Published : 30 Jun 2023 06:56 PM
Last Updated : 30 Jun 2023 06:56 PM

தமிழகத்தில் 2 ஆண்டுகளில் 3585 ஹெக்டேர் பரப்பளவில் 24 புதிய காப்புக் காடுகள் அறிவிப்பு

காப்புக் காடுகள்

சென்னை: தமிழகத்தில் கடந்த 2 நாடுகளில் 3585 ஹெக்டேர் பரப்பளவில் 24 புதிய காப்புக் காடுகள் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாக வனத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த இரண்டு ஆண்டுகளில், அதாவது 2021-2023-இல் தமிழ்நாடு வனச்சட்டம், 1882-இன் பிரிவு 16-ன் கீழ் திண்டுக்கல், தருமபுரி, மதுரை, கள்ளக்குறிச்சி, தேனி, சிவகங்கை, நாமக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் 3585.38.56 ஹெக்டேர் அளவிற்கு கீழ்காணும் 24 புதிய காப்புக் காடுகளாக தமிழ்நாடு அரசு அறிவிக்கை செய்துள்ளது.

இதன்படி, திண்டுக்கலில் 1374.35.06, மதுரையில் 58.12, தேனியில் 35.95, சிவகங்கையில் 166.62, தருமபுரியில் 106.01, கள்ளக்குறிச்சியில் 1138.95, நாமக்கலில் 703.36, நீலகிரியில் 2.02 என்று மொத்தம் 3585 ஹெக்டேர் பரப்பளவில் 24 புதிய காப்புக் காடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

காடு மற்றும் மரங்களின் பரப்பை அதிகரிக்கும் உன்னத இலக்கை அடையும் வகையில் எதிர்வரும் 10 ஆண்டுகளில் 265 கோடி மரங்களை நடவு செய்து மாநிலத்தின் புவியியல் வனம் மற்றும் மரங்களின் பரப்பளவை 33% ஆக்கும் வகையில் வனப்பகுதிக்கு வெளியே உள்ள தரங்குன்றிய வன நிலப்பரப்பு மற்றும் பிற தரங்குன்றிய நிலப்பரப்புகளை மீட்டெடுக்கும் பொருட்டு 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பசுமைத் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டது.

தமிழக அரசு பல பகுதிகளை “காப்புக் காடுகள்” என்ற பிரிவின் கீழ் காப்புக்காடுகளாக அறிவிக்கை செய்யும் பட்சத்தில் வனப் பாதுகாப்புச் சட்டம் 1980-இன் படி நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். வனப் பாதுகாப்புச் சட்டம் 1980-இன் பயன்பாடு, அரசுப் பதிவுகளில் காடுகளாகப் பதிவு செய்யப்பட்ட பகுதிகளுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x