

பருவநிலை செயல்பாடுகள் மற்றும் இதர நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு அதிவேகமாக வளர்ந்து வரும் நிதி தேவைகள் மற்றும் உலகின் வளமான பல்லுயிர்களைப் பாதுகாப்பதன் அவசியம் எழுந்துள்ள வேளையில் ஜி20 நிலையான நிதிப் பணிகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. அது தொடர்பான மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையில் பொருளாதார ஆலோசகர்கள் வி.அனந்த நாகேஸ்வரன், சாந்தினி ரெய்னா மற்றும் கீது ஜோஷி ஆகியோரின் கட்டுரை இது...
எதிர்கால சந்ததியினருக்கும், சுற்றுச்சூழல் அமைப்பு முறைகளை பாதுகாப்பதற்கும் மட்டுமே நிலையான வளர்ச்சி அவசியமல்ல, தற்போதைய சந்ததியினரின் லட்சியங்களைப் பூர்த்தி செய்யவும் அது இன்றியமையாதது. அதனால், பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான 2030 திட்டத்தின் இலக்குகளோடு நிதி மற்றும் கொள்கைகளை ஒருங்கிணைப்பதற்கு ஜி20-இன் நிலையான நிதி பணிக்குழு உருவாக்குதல் கட்டாயமாகிறது.
சலுகையின் அடிப்படையில் மிகப்பெரிய நிதி தொகை என்ற கூற்றால் வழிநடத்தப்படும் நிலையான நிதி திட்டத்துக்கான இந்தியாவின் அணுகுமுறை, பருவநிலை மற்றும் இதர நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. வலுவான பொருளாதாரம், வளர்ச்சி உள்ளடக்கத்தை பலப்படுத்துதல், நெகழ்தன்மையை கட்டமைத்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவை இந்தியாவின் வளர்ச்சி உத்திக்கு இணையாவை. இதனால், பருவநிலை மற்றும் நிலையான நிதி அளவை அதிகரித்தல் மற்றும் திறன் கட்டமைப்பு முதலியவற்றில் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் கவனம் செலுத்தியது. பருவநிலை மாற்றம் என்பது மிகப்பெரிய உலகளாவிய சவால்களுள் ஒன்று.
உலக நாடுகள் அறிவித்துள்ள நிகர பூஜ்ஜிய உமிழ்வு அறிவிப்பை எட்டுவதற்கு, 2030-ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட வேண்டும் என்று உலகப் பொருளாதார கண்ணோட்டம் 2022 மதிப்பிட்டுள்ளது. 2030 திட்டத்தை அடைவதற்கு வெறும் 7 ஆண்டுகளே மீதம் உள்ளன. எனவே, வளரும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் 3.9 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற பெரும் நிலையான வளர்ச்சி இலக்க நிதி இடைவெளியை நிரப்ப வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு தனது தலைமைத்துவத்தின் போது ஜி 20 நிலையான நிதி பணிக்குழுவில் பருவநிலை நிதி மற்றும் திறன் கட்டமைப்பிற்கு இந்தியா முன்னுரிமை அளித்தது. பருவநிலை நிதியின் கீழ் இரண்டு கருப்பொருட்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இவற்றில் ஒன்று, பருவநிலை நிதிக்கு சரியான நேரத்தில் மற்றும் போதுமான வளங்களை திரட்டுவதற்கான இயங்குமுறைகள். மற்றொன்று, பசுமை மற்றும் குறைவான கார்பன் தொழில்நுட்பங்களின் பயன்பாடு மற்றும் விரைவான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான கொள்கை முயற்சிகள் மற்றும் நிதி ஆதாரங்கள்.
பொது சலுகை நிதியில் உள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டுமென்று, தொடர் ஆலோசனைகளின் மூலம், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் ஒப்புக்கொண்டன. பருவநிலை செயல்பாட்டிற்கு நிதியளித்தலில் பலதரப்பட்ட வளர்ச்சி வங்கிகளின் முக்கியப் பங்களிப்பை அவை சுட்டிக் காட்டின. இத்தகைய வங்கிகளால் இதர வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியளிப்பதில் சமரசம் செய்து கொள்ளாமல் வளங்களை திறம்பட ஒதுக்கீடு செய்வதைத் தூண்டிவிட முடியும், மேலும், இடர்களைக் குறைப்பதன் மூலமும், சலுகை விலையில் வளங்களைத் திரட்ட புதுமையான கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலமும் தனியார் துறையை இந்த வங்கிகளால் ஊக்குவிக்க முடியும்.
