சுற்றுலா பயணிகள் வழங்கும் உணவுக்காக வால்பாறை சாலையில் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் குரங்குகள்

சுற்றுலா பயணிகள் வழங்கும் உணவுக்காக வால்பாறை சாலையில் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் குரங்குகள்
Updated on
1 min read

வால்பாறை: கோவை மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து வால்பாறை மலைப்பாதைகளில் ஏராளமான குரங்குகளும், வரையாடுகளும் சுற்றித்திரிகின்றன. கவியருவி பகுதியிலும், அட்டகட்டி வரை உள்ள மலைப்பாதைகளிலும் குரங்குகள் உலா வருவதால், வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை கவனமாக இயக்குவதுடன் குரங்குகளுக்கு உணவு அளிக்கக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

ஆனால், சாலையிலேயே உணவுப் பண்டங்களை வீசிச் செல்வதையும், வன விலங்குகளுக்கு உணவுகள் வழங்குவதையும் சுற்றுலா பயணிகள் வழக்கமாக கொண்டுள்ளதால், குரங்குகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் பரிதாப நிலை தொடர்கிறது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் சிலர் வாழைப்பழம், ஆரஞ்சு உள்ளிட்ட பழவகைகளை குரங்குகளுக்கு உணவாக சாலையிலேயே வீசிச்செல்கின்றனர். அவற்றை எடுக்க வரும் குரங்குகள் அவ்வழியாக வரும் வாகனங்களில் அடிபடும் ஆபத்து உள்ளது.

எனவே சுற்றுலா பயணிகள் மலைப்பாதையில் குரங்குகளுக்கு உணவளிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் வாகனங்களை சாலையில் நிறுத்தி வனவிலங்குகளுடன் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். மீறினால் வன உயிரின பாதுகாப்புச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in