முதுமலையில் சூழல் சுற்றுலா முன்பதிவுக்கு பிரத்யேக இணையதளம் தொடக்கம்

முதுமலையில் சூழல் சுற்றுலா முன்பதிவுக்கு பிரத்யேக இணையதளம் தொடக்கம்
Updated on
1 min read

முதுமலை: முதுமலையில் சூழல் சுற்றுலாவுக்கு எளிய முறையில் முன்பதிவு செய்து கொள்ள ஏதுவாக பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வன உயிரின பாதுகாப்பு மட்டுமல்லாமல், சூழல் சுற்றுலா தலமாகவும் அமைந்துள்ளது. இங்கு யானைகள் முகாம் மற்றும் சூழல் சுற்றுலா சவாரி நடைமுறையில் உள்ளது. இதனால், நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் சூழல் சுற்றுலா சென்று மகிழ்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அனைவரும் குடும்பத்தாருடன் இணைந்து, வன விடுதிகளில் தங்கி, சூழல் சுற்றுலாவை கண்டுகளிக்க ஏதுவாகவும், எளிய முறையில் முன்பதிவு செய்து கொள்ளவும் பிரத்யேகமான இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. www.mudumalaitigerreserve.com என்ற இணையதள முகவரியில் மேற்கூறிய வசதிகளைப் பெற முன்பதிவு செய்து கொள்ளலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in