Published : 11 Mar 2021 02:09 PM
Last Updated : 11 Mar 2021 02:09 PM

102 - காங்கயம்

காங்கேயம் காளை

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
ராமலிங்கம் அதிமுக
சாமிநாதன் திமுக
சி.ரமேஷ் அமமுக
அப்பாசாமி (மஜக) மக்கள் நீதி மய்யம்
கு.சிவானந்தம் நாம் தமிழர் கட்சி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் கடந்த 2011ம் ஆண்டு சட்டப்பேரவை தொகுதி மறு சீரமைப்பின்போது,வெள்ளகோவில் தொகுதி, காங்கயம் சட்டமன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டது.

இத்தொகுதியில், விவசாயம், அரிசி ஆலை, தேங்காய் எண்ணெய் ஆலை, தேங்காய் பருப்பு உலர் களம், கைத்தறி நெசவு, விசைத்தறி நெசவு ஆகியவை முக்கிய தொழிலாக உள்ளது. கீழ்பவானி பாசனம் மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனம் வாயிலாக விவசாயம் நடைபெறுகிறது. காங்கயத்தில் 700-க்கும் மேற்பட்ட தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மற்றும் தேங்காய் பருப்பு உலர்களம், 300-க்கும் மேற்பட்ட அரிசி உற்பத்தி ஆலைகள் உள்ளன.

வெள்ளகோவில் பகுதியிலும் கணிசமான எண்ணிக்கையில் தேங்காய் உலர்களங்களும் 5,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்களும் உள்ளன. சென்னிமலை பகுதியில் 10,000-கும் மேற்பட்ட கைத்தறி கூடம், 300-க்கும் மேற்பட்ட கைத்தறி கூட்டுறவு சங்கம், 10,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் இயங்கி வருகின்றன. முக்கிய தொழில்களாக, கொப்பரை தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி உள்ளது. தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களிலும் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

காங்கயம் வட்டம்

பெருந்துறை வட்டம் (பகுதி)

முருங்கத்தொழுவு, புதுப்பாளையம், நஞ்சைப் பாலத்தொழுவு, புஞ்சைப் பாலத்தொழுவு, கொடுமணல், ஒரத்துப்பாளையம், எல்லை கிராமம்,எட்டக்காம்பாளையம், பசுவபட்டி மற்றும் குப்பிச்சி பாளையம் கிராமங்கள்.

முகாசி பிடாரியூர் (செசன்ஸ் டவுன்), ஒட்டப்பாறை (செசன்ஸ் டவுன்) மற்றும் சென்னிமலை (பேரூராட்சி)

தொகுதி பிரச்சினைகள்

இத்தொகுதியில், தேங்காய் எண்ணெய் தயாரிப்பு தொழிலில், தமிழக அரசு விதித்துள்ள 5 சதவீத வாட் வரி மற்றும் 1 சதவீத செஸ் வரியால் தேங்காய் பருப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்தித் தொழில் நசிவடைந்துள்ளது. இத்தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தறி மற்றும் விசைத்தறி தொழில் நலிவை தடுக்கவும், அதனை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காங்கயம் மற்றும் வெள்ளகோவில் பகுதி கிராம பொருளாதாரத்தின் மிக முக்கிய அம்சமாக விளங்கும் கிராம சந்தைகளில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து வேண்டும். காங்கயத்தில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அல்லது சுற்றுச்சாலை அமைக்க வேண்டும். நகரின் விரிவாக்கப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். நகராட்சி நிர்வாகத்தை தரம் உயர்த்த வேண்டும் என்பதும் அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளது.

இதன் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக தனியரசு (கொஇபே) உள்ளார்.

9/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,14,996

பெண்

1,18,749

மூன்றாம் பாலினத்தவர்

18

மொத்த வாக்காளர்கள்

2,33,763

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

1952

ஏ. கே. சுப்பராய கவுண்டர்

காங்கிரஸ்

--

1957

கே. ஜி. பழனிசாமிக்கவுண்டர்

காங்கிரஸ்

17952

1962

கே. எஸ். நடராச கவுண்டர்

காங்கிரஸ்

41006

1967

ஏ. எஸ் கவுண்டர்

காங்கிரஸ்

24800

1971

கோவை செழியன்

திமுக

42461

1977

ஆர். கே. எஸ் தண்டபாணி

அதிமுக

31665

1980

கே. ஜி. கிருஷ்ணசாமி

அதிமுக

45950

1984

கே. சி. பழனிசாமி

அதிமுக

54252

1989

பி. மாரப்பன்

அதிமுக (ஜெ)

43834

1991

ஜெ. ஜெயலலிதா

அதிமுக

69050

1996

என். எஸ். ராஜ்குமார் மன்றாடியார்

திமுக

63801

2001

எம். செல்வி

அதிமுக

58700

2006

எஸ். சேகர்

காங்கிரஸ்

56946

2011

என். எஸ்.என். நடராஜன்.

அதிமுக

96005

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

1952

--

--

--

1957

பி. முத்துசாமி கவுண்டர்

சுயேச்சை

10209

1962

எம். பழனிசாமி கவுண்டர்

திமுக

24711

1967

வேலுசாமி

திமுக

24654

1971

கே. ஜி. பழனிசாமிக்கவுண்டர்

சுயேச்சை

20419

1977

எம். சிவசபாபதி

திமுக

18498

1980

எம். சிவசபாபதி

திமுக

34341

1984

எம். சிவசபாபதி

திமுக

37495

1989

ஆர். இரத்தினசாமி

திமுக

36163

1991

என். எஸ். ராஜ்குமார் மன்றாடியார்

திமுக

35759

1996

என். இராமசாமி

அதிமுக

37792

2001

என். எஸ். ராஜ்குமார் மன்றாடியார்

திமுக

47426

2006

என். எம். எஸ். பழனிசாமி

அதிமுக

49650

2011

விடியல் சேகர்

காங்கிரஸ்

54240

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

சேகர்.S

காங்கிரஸ்

56946

2

பழனிசாமி.N.M.S

அதிமுக

49650

3

குமாரசாமி.P

தேமுதிக

11354

4

சுப்பிரமணியம்.K

ஐக்கிய ஜனதா தளம்

1883

5

ராஜேந்திரன்.P

சுயேச்சை

1443

6

பெருமாள்.K

பகுஜன் சமாஜ் கட்சி

1081

7

பழனிசாமி.K

சுயேச்சை

665

8

சேகர்.M

சுயேச்சை

292

9

காமாட்சிதேவி.S

சுயேச்சை

245

123559

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

நடராஜன்.NSN

அதிமுக

96005

2

விடியல் சேகர்.S

காங்கிரஸ்

54240

3

பொன்னுசாமி.C

பாஜக

1884

4

ராஜமாணிக்கம்.

சுயேச்சை

1802

5

பெரியசாமி.P.K

சுயேச்சை

1165

6

பெருமாள்.K

பகுஜன் சமாஜ் கட்சி

1129

7

கிருஷ்ணமூர்த்தி.V

சுயேச்சை

525

8

ராமசாமி.R

சுயேச்சை

464

9

செல்லமுத்து.P

சுயேச்சை

427

10

சுகுமாரன்.N

சுயேச்சை

388

11

மணி.M.R

சுயேச்சை

309

158338

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x