Published : 11 Mar 2021 02:20 PM
Last Updated : 11 Mar 2021 02:20 PM

167 - மன்னார்குடி

மன்னார்குடி நகராட்சி அலுவலகம்.

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
சிவா. ராஜமாணிக்கம் அதிமுக
டி.ஆர்.பி.ராஜா திமுக
காமராஜ் அமமுக
அன்பானந்தம் மக்கள் நீதி மய்யம்
இரா.அரவிந்தன் நாம் தமிழர் கட்சி

மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதிமக்கள் மிகுந்த அரசியல் விழிப்புணர்ச்சி கொண்டவர்கள். இதற்கு காரணம் திராவிடம், தேசியம், பொதுவுடமை கொள்கைவாதிகள் நிறைந்த தொகுதியாகும். 155 ஆண்டுகால பழைமை வாய்ந்த நகராட்சி இந்த ஊரின் பெருமைக்கு அடிப்படையாகவுள்ளது. சமீபத்தில் அமெரிக்க துணை அதிபராக வெற்றிபெற்றுள்ள கமலா ஹாரிஸ் மன்னார்குடிக்கு அருகில் துளசேந்திரபுரத்தை சேர்ந்தவர் என்ற சமீபத்திய தகவல் இத்தொகுதிக்கு மேலும் சிறப்பை சேர்க்கின்றது.

மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் 3 முறையும், திமுக 4 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 5 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது கடந்த 2011 மற்றும் 2016 தேர்தலில் டிஆர்பி.ராஜா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவுள்ளார். கடந்த 2 முறையும் திமுக வெற்றி பெற்றாலும் எதிர்கட்சியாக இருப்பதால் தொகுதி மக்களுக்கு ஏதும் செய்ய முடியவில்லை என்று திமுகவினரும், ஏதும் செய்யவில்லையே என்று பொதுமக்களும் பரஸ்பரம் கருத்து பரிமாரிக்கொள்ளும் நிலையே உள்ளது.

மன்னார்குடியை எப்படியாவது மாவட்ட தலைநகரமாக்க வேண்டும் என்பது பிராதன கோரிக்கையாகவுள்ளது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்ட ஊர்களில் மயிலாடுதுறை மாவட்ட தலைநகராமாக்கப்பட்ட பின்னர் இந்த கோரிக்கை வலுவடைந்துள்ளது. நீடாமங்கலம் மேம்பாலத்தை கட்ட வேண்டும். மன்னார்குடி நகராட்சிப் பகுதியை விரிவு படுத்த வேண்டும். மன்னார்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டவேண்டும், வேளாண்கல்லூரி மற்றும் வேளாண் பொறியியல் கல்லூரி தொடங்கவேண்டும். பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதையொட்டி வேளாண் கருவிகள் மற்றும் நவீன உபகரணங்கள் தயாரிப்பதற்கு உற்பத்தி மையம் அமைக்கவேண்டும், பாமணியில் மூடப்பட்டுள்ள எப்சிஐ நெல் அறவை மில் திறக்கப்பட வேண்டும். பாமணி உர தொழிற்சாலையை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பிரதானமாகவுள்ளது.

கடந்த 2016 தேர்தலில் வெற்றிபெற்ற டிஆர்பி.ராஜா 9937 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். டிஆர்பி.ராஜா பெற்ற வாக்குகள் 91,137 அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எஸ்.காமராஜ் 81200 வாக்குகள் பெற்றார்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

நீடாமங்கலம் வட்டம் (பகுதி)

கோவில்வெண்ணி, நகர், காட்டுசன்னாவூர், பன்னிமங்கலம், சித்தமல்லி மேல்பாதி, ஆதனூர், முன்னாவல்கோட்டை, முன்னாவல்கோட்டை (பகுதி), செட்டிசத்திரம், புள்ளவராயன்குடிகாடு, ராயபுரம், காளாச்சேரி, பரப்பனாமேடு, பூவனூர், வையகளத்தூர், ஒளிமதி, ஒட்டகுடி, பழங்களத்தூர், ஹனுமந்தபுரம், பெரம்பூர், ரிஷியூர், அதங்குடி, வெள்ளகுடி, பொதக்குடி, கீழாளவந்தசேரி, மேலாளவந்தசேரி, அன்னவாசல், அன்னவாசல் தென்பகுதி, புதுதேவங்குடி, அரிச்சபுரம், சித்தாம்பூர், சேகரை மற்றும் ஆய்குடி கிராமங்கள்,

நீடாமங்கலம் (பேரூராட்சி),

மன்னார்குடி வட்டம் (பகுதி)

