தருமபுரியில் 4 மணி நேரத்தில் 25 லட்சம் விதைப் பந்துகள் தயாரித்து சாதனை - 10,000 மாணவர்கள் பங்கேற்பு

தருமபுரியில் தனியார் கல்லூரில் 25 லட்சம் விதைப் பந்துகள் தயாரிக்கும் சாதனை நிகழ்வில் பங்கேற்ற மாணவ, மாணவியர்.
தருமபுரியில் தனியார் கல்லூரில் 25 லட்சம் விதைப் பந்துகள் தயாரிக்கும் சாதனை நிகழ்வில் பங்கேற்ற மாணவ, மாணவியர்.
Updated on
1 min read

தருமபுரி: தருமபுரியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இணைந்து 25 லட்சம் விதைப் பந்துகளை தயார் செய்து சாதனை படைத்தனர்.

தருமபுரியில் செயல்படும் பச்ச முத்து கல்விக் குழுமம் ஒருங்கிணைப்பில் மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் என 2,500 பேரும், தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் 7,500 பேரும் இணைந்து ஒரே நாளில் 25 லட்சம் விதைப் பந்துகள் தயாரிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பச்சமுத்து மகளிர் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் 10 ஆயிரம் நபர்கள் இணைந்து 4 மணி நேரத்தில் 25 லட்சம் விதைப் பந்துகளை தயார் செய்தனர். இந்நிகழ்வு, ‘தொடர்ச்சியாக 4 மணி நேரம் விதைப் பந்துகள் உருவாக்குதலில் அதிக நபர்கள் பங்கு கொள்ளுதல்’ என்ற சாதனை நிகழ்வாக எலைட் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அத்தி, அரசு, ஆல், மூங்கில், புளி, பூவரசு, வில்வம் உள்ளிட்ட ரக மரங்களின் விதைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த விதைப் பந்துகள், வனப்பரப்பை அதிகரிக்க தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டமான பசுமைத் தமிழகம் திட்டத்துக்கு வழங்கப்பட இருப்பதாக கல்விக் குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in