Published : 11 Mar 2021 14:18 pm

Updated : 03 Apr 2021 09:37 am

 

Published : 11 Mar 2021 02:18 PM
Last Updated : 03 Apr 2021 09:37 AM

5 - பூந்தமல்லி (தனி)

5
பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயில்

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
ராஜமன்னார் (பாமக) அதிமுக
ஆ.கிருஷ்ணசாமி திமுக
ஏழுமலை அமமுக
ரேவதி நாகராஜன் மக்கள் நீதி மய்யம்
வி.மணிமேகலை நாம் தமிழர் கட்சி


திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையை ஒட்டியுள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்றான பூந்தமல்லி தொகுதியில் பூந்தமல்லி வட்டத்தின் பெரும்பகுதிகள், திருவள்ளூர் வட்டத்தின் ஒரு பகுதி அடங்கியுள்ளன. இத்தொகுதியின் எல்லைகளாக ஆவடி, மதுரவாயல், மாதவரம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகள் உள்ளன.

பூந்தமல்லி தொகுதியில், கடந்த நவம்பர் (2020) 16-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் விவரங்களின்படி, ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 194 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 220 பெண் வாக்காளர்கள், 50 இதர வாக்காளர்கள் என மொத்தம் 3 லட்சத்து 45 ஆயிரத்து 464 வாக்காளர்கள் உள்ளனர்.

பிரசித்திப் பெற்ற பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயில் மற்றும் திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோயில்கள், வெடி குண்டு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் மற்றும் திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டை மற்றும் தனியார் மதுபான தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள் இத்தொகுதியில் அமைந்துள்ளன.

நெல் மற்றும் பூக்கள், காய்கறி சாகுபடி என தொடரும் விவசாயம் பூந்தமல்லி தொகுதியின் பிரதான தொழிலாக விளங்குகிறது.இத்தொகுதியில், தலித், வன்னியர் சமூகத்தினர் கணிசமாக வசிக்கின்றனர்.

சென்னையிலிருந்து, வடமாவட்டங்கள், கர்நாடகா, ஆந்திர மாநில பகுதிகளுக்கு செல்லும் வழியில் உள்ள பூந்தமல்லி பஸ் நிலையப் பகுதியில் எந்நேரமும் தொடரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவேண்டும், பூந்தமல்லி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தவேண்டும், பூந்தமல்லியில் அரசு கலைக் கல்லூரி, தாமரைப்பாக்கத்தில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நீண்ட காலமாக வைத்து வருகின்றனர் பூந்தமல்லி தொகுதி வாசிகள்.

இத்தொகுதியில், கடந்த 1977 முதல் 2019 வரை நடந்த 11 தேர்தல்களில் (ஒரு இடைத்தேர்தல் உட்பட) 4 முறை திமுகவும், 3 முறை காங்கிரஸும், 2 முறை அதிமுகவும், ஒரு தாமாகவும், ஒரு முறை பாமகவும் வெற்றி பெற்றுள்ளன. இதில், 2019-ல் நடந்த இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 984 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜி. வைத்தியநாதன் 76 ஆயிரத்து, 355 வாக்குகள் பெற்று, தோல்வியடைந்தார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,70,194

பெண்

1,75,220

மூன்றாம் பாலினித்தவர்

50

மொத்த வாக்காளர்கள்

3,45,464

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

டி.எ.ஏழுமலை

அதிமுக

2

இ.பரந்தாமன்

திமுக அணி

3

து.கந்தன்

மதிமுக

4

சி.பார்த்தசாரதி

பாமக

5

அ.அமர்நாத்

பாஜக

6

அ.பொன்னரசு

நாம் தமிழர்

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

அரும்பாக்கம், திருக்கனன்சேரி, வீளாம்பாக்கம், கெருகம்பூண்டி, செம்பேடு, வெங்கல், வெள்ளியூர், அம்மணம்பாக்கம், அகரம், சேத்துபாக்கம், குருவாயல், அரக்கம்பட்டு, சிங்கிலிகுப்பம், ஆயலசேரி, புதுக்குப்பம், கோடுவெளி, காரணை, மாகரல், தாமரைப்பாக்கம், மேலக்கொண்டையூர், வதட்டூர், கரிக்கலவாக்கம், விஷ்ணுவாக்கம், கீழனூர், மேலானூர், ஒத்திக்காடு, புன்னப்பாக்கம், புல்லரம்பாக்கம், ஈக்காடு, கல்யாண குப்பம், சிட்டத்தூர், பேரத்தூர், அயலூர், புன்னப்பட்டு, சிவன்வாயல், நல்லாங்காவனூர், புலியூர், பாக்கம், வேப்பம்பட்டு, அயத்தூர், சிறுகளத்தூர், தொட்டிக்கலை, கிளாம்பாக்கம், தண்டலம், தண்ணீர்குளம், காக்களூர், புட்லூர், தொழுர், சிறுகடல், செவ்வாப்பேட்டை, பெரும்பாள்பட்டு, வேப்பம்பட்டு, திருவூர் மற்றும் அரண்வாயல் கிராமங்கள்.