கண்டமங்கலம், நலம்சேத்தி, நெம்மேலி (தலய மங்கலம் உள்வட்டம்), குறிச்சி, மூவர்கோட்டை, வடவூர் மேல்பாதி, வடுவூர் அக்ரஹாரம், வடுவூர் வடபாதி, எட மேலையூர்-மி,எட மேலையூர்-மிமி, எட மேலையூர்-மிமிமி, எட கீழையூர்-மி, எட கீழையூர்-மிமி,, பருத்திக்கோட்டை, களஞ்சிமேடு, வடக்காரவயல், பாமினி, கருணாவூர், சவளக்காரன், அரவத்தூர், ராஜாளிகுடிக்காடு, மூவாநல்லூர், கள்ளர் எம்பேதி, எடையர் எம்பேதி, மேலவாசல், குமாரபுரம், வடுவூர் தென்பாதி-மி, வடுவூர் தென்பாதி-மிமி, காரக்கோட்டை, பேரையூர்-மி, பேரையூர்-மிமி, பேரையூர்-மிமிமி, பேரையூர்-மிக்ஷி, அத்திக்கோட்டை, செருமங்கலம்-மி, செருமங்கலம்-மிமி, கரிக்கோட்டை, கோபிராளையம், ராமாபுரம், கைலாசநாதர்கோவில், முதல் சேத்தி, மூணாம்சேத்தி, மரவக்காடு, சேராங்குளம், அசேஷம், திருப்பாலக்குடி-மி, திருப்பாலக்குடி-மிமி, திருப்பாலக்குடி-மிமிமி, நெம்மேலி (உள்ளிக்கோட்டை உள்வட்டம்), கருவாக்குறிச்சி-மி, கருவாக்குறிச்சி-மிமி, தளிக்கோட்டை, மகாதேவப்பட்டிணம்-மி, மகாதேவப்பட்டிணம்-மிமி, உள்ளிக்கோட்டை-மி, உள்ளிக்கோட்டை-மிமி, கூப்பாச்சிகோட்டை, ராஜசம்பாள்புரம், பரவாக்கோட்டை-மி, பரவாக்கோட்டை-மிமி, பைங்காநாடு, துளசேந்திரபுரம், சுந்தரக்கோட்டை, எடையர் நத்தம், தென்பாதி, வடபாதி, ஏதக்குடி, தலையாமங்கலம், ராதாநரசிம்மபுரம், வல்லூர், திருமக்கோட்டை-மி, திருமக்கோட்டை-மிமி, மேலநத்தம், தென்பரை, பாளையகோட்டை, பரசபுரம் மற்றும் எளவனூர் கிராமங்கள், மன்னார்குடி (நகராட்சி).

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,25,304

பெண்

1,33,118

மூன்றாம் பாலினத்தவர்

11

மொத்த வாக்காளர்கள்

2,58,433

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

எஸ்.காமராஜ்

அதிமுக

2

டிஆர்பி.ராஜா

திமுக

3

ஏ.முருகையன்பாபு

தேமுதிக

4

எஸ்.பாலசுப்பிரமணியன்

பாமக

5

பி. சிவகுமார்

பாஜக

6

இ.பாலமுருகன்

நாம் தமிழர்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )

ஆண்டு

வெற்றிபெற்றவர்

கட்சி

1952

சுப்பையா மற்றும் எம்.கந்தசாமி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

1957

தி.எஸ்.சுவாமிநாதஉடையார்

இந்திய தேசிய காங்கிரஸ்

1962

தி.எஸ்.சுவாமிநாதஉடையார்

இந்திய தேசிய காங்கிரஸ்

1967

தி.எஸ்.சுவாமிநாதஉடையார்

இந்திய தேசிய காங்கிரஸ்

1971

கே.பாலகிருஷ்ணன்

திராவிட முன்னேற்றக் கழகம்

1977

மு.அம்பிகாபதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

1980

மு.அம்பிகாபதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

1984

எஸ்.ஞானசுந்தரம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

1989

கே.ராமச்சந்திரன்

திராவிட முன்னேற்றக் கழகம்

1991

கே.சீனிவாசன்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

1996

வை.சிவபுண்ணியம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

2001

வை.சிவபுண்ணியம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

2006

வை.சிவபுண்ணியம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

2011

டி.ஆர்.பி.ராஜா

திராவிட முன்னேற்றக் கழகம்

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

V. சிவபுண்ணியம்

சி.பி.ஐ

68144

2

R. காமராஜ்

அ.தி.மு.க

61186

3

N. முத்தையா

தே.மு.தி.க

4500

4

K. கல்யாணராமன்

பி.ஜே.பி

1894

5

V. முத்துலிங்கம்

சுயேச்சை

836

6

A. நாகூர்கனி

சுயேச்சை

685

7

K. குருசாமி

சுயேச்சை

653

137898

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

T.R.B. ராஜா

தி.மு.க

81320

2

ராஜாமாணிக்கம் சிவா

அ.தி.மு.க

77338

3

M. ஜெயசந்திரன்

சுயேச்சை

1863

4

P. வாசுதேவன்

பாஜக

1435

5

K. வெற்றிவேல்

சுயேச்சை

924

6

D. அன்புதாஸ்

பகுஜன் சமாஜ் கட்சி

795

7

L. வெங்கடாசலம்

சுயேச்சை

747

8

A.P.A. அப்துல் சமது

சுயேட்சை

540

9

M. லட்சுமி

சுயேச்சை

468

10

K. அரேக்கியசாமி

ஐஜேகே

335

11

R. பிச்சைகண்ணு

சுயேச்சை

184

12

K.S. ராஜா

சுயேச்சை

137

13

S. ராசா

சுயேட்சை

100

166186

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x