விருதுநகரில் 200 உறுப்பினர்களுடன் வறண்ட பகுதியை பசுமையாக்கும் ‘ஆலமரம்’ அமைப்பு

விருதுநகர் அருகே சந்திரகிரிபுரத்தில் 3 ஆயிரமாவது மரக்கன்றை நடவு செய்த ‘ஆலமரம்’ அமைப்பினர்.
விருதுநகர் அருகே சந்திரகிரிபுரத்தில் 3 ஆயிரமாவது மரக்கன்றை நடவு செய்த ‘ஆலமரம்’ அமைப்பினர்.
Updated on
2 min read

விருதுநகர்: விருதுநகரில் வறண்ட பகுதிகளை பசுமையாக்கும் முயற்சியில் இதுவரை 3 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரித்து வருகிறது ‘ஆலமரம்’ என்ற அமைப்பு. 3 கிராமங்களில் குறுங் காடுகள் அமைக்கப்பட்டுள்ளதும், மாவட்டம் முழுவதும் வாரம் 5 ஆயி ரம் மரக்கன்றுகளை நடுவதையும் நோக்கமாகக் கொண்டு செயலாற்றி வருகின்றனர் இந்த தன்னார்வல அமைப் பினர்.

விருதுநகர் அருகே உள்ள ரோசல் பட்டி ஊராட்சியை மையமாகக் கொண்டு ‘ஆலமரம்’ அமைப்பு செயல்பட்டு வருகிறது. 2019-ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு விருதுநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை 3 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளதோடு அவற்றை முறையாக பராமரித்து வரு கிறது.

விருதுநகர் அருகே உள்ள சந்திரகிரி புரத்தில் நேற்று 60 மரக்கன்றுகள் நடப்பட்டு, மொத்தம் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டுவைத்த பெருமையைப் பெற்றுள்ளது.

கோ.புஷ்பராஜ்
கோ.புஷ்பராஜ்

இதுகுறித்து ‘ஆலமரம்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோ.புஷ்பராஜ் கூறியதாவது: 2019-ல் 5 பேருடன் ‘ஆலமரம்’ அமைப்பைத் தொடங்கினோம். தற் போது, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள், தனியார், அரசுத் துறை அலுவலர்கள், காவல்துறையினர் உட்பட 200 பேர் உறுப் பினர்களாக உள்ளனர்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையிலும் மரக்கன்று நடும் பணி ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறும். ராம்கோ நிறுவனம் எங்களுக்கு இல வசமாக மரக்கன்றுகளை வழங்குகிறது. அதோடு, பிறந்தநாள், திருமணநாள் உள்ளிட்ட விசேஷ தினங்களில் பலர் மரக்கன்றுகளை வாங்கி எங்களிடம் வழங்குவர்.

விருதுநகர் அரசு மருத்துவ மனை வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரித்து வருகிறோம். அதோடு, வரலொட்டியில் 1,300 மரக் கன்றுகளும், தாதம்பட்டியில் 300 மரக்கன்றுகளும், வில்லிபத்திரியில் 300 மரக்கன்றுகளும் நட்டு வைத்து குறுங்காடுகள் அமைத்துள்ளோம்.

தாதம்பட்டி மற்றும் வில்லிபத்திரியில் இடத்தை சுத்தம் செய்யும் பணி மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி முடிந்ததும் அங்கு மேலும் தலா ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இதுவரை 3 ஆயிரம் மரக்கன்றுகளை நட்ட தோடு அவற்றை தொடர்ந்து முறையாக பராமரித்தும் வருகிறோம். 500 பனை விதை களையும் நடவு செய்துள்ளோம். தொடர்ந்து, 129-வது வாரமாக மரக்கன்றுகள் நட்டுள்ளோம்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகள், நகராட்சிகள், பேரூ ராட்சிகள் என அனைத்து பகுதியிலும் ‘ஆலமரம்’ அமைப்பைத் தொடங்கி ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒவ்வொரு வாரமும் தலா 10 மரக்கன்றுகள் நட வேண்டும். அவ்வாறு செய்தால் வாரம் சுமார் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட முடியும். 10 ஆண்டுகளில் விருதுநகர் மாவட்டத்தை சோலையாகவும், பசுமை யாகவும் மாற்ற முடியும். இதுதான் ஆலமரம் அமைப்பின் குறிக்கோள். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in