

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வி.கே. புரத்தில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட 10 மலைப் பாம்புகளை வனத்துறையினர் மீட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த அதி கனமழையால் பாப நாசம் அணையிலிருந்து பெருமளவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டது. இதில் வனப்பகுதியில் உள்ள உயிரினங்களும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வி.கே.புரத்தில் ஊருக்குள் மலைப் பாம்புகள் பிடிபட்டு வருகின்றன.
அதன் படி வி.கே.புரம் மூன்று விளக்கு பகுதியில் சுரேஷ் என்பரது ஹோட்டல் அருகே 8 அடி நீள மலைப் பாம்பை வனத் துறையினர் நேற்று பிடித்து பாபநாசம் சரகத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப் பகுதியில் விட்டனர். இதுவரை வி.கே.புரம் பகுதியில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட மலைப் பாம்புகள் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.