Published : 11 Mar 2021 01:51 PM
Last Updated : 11 Mar 2021 01:51 PM

172 - பாபநாசம்

தானியக் களஞ்சியம்.

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
கோபிநாதன் அதிமுக
எம்.எச். ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி) திமுக
எம்.ரங்கசாமி அமமுக
சாந்தா மக்கள் நீதி மய்யம்
ந.கிருஷ்ணகுமார் நாம் தமிழர் கட்சி

கிராமப்புறங்களை அடிப்படையாக கொண்டது இந்த தொகுதி. நெல், பருத்தி, வெற்றிலை, கரும்பு ஆகியவை உற்பத்தி செய்யப்படுகிறது. சுவாமிமலை உலோக சிற்பங்கள் வடிவமைப்பும் சிறப்பு பெற்றது.

இந்த தொகுதியில் சுவாமிமலை முருகன் கோயில், பட்டீவரம் துர்க்கை அம்மன்கோயில், ஆசியாவிலேயே மிகப்பெரிய தானிய சேமிப்பு கிடங்கு உள்ள திருப்பாலத்துறை பாலைவனநாதசுவாமி கோயில், பாபநாசம் 108 சிவாலயம் என புகழ்பெற்ற தலங்கள் உள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

பாபநாசம் வட்டம்

கும்பகோணம் வட்டம் (பகுதி)

நாகக்குடி, வலையப்பேட்டை, திருவலஞ்சுழி, சுந்தரபெருமாள்கோயில் தென்பாதி, வெள்ளாளபிள்ளையாம்பேட்டை, திருவலஞ்சுழி தட்டிமால், பட்டீஸ்வரம் மற்றும் வாணியக்கரம்பை கிராமங்கள்,

சுவாமிமலை (பேரூராட்சி).

காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் பாபநாசம் தொகுதி ஜி.கே.மூப்பனார் பிறந்த சுந்தரபெருமாள் கோயிலை உள்ளடக்கியது. இந்த தொகுதி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்டது.

இந்த தொகுதியில் வன்னியர், முக்குலத்தோர், இஸ்லாமியர்கள், தலித்துகள் அதிகம் நிறைந்த பகுதி. சுவாமிமலை, அய்யம்பேட்டை, அம்மாபேட்டை, பாபநாசம்,மெலட்டூர் ஆகிய பேரூராட்சிகளும், கும்பகோணம் தாலுகாவில் சில கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது.

தொகுதியின் பிரச்சினைகள்

அரியலூர் மாவட்டத்தையும், கபிஸ்தலம் பகுதியையும் இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும், ஆறுகள், வாய்க்கால்கள் அதிகமாக பாய்ந்து பாசனத்தை வளப்படுத்துவதால், விவசாய கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் உள்ளது.

கடந்த 1957ம் ஆண்டு முதல் தொடர்ந்து தேர்தலை சந்தித்து வருகிறது இந்த தொகுதி. இந்த தொகுதியில் காங்கிரஸ் 7 முறையும், தமாகா இரு முறையும், அதிமுக மூன்று முறையும், திமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

அதிமுகவில் வெற்றி பெற்ற துரைக்கண்ணு கடந்த முறை வேளாண்மை துறை அமைச்சராக பதவி வகித்து கடந்த நவம்பர் மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

இரா. துரைக்கண்ணு

அதிமுக

2

டி.ஆர். லோகநாதன்

காங்கிரஸ்

3

து. ஜெயக்குமார்

தமாகா

4

கோ. ஆலயமணி

பாமக

5

த. குணசேகரன்

பாஜக

6

மு.இ. ஹூமாயூன் கபீர்

நாம் தமிழர்

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்

ஆண்

1,19,020

பெண்

1,21,142

மூன்றாம் பாலினத்தவர்

10

மொத்த வாக்காளர்கள்

2,40,172

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு

2011

துரைக்கண்ணு

அதிமுக

2006

துரைக்கண்ணு

அதிமுக

55.04

2001

M.ராம்குமார்

தமாகா

53.78

1996

N.கருப்பண்ணஉடையார்

தமாகா

44.9

1991

S.ராஜராமன்

காங்கிரஸ்

64.25

1989

ஜி.கருப்பையாமூப்பனார்

காங்கிரஸ்

29.5

1984

S.ராஜராமன்

காங்கிரஸ்

67.4

1980

S.ராஜராமன்

காங்கிரஸ்

59.79

1977

R.V.சவுந்தர்ராஜன்

காங்கிரஸ்

34.41

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

R. துரைக்கண்ணு

அ.தி.மு.க

60027

2

M. ராம்குமார்

காங்கிரஸ்

53026

3

N. மருதையன்

தே.மு.தி.க

4443

4

R. வாசுதேவன்

பாஜக

1594

5

R. சங்கீதா

பி.எஸ்.பி

1174

6

A.M. மோகன்

எ.ஐ.எப்.பி

1145

7

P. அண்ணாதுரை

சுயேச்சை

897

8

A. துரை புரனுதீன்

எஸ்.பி

874

123180

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

R. துரைக்கண்ணு

அ.தி.மு.க

85635

2

M. ராம்குமார்

காங்கிரஸ்

67628

3

T. மகேந்திரன்

பி.ஜே.பி

1596

4

P.A. முகமத் கனி

சுயேச்சை

1231

5

K. சம்பாவைத்தியநாதன்

எ.பி.எச்.எம்

1174

6

R. திருமேனி

பி.எஸ்.பி

1082

7

V. குழந்தைவேலு

சுயேச்சை

585

8

A.M. ராஜா

சுயேச்சை

370

9

A.M. ராஜாமுகமது

சுயேச்சை

327

10

P. அறிவழகன்

சுயேச்சை

301

11

A. தமிழ்செல்வி

சுயேச்சை

233

160162

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x