Published : 11 Mar 2021 13:49 pm

Updated : 03 Apr 2021 09:17 am

 

Published : 11 Mar 2021 01:49 PM
Last Updated : 03 Apr 2021 09:17 AM

81 - கெங்கவல்லி (தனி)

81
வடசென்னிமலை, கெங்கவல்லி தொகுதி.

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
நல்லதம்பி அதிமுக
ஜெ.ரேகா பிரியதர்ஷினி திமுக
ஏ.பாண்டியன் அமமுக
பெரியசாமி மக்கள் நீதி மய்யம்
இரா.வினோதினி நாம் தமிழர் கட்சி


கெங்கவல்லி தொகுதி முற்றிலும் விவசாயம் சார்ந்தது. காய்கறிகள் விளைச்சல் இங்கு அதிகம். தொகுதிக்கு உட்பட்ட தலைவாசலில், தமிழகத்திலேயே 2-வது மிகப்பெரிய தினசரி காய்கறி சந்தை உள்ளது. கோழிப்பண்ணைகள், சேகோ உற்பத்தி ஆலைகள் பரவலாக உள்ளன. தமிழக அரசு சார்பில், தெற்காசியாவிலேயே மிகப்பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா, தலைவாசலில் அமைக்கப்பட்டு வருகிறது.

விவசாயம் முக்கியத் தொழில். ஆதி திராவிடர், வன்னியர், கொங்கு வேளாளர், நாயக்கர், முதலியார் என பல சமுதாயத்தினரை பரவலாகக் கொண்ட தொகுதி.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:

கடந்த 1951-ம் ஆண்டு முதல் கடந்த 2006ம் ஆண்டு வரை தலைவாசல் (தனி) தொகுதி என்ற பெயரில் இருந்தது. பின்னர் தேர்தல் ஆணையத்தால், 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில், கெங்கவல்லி (தனி) தொகுதியாக மாற்றப்பட்டது.

இத்தொகுதியில் கெங்கவல்லி வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் ஆத்தூர் வட்டத்தில் உள்ள நடுவலூர், தெடாவூர், ஊனத்தூர், வேப்பநத்தம், வரகூர், சிறுவாச்சூர், மணிவிழுந்தான், காட்டுக்கோட்டை, சதாசிவபுரம், சார்வாய், தேவியாக்குறிச்சி, தலைவாசல், பட்டுத்துறை, நாவக்குறிச்சி, புத்தூர், நத்தக்கரை, பெரியேரி, ஆறகழுர், தியாகனூர், ஆராத்தி அக்ரஹாரம், மும்முடி, காமக்கா பாளையம், வடகுமரை, தென்குமரை, சாத்தப்பாடி, புனல்வாசல், நாவலூர், சித்தேரி, கோவிந்தம்பாளையம் மற்றும் பள்ளிபாளையம் கிராமங்கள் அடங்கியுள்ளன.

தொகுதியின் பிரச்சினைகள்:

விவசாயம் சார்ந்த தொகுதி என்றாலும் கூட, பாசனத்துக்கான நீர் தேவை எப்போதும் பற்றாக்குறையாகவே உள்ளது. தொகுதிக்குள் வசிஷ்ட நதி, சுவேத நதி என இரு ஆறுகளும், இவற்றைச் சார்ந்து பல ஏரிகள் இருந்தும், வானம் பார்த்த பூமியாகவே தொகுதி இருக்கிறது. ஆறுகளில் பெருகிவிட்ட ஆக்கிரமிப்பு, ஏரிகள் தூர் வாரப்படாமலும், சீமைக்கருவேல மரங்கள் படர்ந்தும் தூர்ந்து கிடக்கின்றன.

தொகுதியில் உள்ள ஒரே ரயில் நிலையமான தலைவாசல் ரயில் நிலையத்தில், சென்னை ரயில் நின்று செல்வதில்லை என்பது மக்களின் குறை. தமிழகத்தின் பெரிய தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வரும் நிலையில், கடந்த 40 ஆண்டுகளாக, அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கி வருவது, விவசாயிகள், வர்த்தகர்களுக்கு பிரச்சினைகளை கொடுத்து வருகிறது. ஆத்தூரில் இருந்து தலைவாசலை பிரித்து, தனி வட்டமாக உருவாக்க வேண்டும் என்பது நிறைவேறாத கோரிக்கையாக உள்ளது.70 ஆண்டுகளாக தனி தொகுதியாக இருப்பதும் மக்களின் குறையாக உள்ளது.

கட்சிகளின் வெற்றி:

காங்கிரஸ் 6 முறையும், திமுக- 4 முறையும், அதிமுக- 4 (இடைத் தேர்தல் உள்பட) முறையும், தேமுதிக- 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,14,127

பெண்

1,20,095

மூன்றாம் பாலினத்தவர்

2

மொத்த வாக்காளர்கள்

2,34,224

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ஏ. மருதமுத்து

அதிமுக

2

ஜே.ரேகா ப்ரியதர்ஷினி

திமுக

3

ஆர்.சுபா

தேமுதிக

4

ஏ.சண்முகவேல் மூர்த்தி

பாமக

5

பி.சிவகாமி பரமசிவம்

பாஜக

6

பி.செந்தில்குமார்

நாம் தமிழர்

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்ற தேர்தல்

81. கங்கவள்ளி

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

R. சுபா

தே.மு.தி.க

72922

2

K. சின்னதுரை

தி.மு.க

59457

3

J. மணிமாறன்

சியேச்சை

5978

4

P. சிவகாமி

ஐ.ஜே.கே

4048

5

A. முருகேசன்

சுயேச்சை

2452

6

G. மதியழகன்

பி.ஜே.பி

1787

7

S. ராஜா

எல்.ஜே.பி

1520

8

M. சுபா

சுயேச்சை

657

9

P. அழகுவேல்

சுயேச்சை

624

10

விஜயா

பி.எஸ்.பி

602

150047சட்டப்பேரவைத் தேர்தல்தமிழக தேர்தல் களம்கெங்கவல்லிதேர்தல் 2021கெங்கவல்லி தனி தொகுதிTN Assembly Election 2021Assembly Election 2021Tamilnadu Assembly Election 2021தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021சட்டமன்றத் தேர்தல் 2021திமுகஅதிமுகமக்கள் நீதி மய்யம்தேமுதிகமதிமுகஅமமுகமு.க.ஸ்டாலின்எடப்பாடி பழனிசாமிகமல்கமல்ஹாசன்DmkAdmkMNMMakkal needhi maiamDMDKMkstalinEdapadi palanisamyDhinakaranVaikoKamalKamal haasanKhushbooGautamiLmuruganகுஷ்புகவுதமிஎல்.முருகன்நாம் தமிழர் கட்சிSeemanசீமான்TN ElectionTN Election 2021#tnelection202

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x