

ராமநாதபுரம்: தொண்டி அருகே காரங்காடு மாங்குரோவ் காட்டுப் பகுதியில், அரியவகை இனமான மீன் பிடி பூனையைக் கண்ட வனத்துறையினர், அது குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மாங்குரோவ் காடுகளிலும், ஈர நிலங்களிலும் வாழக்கூடியது மீன்பிடி பூனை (பிஷிங் கேட்). இப்பூனை தண்ணீரில் நீந்தி மீன்களை வேட்டையாடி உண்ணும் பழக்க முடையவை. இப்பூனை மேற்கு வங்கத்தின் மாநில விலங்காகும். இது, நம் நாட்டில் சுந்தரவன காடுகளில் அதிகம் காணப்படு கிறது. 2016-ம் ஆண்டில் இப்பூனை அரியவகை காட்டு விலங்கினமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
சில நாட்களுக்கு முன், ராமநாத புரம் மாவட்டம், தொண்டி அருகே காரங்காடு மாங்குரோவ் காடு உள்ள கடல் நீரில் நீந்தி வந்த இப்பூனையை, ரோந்து சென்ற வனத்துறையினர் கண்டனர். இவ்வகை பூனை இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்ட தில்லை என்றும், இது மீன்பிடி பூனை தானா எனவும் ஆய்வு செய்து வருவதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.