Published : 11 Mar 2021 02:14 PM
Last Updated : 11 Mar 2021 02:14 PM

65 - கலசப்பாக்கம்

கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள தொன்மையான பருவதமலை கோயில்

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
பன்னீர்செல்வம் அதிமுக
பெ.சு.தி.சரவணன் திமுக
எம்.நேரு அமமுக
எம்.எஸ்.ராஜேந்திரன் மக்கள் நீதி மய்யம்
ஏ.பாலாஜி நாம் தமிழர் கட்சி

கலசப்பாக்கம் அடுத்த தென் மகாதேவமங்கலம் கிராமத்தில் தென் கயிலாயம் என்றழைக்கப்படும் தொன்மையான பருவதமலை உள்ளது. 4,560 அடி உயர மலை உச்சியில், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பவுர்ணமி நாளில் 26 கி.மீ., தொலைவு உள்ள பருவதமலையை பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்.

வில்வாரணியில் முருகன் கோயில், படைவீட்டில் பிரசித்தி பெற்ற ரேணுகாம்பாள் கோயில், புதூர் கிராமத்தில் மாரியம்மன் கோயில் மற்றும் பூண்டி மகான் ஆலயம் சிறப்பு பெற்றது. உடையார், வன்னியர், ஆதிதிராவிடர், பழங்குடி சமூகத்தினர் அதிகளவில் வசிக்கின்றனர். விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. நெல் மற்றும் கரும்பு அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த தொகுதியில், ஜவ்வாது மலையின் ஒரு பகுதி அமைந்துள்ளது. அங்கு சாமை அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

போளூர் வட்டம் (பகுதி)

அமிர்தி, நீப்பளாம்பட்டு, கல்பட்டு, இரும்பிலி, குப்பம், கல்குப்பம், வாழியூர், காளசமுத்திரம், அனந்தபுரம், காணமலை, நம்மியம்பட்டு, மண்டபாறை, வீரப்பனூர், புதுப்பட்டு, எரியூர், கீழ்கணவாயூர், புளியங்குப்பம், படவேடு, செண்பகத்தோப்பு, சீங்காடு, குட்டக்கரை, ஓடமங்கலம், கோவிலூர், பட்டார்வைக்காடு, தும்பக்காடு, கிடாம்பாளையம், கெங்கவரம், மேல்சிப்பிலி, எருமையனூர், கீழ்தட்டியாப்பட்டு, மேல்சோழங்குப்பம், வடகரைநம்மியந்தல், சீனந்தல், தேவராயன்பாளையம், காந்தபாளையம், ஆதமங்கலம், கேட்ட்வரம்பாளையம், சேங்கபுத்தேரி, மேலாரணி, ஆனைவாடி, காப்பலூர், வன்னியனூர், கட்சிரிமங்கலம், மேல்வில்வராயநல்லூர், எர்ணமங்கலம், சிறுவள்ளூர், அருணகிரிமங்கலம், கெங்கலாமகாதேவி, நல்லான்பிள்ளைபெற்றாள், வீரளூர், மட்டவெட்டு, மேல்பாலூர், கீழ்பாலூர், கடலாடி, தென்மாதிமங்கலம், பாணாம்பட்டு, பூண்டி, பில்லூர், கலசபாக்கம், தென்பள்ளிப்பட்டு, விண்ணுவம்பட்டு, காலூர், பத்தியவாடி, காம்பட்டு, அணியாலை, லாடவரம், கெங்கநல்லூர், அலங்காரமங்கலம், பாடகம், சீட்டம்பட்டு மற்றும் படியம்புத்தூர் கிராமங்கள்.

செங்கம் வட்டம் (பகுதி)

வீரானந்தல், முன்னுரமங்கலம், புதூஉர்செங்கம், உண்ணாமலைபாளையம், காரப்பட்டு, புதுப்பட்டு, கொரட்டாம்பட்டு, காஞ்சி, அரிதாரிமங்கலம், தாமரைப்பாக்கம், நயம்பாடி, மஷார், கல்லரப்பாடி, ஏந்தல், நம்மியந்தல், ஆலத்தூர், ஓரவந்தவாடி, நந்திமங்கலம், பனைஓலைப்பாடி, பெரியேரி, கொட்டகுளம், முத்தனூர், தொரப்பாடி, நரசிங்கநல்லூர், படிஅக்ரஹாரம், அல்லியேந்தல், ஜப்திகாரியேந்தல், கெங்கம்பட்டு, கீழ்படூர், வாய்விடந்தாங்கல், மேல்படுர், குலால்பாடி, நத்தவாடி, வடமாத்தூர், மேல்நாச்சிப்பட்டு, சேந்தமங்கலம், அன்னந்தல், மேல்ப்புஞ்சை, வாசுதேவம்பட்டு, எறையூர் மற்றும் மேல்மடியனூர் கிராமங்கள்,

புதுப்பாளையம் (பேரூராட்சி).

தொகுதி மக்கள் கோரிக்கை

குடிநீர் பிரச்சினையை தீர்க்க மிருகண்டா அணையை தூர் வாரி கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாகும்.