நிலைத்தன்மையுடன் இணைந்த பத்திரங்கள் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பத்திரங்கள் போன்ற நிதி ஆதாரங்களின் வாயிலாக சமீப ஆண்டுகளாக தனியார் துறையினர் சமூக சேவைகளில் அதிக முதலீடுகளை செய்து வருகின்றனர். இருப்பினும், புதிய முதலீட்டை செயல்படுத்தும் சூழல் மற்றும் முதலீட்டுக் கொள்கைகளில் சமூக நிலையான வளர்ச்சி இலக்குகளை ஒருங்கிணைப்பதற்கான கருவிகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால், சமூகத் துறைகளுக்கு தனியார் நிதி வரத்துகள் தொடர்ந்து கட்டுப்படுத்துகின்றன.
இத்தகைய சவால்களை உணர்ந்து, சமூகத்துறைகளில் பொது முதலீடுகளுக்கு உறுதுணையாக சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் முதலீட்டுக் கருவிகளைப் பரவலாகப் பின்பற்றுவது மூலம் தனியார் முதலீடுகளை ஈர்ப்பதில் ஜி20 உறுப்பினர்கள் கவனம் செலுத்தினர். பரிவர்த்தனை செலவுகளைக் குறைத்து, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற நிலையான வளர்ச்சி இலக்குகளில் நிதி வரத்தை அதிகரிக்கும் புதுமையான அணுகுமுறைகள் மற்றும் சிறப்பு மிகுந்த முதலீட்டு திட்டங்களை நிலையான நிதிப் பணிக் குழுவின் பரிந்துரைகள் இலக்காகக் கொண்டுள்ளது.
போதிய அறிவுத்திறன் மற்றும் குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் திறமை வாய்ந்த வல்லுநர்கள் இல்லாதது, நிலையான பொருளாதாரத்தை நோக்கிய உலகளாவிய மாற்றத்திற்கு மற்றொரு தடையாக உள்ளது. நிதி தயாரிப்புகளில் புதுமையை ஏற்படுத்துவதற்கான திறன் கட்டமைப்பு, மாற்றத்திற்கான திட்டம் மற்றும் நிலைத்தன்மையுடன் இணைந்த அணுகுமுறைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை இந்தப் பணிக்குழு கண்டறிந்தது. இதையடுத்து இந்த ஆண்டு உருவாக்கப்பட்ட ஜி20 தொழில்நுட்ப உதவி செயலாக்கத் திட்டமும் அதன் அமலாக்க இயங்குமுறையும், அறிவுத்திறனில் உள்ள இடைவெளியைக் குறைத்து, உள்ளடக்கிய மற்றும் செயல்திறன் வாய்ந்த மாற்றத்தை உறுதி செய்வதற்கும் தகுந்த வழிமுறைகளை வகுக்கிறது.
வளர்ந்து வரும் நாடுகளுக்கான நிதி வரத்தை மேம்படுத்துவதற்கான அரசுகளின் ஒருங்கிணைப்பு இல்லாமல் ‘ஒரே எதிர்காலம்’ என்ற தொலைநோக்குப் பார்வையை அடைய முடியாது என்பதை புதுதில்லி தலைவர்களின் பிரகடனம் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டது. பருவநிலை செயல்பாடுகள் மற்றும் இதர நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு அதிவேகமாக வளர்ந்து வரும் நிதி தேவைகள் மற்றும் உலகின் வளமான பல்லுயிர்களைப் பாதுகாப்பதன் அவசியம் எழுந்துள்ள வேளையில் ஜி20 நிலையான நிதிப் பணிகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்திய தலைமைத்துவத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆண்டின் பணிகள், உலகளாவிய தெற்கின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்ப நிலையான பிரச்சினைகள் குறித்த ஜி20 இன் எதிர்கால விவாதங்களுக்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கும்.