஏற்காட்டில் நேற்று கடும் பனி மூட்டம் நிலவியது. அண்ணா பூங்கா அருகே சேர்வராயன் கோயில் செல்லும் சாலையில் தென்பட்ட பனி மூட்டம்.
ஏற்காட்டில் நேற்று கடும் பனி மூட்டம் நிலவியது. அண்ணா பூங்கா அருகே சேர்வராயன் கோயில் செல்லும் சாலையில் தென்பட்ட பனி மூட்டம்.
Updated on
1 min read

சேலம்: ஏற்காட்டில் நிலவி வரும் மூடுபனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனிப் பொழிவு அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் கடும் பனியால் குளிர் அதிகரித்துள்ளது. காலை வரை நீடிக்கும் பனியால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது போல, ஏற்காட்டில் குளுமையான சீதோஷ்ண நிலையுடன் தற்போது கடும் பனிப் பொழிவும் அதிகமாக நிலவி வருகிறது.

குறிப்பாக மாலை 3 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு காலை 11 மணி வரை நீடிக்கிறது. இதனால், ஏற்காட்டில் உள்ள மரங்கள், காபி தோட்டங்களில் பனி படர்ந்து அழகாக காட்சி அளிக்கிறது. மேலும் பகலில் மூடு பனியும் நிலவுகிறது. மலைப்பாதையில் அவ்வப்போது நிலவும் மூடு பனியால் எதிரெதிரே வாகனங்கள் தெரியாத நிலை ஏற்படுகிறது. இதனால், முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்கள் இயக்கப் படுகின்றன.

சில நேரங்களில் கடும் மூடு பனியால் வாகனங்களை இயக்க முடியாமல் சாலையோரங்களில் நிறுத்தி விட்டு, பனி விலகியதும் வாகனங்களை எடுத்துச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. பனியுடன் சேர்ந்து கடும் குளிர் நிலவி வருவதால், ஸ்வெட்டர், ஜர்கின் அணிந்த படி பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் வெளியிடங்களுக்கு செல்கின்றனர். பகல் முழுவதும் பனிப் பொழிவு நீடிக்கும் நிலையில், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in