புதுப்பாளையம் பகுதியில் பூக்கள் சாகுபடி செய்யப்படுவதால், வாசனை திரவியம் (செண்ட்) தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்க வேண்டும். பருவதமலையை சுற்றுலா தலமாக அறிவித்து, மலை மீதுள்ள சிவன் கோயிலுக்கு பக்தர்கள் எளிதாக சென்று வர பாதை வசதி அமைத்துக்கொடுக்க வேண்டும். கிரிவல பாதை அமைத்துக் கொடுத்து மின்விளக்கு வசதியை செய்துதர வேண்டும்.

ஜவ்வாது மலையில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சிக்கு பாதுகாப்பான பயணத்தை சுற்றுலாவாசிகள் மேற்கொள்ள, தகுந்த நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டும். கலப்பாக்கம் தொகுதியில் அரசு மகளிர் கலைக் கல்லூரியை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது.

கலசப்பாக்கம் சட்டபேரவை தொகுதியில் கடந்த 1967-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நடைபெற்ற 12 தேர்தலில் திமுக 5 முறையும், அதிமுக 5 முறையும் மற்றும் காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 2016-ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த பன்னீர்செல்வம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமாரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,19,195

பெண்

1,22,774

மூன்றாம் பாலினத்தவர்

12

மொத்த வாக்காளர்கள்

2,41,981

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

வி.பன்னீர்செல்வம்

அதிமுக

2

ஜி.குமார்

காங்கிரஸ்

3

எம்.நேரு

தேமுதிக

4

இரா.காளிதாஸ்

பாமக

5

கே.முருகதாஸ்

ஜஜேகே

6

பாலாஜி

நாம் தமிழர்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

1951

நடராச முதலியார்

சுயேச்சை

16184

1967

எஸ். முருகையன்

காங்கிரஸ்

32697

1971

எஸ். முருகையன்

திமுக

42893

1977

பி. எஸ். திருவேங்கடம்

திமுக

26841

1980

பி. எச். திருவேங்கடம்

திமுக

44923

1984

எம். பாண்டுரங்கன்

அதிமுக

54969

1989

பி. எஸ். திருவேங்கடம்

திமுக

47535

1991

எம். சுந்தரசாமி

காங்கிரஸ்

65096

1996

பி. எஸ். திருவேங்கடம்

திமுக

72177

2001

எஸ். இராமச்சந்திரன்

அதிமுக

75880

2006

அக்ரி. எஸ். கிருஷ்ணமூர்த்தி

அதிமுக

68586

2011

அக்ரி. எஸ். கிருஷ்ணமூர்த்தி

அதிமுக

91833

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

1951

பெரியசாமி கவுண்டர்

காங்கிரஸ்

12460

1967

எம். சுந்தரேசன்

திமுக

20554

1971

எம். சுந்தரசாமி

ஸ்தாபன காங்கிரஸ்

29960

1977

எஸ். சுந்தரேச உடையார்

அதிமுக

25298

1980

சி. என். விசுவநாதன்

அதிமுக

32972

1984

பி. எஸ். திருவேங்கடம்

திமுக

35303

1989

எஸ். கிருஷ்ணமூர்த்தி

அதிமுக (ஜெ)

25840

1991

பி. எஸ். திருவேங்கடம்

திமுக

32152

1996

எம். சுந்தரசாமி

காங்கிரஸ்

37647

2001

பி. எஸ். திருவேங்கடம்

திமுக

46990

2006

ஆர். காளிதாசு

பாமக

60920

2011

சி.எஸ் விஜயகுமார்

காங்கிரஸ்

53599

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

அக்ரி. எஸ். கிருஷ்ணமூர்த்த

அ.தி.மு.க

68586

2

R. காளிதாஸ்

பாமக

60920

3

L. சங்கர்

தே.மு.தி.க

5069

4

M.ஜெகதீஸ்வரன்

சுயேச்சை

1902

5

V. ராமகிருஷ்ணன்

பி.ஜே.பி

1818

6

S. ஆறுமுகம்

சுயேச்சை

1103

7

S. செல்வராஜ்

சுயேச்சை

978

8

V. சேகர்

சுயேச்சை

944

9

M. விஜயாலக்ஷ்மி

எஸ்.பி

542

10

B. கோதண்டபாணி

சுயேச்சை

330

142192

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

அக்ரி எஸ் கிருஷ்ணமூர்த்தி

அ.தி.மு.க

91833

2

P.S. விஜயகுமார்

காங்கிரஸ்

53599

3

A. விஜயகுமார்

சுயேட்சை

2615

4

S. தேவேந்திரன்

பி.எஸ்.பி

1656

5

M.S. ராஜேந்திரன்

ஐ.ஜே.கே

1329

6

K. ரமேஷ்

பி.ஜே.பி

1323

7

S. விஜயகாந்த்

சுயேச்சை

783

8

V. பொய்யாமொழி

சுயேட்சை

532

9

M. எழுமலை

சுயேச்சை

456

10

K. சந்தரசேகரன்

சுயேச்சை

451

11

V. மார்தால்

சுயேச்சை

425

12

M. கஜேந்திரன்

சுயேச்சை

399

13

K. பழனி

சுயேச்சை

389

155790

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x