Published : 11 Mar 2021 02:14 PM
Last Updated : 11 Mar 2021 02:14 PM

62 - செங்கம் (தனி)

சாத்தனூர் அணை

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
நைனாக்கண்ணு அதிமுக
மு.பெ.கிரி திமுக
எஸ்.அன்பு அமமுக
எஸ்.சுகன்ராஜ் மக்கள் நீதி மய்யம்
சீ.வெண்ணிலா நாம் தமிழர் கட்சி

திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்டங்களில் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதற்காக திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அணை அமைந்துள்ளது. மேலும், ஜவ்வாதுமலையில் உற்பத்தியாகும் தண்ணீரை சேமிக்க, குப்பநத்தம் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் செய்யாற்றில் பாய்ந்தோடும். செங்கத்தில் மிக பழமையான ரிஷபேஸ்வரர் கோயில், வேணுகோபால பார்த்தசாரதி கோயில், தாழைமடுவு காளியம்மன் கோயில் அமைந்துள்ளது.

விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். கறவை மாடு மூலம் பால் உற்பத்தி விவசாயிகளும் வசிக்கின்றனர். வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர்கள் எண்ணிக்கை அதிகம். செங்கம் நகரில் வியாபாரிகள் உள்ளனர். நெல், கரும்பு, சிறுதானியங்கள், மலர்கள் மற்றும் தோட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

செங்கம் வட்டம் (பகுதி)

குப்பநத்தம், பரமனந்தல், தீத்தாண்டப்பட்டு, வளயெம்பட்டு, புதுப்பட்டு, ஆலப்புத்தூர், குயிலம், அன்வராபாத், செ.நாச்சிப்பட்டு, காயம்பட்டு, சென்னசமுத்திரம், பக்கிரிப்பாளையம், அரசன்கன்னி, மேல்செங்கம், மேல்செங்கம் (ஆர்.எப்), அந்தனூர், மேல்புழதியூர், பெரும்பட்டம், மண்மலை, கரியமங்கலம், பிஞ்சூர், வேடங்குப்பம், மேல்பள்ளிப்பட்டு, மேல்வணக்கம்பாடி, ஆனந்தவாடி (ஆர்.எப்), ஆனந்தவாடி, கட்டமடுவு, நரடாப்பட்டு, மேல்ராவந்தவாடி, கரியமலைப்பாடி, ஆணடிப்பட்டி, தம்புநாய்க்கன்பட்டி, மண்ணாண்டிப்பட்டி, பொரசப்பட்டு, தாழையூத்து, அரட்டவாடி, அரியாகுஞ்சூர், சொரப்பனந்தல், மேல்பொஎன்னாத்தூர், உச்சிமலைக்குப்பம், விண்ணவனுர், பாய்ச்சல், நல்லூர், கண்ணக்குருக்கை, சின்னகோளப்பாடி, பாலியப்பட்டு, அஸ்வனகாசுருணை, பெரியகோளப்பாடி, பீமானந்தல், மேல்கரிப்பூர், கோழுந்தம்பட்டு, சாத்தனூர், சாத்தனூர் அணை, நீப்பத்துறை, வெள்ளாலம்பட்டி, இளங்குன்னி, குருமப்பட்டி, கல்லடாவி, மணிக்கல், புளியம்பட்டி, கருங்காலிப்பாடிபட்டி, வேப்பூர்செக்கடி, வீரணம், தரடாப்பட்டு, கணக்கந்தல், நெடுங்கவாடி, செ.அகரம், பெரும்பாக்கம், சேரந்தாங்கல், கீழ்வணக்கம்பாடி, தண்டராம்பட்டு, கீழ்ராவந்தவாடி, ஓலகலப்பாடி, கொலமஞ்சனூர், மலமஞ்சனூர் டி.வேளுர், செ.ஆண்டாப்பட்டு, தானிப்பாடி, சின்னியம்பேட்டை, ரெட்டியாபாளையம், மலையனூர்செக்கடி, கீழ்பாச்சார், மேல்பாச்சார், மோத்தல்க்கல், மேல்முத்தனூர், ஆத்திப்பாடி, புதுர்செக்கடி, ஜம்போடை, போந்தை, நாராயணக்குப்பம், அப்புநாய்க்கன்பாளையம், திருவிடத்தனூர், எடத்தனூர், தென்முடியனூர், அகரம்பள்ளிப்பட்டு, அல்லப்பனூர், ராயண்டபுரம், புத்தூர்செக்கடி, பீமரப்பட்டி, மேல்மலச்சி, அக்கரப்பட்டி, செம்மம்பட்டி, பெருங்கொளத்தூர், தொண்டமானூர், சதக்குப்பம், உண்ணாமலைப்பாளையம், வாழவச்சனூர், கோட்டையூர், பெலாமரத்தூர், வண்ணாங்குட்டை, பண்டீரேவ், படபஞ்சமரத்தூர், மேல்சிலம்படி, கீழ்தட்டீயாப்பட்டு, மேல்தட்டீயாப்பட்டு, புலியூர், ஊர்கவுண்டனூர், கிளையூர், எருகம்பட்டு நெல்லிவாய், அத்திப்பட்டு, பெருமுட்டம், கல்லாத்தூர், மேல்பட்டு, சின்னகீழ்பட்டு மற்றும் கீழ்பட்டு கிராமங்கள், செங்கம் (பேரூராட்சி).