பூந்தமல்லி வட்டம்

கூடப்பாக்கம், வரதராஜபுரம், வெள்ளவேடு, நேமம், நொச்சி மேடு, மெய்யூர், படூர், அகரமேல், நாசரத் பேட்டை, கண்ணப்பாளையம், மேல்பாக்கம், சொரன்சேரி, அமுதூர்மேடு, அக்ரஹாரமேல், திருநின்றவூர், கொரட்டூர், வயலாநல்லூர், கோலப்பஞ்சேரி, பாணவேடுதோட்டம், பிடாரிதாங்கல், பாரிவாக்கம், சென்னீர்குப்பம், கொரட்டூர், கீழ்மணம்பேடு, காட்டுப்பாக்கம் மற்றும் கோபரசநல்லூர் கிராமங்கள்.

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

பூந்தமல்லி (தனி), தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1977 - 2011)

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1977

டி. இராசரத்தினம்

திமுக

26552

36.49

1980

இராசரத்தினம்

திமுக

38018

48.83

1984

ஜி. அனந்தகிருஷ்ணன்

காங்கிரசு

55129

55.97

1989

டி. ஆர். மாசிலாமணி

திமுக

58640

48.11

1991

டி. சுதர்சனம்

காங்கிரசு

68392

55.5

1996

டி. சுதர்சனம்

தமாகா

75731

53.2

2001

எஸ். சண்முகம்

பாமக

62220

37.51

2006

டி. சுதர்சனம்

காங்கிரசு

98920

---

2011

இரா. மணிமாறன்

அதிமுக

99097

---

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1977

இரா. குலசேகரன்

அதிமுக

21659

29.76

1980

சம்பந்தன்

காந்தி காமராசு தேசிய காங்கிரசு

26930

34.59

1984

டி. இராசரத்தினம்

திமுக

40562

41.18

1989

ஜி. அனந்தகிருஷ்ணன்

காங்கிரசு

29345

24.07

1991

டி. இராசரத்தினம்

திமுக

44240

35.9

1996

பி. கிருஷ்ணமூர்த்தி

காங்கிரசு

25220

17.72

2001

எஸ். செழியன்

திமுக

59904

36.12

2006

ஆர். செங்குட்டுவன்

மதிமுக

83590

2011

காஞ்சி ஜி.வி.மதியழகன்

காங்கிரசு

57678

---

2006 – தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

சுதர்சனம்.டி

காங்கிரஸ்

98920

2

செங்குட்டுவன்

மதிமுக

83590

3

சந்திரசேகர்.ஜி

தேமுதிக

15711

4

மனோகரன்

பிஜேபி

2062

5

ஜோதிமணி

சுயேச்சை

1432

6

ஜெயகுமார்

பி எஸ் பி

553

7

ராயர்

சுயேச்சை

444

8

வெங்கடேசன்

சுயேச்சை

431

9

சரவணன்

சுயேச்சை

320

10

பார்த்தசாரதி

சுயேச்சை

203

11

வாசுதேவன்

சுயேச்சை

174

12

மாசிலாமணி

சுயேச்சை

151

203991

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

மணிமாறன்

அதிமுக

99097

2

காஞ்சி ஜி.வி.மதியழகன்

காங்கிரஸ்

57678

3

ஜெகன்மூர்த்தி.எம்

பு பா

21118

4

முரளி.கே

சுயேச்சை

2022

5

தேன்மதி

ஐ.ஜே.கே

1616



சட்டப்பேரவைத் தேர்தல்தமிழக தேர்தல் களம்பூந்தமல்லி தனி தொகுதிதேர்தல் 2021பூந்தமல்லிTN Assembly Election 2021Assembly Election 2021Tamilnadu Assembly Election 2021தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021சட்டமன்றத் தேர்தல் 2021திமுகஅதிமுகமக்கள் நீதி மய்யம்தேமுதிகமதிமுகஅமமுகமு.க.ஸ்டாலின்எடப்பாடி பழனிசாமிகமல்கமல்ஹாசன்DmkAdmkMNMMakkal needhi maiamDMDKMkstalinEdapadi palanisamyDhinakaranVaikoKamalKamal haasanKhushbooGautamiLmuruganகுஷ்புகவுதமிஎல்.முருகன்நாம் தமிழர் கட்சிSeemanசீமான்TN ElectionTN Election 2021#tnelection202

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x