Published : 11 Mar 2021 14:04 pm

Updated : 03 Apr 2021 09:31 am

 

Published : 11 Mar 2021 02:04 PM
Last Updated : 03 Apr 2021 09:31 AM

227 - நாங்குநேரி

227
களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம்.

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
கணேசராஜா அதிமுக
ரூபி ஆர்.மனோகரன் (காங்கிரஸ்) திமுக
எஸ்.பரமசிவ ஐயப்பன் அமமுக
பூ.வீரபாண்டி நாம் தமிழர் கட்சி


பாளையங்கோட்டை தாலுகா மற்றும் நாங்குநேரி தாலுகா ஆகிய இரு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளை உள்ளடக்கியது. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள களக்காடு ஒன்றியம் செழுமையான விவசாய நிலபரப்பை கொண்டது.

களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம், வடக்குபச்சையாறு, கொடு முடியாறு அணைக்கட்டுகள் இத்தொகுதியில் உள்ளன. நாட்டிலேயே ராணுவ தகவல் தொடர்புக்கான மிகப்பெரிய கடற்படைதளமான ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படை தளம், நாட்டிலேயே முதன்முதலாக தொடங்கப்பட்ட நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலம் ஆகியவை இத்தொகுதியில் உள்ளன.

இந்துக்கள் அதிகம் வசிக்கும் இத்தொகுதியில் தேவர் சமுதாயத்தினரும், அடுத்ததாக நாடார் சமுதாயத்தினரும் அதிகம் வசிக்கிறார்கள். இத்தொகுதியில் இருக்கும் ஏர்வாடி, களக்காடு பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகமுள்ளனர்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

பாளையம் கோட்டை தாலுகா, நாங்குநேரி தாலுகா.

தொகுதியின் பிரச்சினைகள்

பல கிராமங்களை உள்ளடக்கிய இத்தொகுதியில் பல இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக எந்தவித தொழிற்சாலைகளும் இல்லாததால் இங்கிருந்து மும்பை, சென்னை, கோவைக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் முக்கியநகராக இருந்த நாங்குநேரியில் கருவூலம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை என்றுஅனைத்தும் இருந்தன. தற்போது திருநெல்வேலி- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலையாக அமைந்துள்ளதால் ஊருக்குள் பேருந்துகள் வராமல் சென்று வருகின்றன.

களக்காடு, திருக்குறுங்குடி, சிறுமளஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் ஏத்தன் வாழை விவசாயம் நடைபெறுகிறது. விலை வீழ்ச்சி ஏற்படுவதால் இப்பகுதியில் வாழைத்தார்களை சேமித்து வைப்பதற்கு குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. நாங்குநேரி பொருளாதார சிறப்பு மண்டலம் முடங்கியிருக்கிறது. இதை முழுஅளவில் செயல்படுத்த அரசுகள் முன் வரவில்லை.

தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு நதிநீர் இணைப்பு வெள்ள நீர்கால்வாய் திட்டம் பாதியில் நிற்கிறது. களக்காடு சுற்று வட்டார பகுதியில் களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம், திருக்குறுங்குடி மலை நம்பி கோயில், களக்காடு தலையணை, செங்கல்தேரி, தேங்காய் உருளி அருவி என்றுஅழகிய நீரோடைகளும், நாங்குநேரி வானுமாலமலை பெருமாள் திருக்கோயில், திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் என்று பல்வேறு சுற்றுலாதலங்கள் இருப்பதால், இப்பகுதியில் சுற்றுலா மேம்பாட்டுக்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

1952 முதல் 2011 வரை நடைபெற்ற 14 சட்டப்பேரவை தேர்தல்களில் 5 முறை காங்கிரஸ், 2 முறை திமுக, 4 முறை அதிமுக, ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை தலா ஒரு முறை வெற்றி பெற்றிருக்கின்றன. 2006-ல் இத்தொகுதியில் காங்கிரஸ் உறுப்பினர் எச். வசந்தகுமார் வெற்றி பெற்றிருந்தார். 2011-ல் அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட ஏ. நாராயணன் வெற்றி பெற்றிருந்தார். 2016 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் எச். வசந்தகுமார் வெற்றி பெற்றிருந்தார்.

கடந்த 2016 தேர்தலில் காங்கிரஸ்கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார் 74,932 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அவருக்கு அடுத்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த விஜயகுமார் 57,617 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம்பெற்றார்.

2019 மக்களவை தேர்தலின் போது கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றிபெற்றார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,20,033

பெண்

1,21,415

மூன்றாம் பாலினத்தவர்

2

மொத்த வாக்காளர்கள்

2,41,450

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு

2011

A.நாராயணன்

அ.இ.ச.ம.க

46

2006

H.வசந்தகுமார்

இ.தே.கா

51.76

2001

S.மாணிக்கராஜ்

அதிமுக

51.54

1996

S.V.கிருஷ்ணன்

இந்திய கம்யூனிச கட்சி

40.27

1991

V.நடேசன் பால்ராஜ்

அதிமுக

72.9

1989

ஆச்சியூர் M.மணி

திமுக

31.87

1984

M.ஜான் வின்சென்ட்

அதிமுக

58

1980

M.ஜான் வின்சென்ட்

அதிமுக

52.18

1977

M.ஜான் வின்சென்ட்

ஜனதா கட்சி

27.71

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

H. வசந்தகுமார்

காங்கிரஸ்

54170

2

S.P. சூரியகுமார்

அ.தி.மு.க

34095

3

R. சங்கர்

எ.ஐ.எப்.பி

6869

4

I. பாக்கியராஜ்

தே.மு.தி.க

2700

5

A. நாவனிதகிருஷ்ணன்

சுயேச்சை

1964

6

U. பாண்டி

பி.எஸ்.பி

1872

7

R. சோழகன் நெல்லை

பி.ஜே.பி

1335

8

K. யுகேந்தரன்

சுயேச்சை

908

9

S. சத்தியநாரயாணன்

சுயேச்சை

317

10

S. ஆனந்தகுமார்

ஐ.ஜே.பி

247

11

K. சிவனாந்தபெருமாள்

சுயேச்சை

188

104665

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

A. நாராயணன்

அ.தி.மு.க

65510

2

H. வசந்தகுமார்

காங்கிரஸ்

53230

3

T. தேவனந்தன் யாதவ்

ஜே.எம்.எம்

13425

4

M. மஹாகண்ணன்

பி.ஜே.பி

5290

5

S. முருகன்

சுயேச்சை

2207

6

M. அனாந்த்

பி.எஸ்.பி

2075

7

V. சேனைதுரைநாடார்

சுயேச்சை

940

142677சட்டப்பேரவைத் தேர்தல்தமிழக தேர்தல் களம்நாங்குநேரி தொகுதிநாங்குநேரிதேர்தல் 2021TN Assembly Election 2021Assembly Election 2021Tamilnadu Assembly Election 2021தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021சட்டமன்றத் தேர்தல் 2021திமுகஅதிமுகமக்கள் நீதி மய்யம்தேமுதிகமதிமுகஅமமுகமு.க.ஸ்டாலின்எடப்பாடி பழனிசாமிகமல்கமல்ஹாசன்DmkAdmkMNMMakkal needhi maiamDMDKMkstalinEdapadi palanisamyDhinakaranVaikoKamalKamal haasanKhushbooGautamiLmuruganகுஷ்புகவுதமிஎல்.முருகன்நாம் தமிழர் கட்சிSeemanசீமான்TN ElectionTN Election 2021#tnelection2021

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x