தொகுதி கோரிக்கைகள்

மேல்செங்கத்தில் 11 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட மத்திய மாநில அரசுகளின் விதைப்பண்ணை முடங்கி கிடக்கிறது. அந்த இடத்தில் வேளாண் பல்கலைக் கழக ஆராய்ச்சி நிலையம் தொடங்க வேண்டும் என்பது மக்களின் பல ஆண்டு கோரிக்கையாகும். சாத்தனூர் அணை மற்றும் குப்பனத்தம் அணையை தூர் வார வேண்டும். மேலும், குப்பனத்தம் அணையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். செங்கம் பேருந்து நிலையத்தின் தரத்தை மேம்படுத்த வேண்டும். அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும். செங்கம் நகரில் சுற்று வட்ட பாதை அமைக்க வேண்டும். திருவண்ணாமலை – ஜோலார்பேட்டை (செங்கம் வழியாக) ரயில் பாதை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். புதுச்சேரி – கிருஷ்ணகிரி இடையே 4 வழிச் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும். வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும். மேலும், 50 ஆண்டுகளாக தனி தொகுதியாக உள்ள செங்கம் தொகுதியை பொது தொகுதியாக மாற்ற வேண்டும்.

செங்கம் சட்டபேரவை தொகுதியில் கடந்த 1952-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடைபெற்ற 15 தேர்தலில் திமுக 5 முறையும், அதிமுக 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும், பொது நலக்கட்சி, தேமுதிக மற்றும் ஜனதா கட்சி தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 2016-ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் தினகரனை வீழ்த்தி திமுகவைச் சேர்ந்த மு.பெ.கிரி வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,35,563

பெண்

1,37,760

மூன்றாம் பாலினத்தவர்

10

மொத்த வாக்காளர்கள்

2,73,333

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

எம்.தினகரன்

அதிமுக

2

மு.பெ.கிரி

தி.மு.க

3

அ.கலையரசி

தேமுதிக

4

சி.முருகன்

பாமக

5

வ.கருப்பன்

பாஜக

6

சீ.வெண்ணிலா

நாம் தமிழர்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

1951

இராமசாமி கவுண்டர்

பொது நலக்கட்சி

13413

1957

டி. காரிய கவுண்டர்

காங்கிரஸ்

20079

1962

சி. கே. சின்னராஜி கவுண்டர்

திமுக

34374

1967

பி. எஸ். சந்தானம்

திமுக

29828

1971

சி. பாண்டுரங்கம்

திமுக

32260

1977

டி. சாமிகண்ணு

அதிமுக

22789

1980

டி. சாமிகண்ணு

அதிமுக

26823

1984

டி. சாமிகண்ணு

அதிமுக

45770

1989

எம். சேது

ஜனதா கட்சி

26256

1991

பி. வீரபாண்டியன்

அதிமுக

54611

1996

கே. வி. நன்னன்

திமுக

58958

2001

போளூர் வரதன்

காங்கிரஸ்

54145

2006

போளூர் வரதன்

காங்கிரஸ்

53366

2011

டி.சுரேஷ் குமார்

தேமுதிக

83722

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

1951

முத்துகிருசுண செட்டியார்

காங்கிரஸ்

8804

1957

ஆர். வெங்கடாசல முதலியார்

சுயேச்சை

12806

1962

ஒய். சண்முகம்

காங்கிரஸ்

25008

1967

எ. ஆறுமுகம்

காங்கிரசு

18773

1971

எ. ஆறுமுகம்

ஸ்தாபன காங்கிரஸ்

16705

1977

என். பூ சங்கர்

திமுக

11877

1980

எ. ஆறுமுகம்

காங்கிரஸ்

25987

1984

பி. அன்பழகன்

ஜனதா கட்சி

21039

1989

பி. வீரபாண்டியன்

அதிமுக (ஜெ)

22344

1991

கே. முனுசாமி

ஜனதா தளம்

16994

1996

சி. கே. தமிழரசன்

அதிமுக

32325

2001

ஆர். சாமளா

மக்கள் தமிழ் தேசம்

41868

2006

பி. சக்திவேல்

விடுதலை சிறுத்தைகள் கட்சி

43166

2011

செல்வ பெருந்தகை

காங்கிரஸ்

72225

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

M. போளூர் வரதன்

காங்கிரஸ்

53366

2

P. சக்திவேல்

வி.சி.கே

43166

3

T. சுரேஷ்

தே.மு.தி.க

15808

4

V. திருப்பதி

பி.ஜே.பி

4009

5

R. ஜாகநாதன்

பி.எஸ்.பி

2631

6

V. ராமசாமி

சுயேச்சை

2576

7

R. ஷாமலா

எஸ்.பி

1792

8

B. சரோஜா

சுயேச்சை

1494

124842

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

T. சுரேஷ் குமார்

தே.மு.தி.க

83722

2

K. செல்வபெருந்தகை

காங்கிரஸ்

72225

3

R. சுரேஷ் குமார்

சுயேச்சை

8543

4

A. ஜெயராமன்

பி.ஜே.பி

4465

5

R. குமார்

சுயேச்சை

2511

6

M. மணி

ஐ.ஜே.கே

1670

7

V. சுப்பிரமணியன்

பி.எஸ்.பி

1636

8

K. சங்கர்

சுயேச்சை

1364

9

T. சுரேஷ்

சுயேச்சை

1347

10

P.G. அன்பழகன்

சுயேச்சை

842

178325

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x