38 - அரக்கோணம்
2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| சு. ரவி | அதிமுக |
| கெளதம சன்னா (விடுதலை சிறுத்தைகள் கட்சி) | திமுக |
| கே.சி.மணிவண்ணன் | அமமுக |
| பாஸ்கரன் | மக்கள் நீதி மய்யம் |
| எ.அபிராமி | நாம் தமிழர் கட்சி |
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள அரக்கோணம் சட்டப்பேரவை தொகுதி கடந்த 1977-ஆம் ஆண்டு முதல் தனிதொகுதி அடையாளத்துடன் தேர்தலை சந்தித்து வருகிறது. கடந்த 1951-ம் ஆண்டு தொடங்கி இதுவரை 15 சட்டப்பேரவை தேர்தல்களை சந்தித்துள்ளது. அரக்கோணம் தொகுதி மக்கள் மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, வியாபாரம் என எல்லாவற்றுக்கும் சென்னையை நம்பியே உள்ளனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய சந்திப்பு கொண்ட ரயில் நிலையமாகவும் அரக்கோணம் உள்ளது. தென்னிந்திய கடல் பகுதியை கண்காணிக்கும் பணியை அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளம் மேற்கொண்டு வருகிறது. மத்திய தொழிற் பாதுகாப்புபடை (சிஐஎஸ்எப்) வீரர்களின் பயிற்சி மையம், தேசிய பேரிடர் மீட்புப் படை முகாம் தொகுதியின் அடையாளங்களாக உள்ளன.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
அரக்கோணம் வட்டம் (பகுதி):
செம்பேடு, சித்தம்பாடி, இச்சிபுத்தூர், கீழ்வனம், போளுர், உளியம்பாக்கம், கீலாந்தூர், பெருங்களத்தூர், கிருஷ்ணாபுரம், வளர்புரம், மூதூர், வேளுர், கொணலம், அணைப்பாக்கம், முன்வாய், கீழ்பாக்கம், காவனூர், கீழ்குப்பம், வடமாப்பாக்கம், கைனூர், தண்டலம், பெருமாள் ராஜபேட்டை, வேடல், அசமந்தூர், சித்தேரி, பரிதிபுத்தூர், மேல்பாக்கம், அம்மணூர், புளியமங்கலம், அம்பரிஷிபுரம், மோசூர், செய்யூர், நகரிகுப்பம், உறியூர், அணைக்கட்டுபுத்தூர், புதுகேசவரம், அனந்தபுரம். ஆத்தூர், மாங்காட்டுச்சேரி (கடம்பநல்லூர்), அரிகிலபாடி, பொய்யப்பாக்கம். கீழாந்துரை, மேலாந்துரை, நாகவேடு, ஒச்சாலம், அரும்பாக்கம், சிலமந்தை, மேல்களத்தூர், சிருணமல்லி, இலுப்பைதண்டலம், பரமேள்வரமங்கலம், முருங்கை, சித்தூர், பின்னாவரம், ஆட்டுப்பாக்கம், சயனவரம் (ஜாகீர்), கீழ்வெங்கடாபுரம், பாலூர், மற்றும் கணவதிபுரம் கிராமங்கள்.
அரக்கோணம் (நகராட்சி), பெருமுச்சி (சென்சஸ் டவுன்) மற்றும் தக்கோலம் (பேரூராட்சி)
தொகுதி மக்கள் பிரச்சினைகள்
எம்ஆர்எப் டயர் தொழிற்சாலை, ராம்கோ சிமென்ட் கூரை தயாரிப்பு ஆலை, அல்ட்ரா டெக்சிமென்ட் ஆலை என குறிப்பிடும்படியான தொழிற்சாலைகள் இருந்தாலும் வேலைவாய்ப்புக்காக சென்னையை மட்டுமே நம்பியுள்ளனர். அரக்கோணம் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களை பின்னணியாக கொண்ட அரக்கோணம் தொகுதியின் தேவைகள் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.
கிடப்பில் இருக்கும் சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடம் திட்டம், திருப்பதி - சதுரங்கபட்டினம் சாலை விரிவாக்கப் பணிகள், கிடப்பில் இருக்கும் பனப்பாக்கம் சிப்காட் பூங்கா, சென்னையின் நுழைவு வாயிலாக அரக்கோணம் ரயில் நிலையத்தை மாற்றுவது, நவீன வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை வளாகம், அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூரை இணைக்கும் சாலை பணிகளை தொடங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது.
ஒழுங்கு முறை விற்பனைக் கூடம், நெசவாளர்களுக்கு விசைத்தறி தொழில் தொடங்க கடனுதவி வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. அத்துடன் அரக்கோணம் நகரத்தை இரண்டாகப் பிரிக்கும் ரயில்வே சுரங்கப்பாதையில் போக்குவரத்து வசதிக்காக மூன்றாவது சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டது.
இந்த மூன்றாவது பாதை சரியாக திட்டமிடப்படாமல் கட்டியதால் மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற வழியில்லை, இரவு நேரத்தில் மின் விளக்குகள் எரியாததால் கட்டி முடிக்கப்பட்டும் பயனற்றதாக இருக்கிறது. இந்த மூன்றாவது சுரங்கப் பாதையை போக்குவரத்துக்கு உகந்ததாக மாற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அத்துடன் ரூ.110 கோடியில் முடிக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டி பள்ளங்களால் சீரமைக்க வேண்டிய சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.பாதாள சாக்கடை திட்டத்தில் வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணியும் மந்த கதியில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பாதாள சாக்கடை திட்டம் பெயரளவுக்கு மட்டுமே உள்ளது.
தேர்தல் வரலாறு
கடந்த 1951-ல் தொடங்கி இதுவரை 15 தேர்தல்களை சந்தித்துள்ள அரக்கோணம் சட்டப்பேரவை தொகுதியில் திமுக 7, அதிமுக 5, காங்கிரஸ் 2, சுயேட்சை ஒரு முறை வெற்றி பெற்றுள்ளனர்.
2016-ல் தேர்தலில் மொத்தம் 14 பேர் போட்டியிட்டனர். இதில், சிட்டிங் எம்எல்ஏ என்ற அடிப்படையில் மூன்றாவது முறையாக போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சு.ரவி 68,176 வாக்குகள் பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராஜ்குமார் 64,015 வாக்குகள் பெற்றார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,10,327 |
| பெண் | 1,16,167 |
| மூன்றாம் பாலினத்தவர் | 17 |
| மொத்த வாக்காளர்கள் | 2,26,511 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | எஸ்.ரவி | அதிமுக |
| 2 | என்.ராஜ்குமார் | திமுக |
| 3 | ஜி.கோபிநாத் | விசிக |
| 4 | ஆர்.அற்புதம் | பாமக |
| 5 | சி.விஜயன் | பாஜக |
| 6 | எம்.சரவணன் | நாம் தமிழர் |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1951 - 2011 )
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
| 1951 | பக்கதவத்சலு நாயுடு | சுயேச்சை | 21057 | 45.98 |
| 1957 | சடையப்ப முதலியார் | காங்கிரஸ் | 29669 | 62.46 |
| 1962 | எஸ் . ஜே. இராமசாமி | திமுக | 26586 | 38.98 |
| 1967 | எசு. ஜே. இராமசாமி | திமுக | 38478 | 52.78 |
| 1971 | என். எசு. பலராமன் | திமுக | 42256 | 60.11 |
| 1977 | வி. கே. இராசு | அதிமுக | 24630 | 33.5 |
| 1980 | எம். விசயசாரதி | அதிமுக | 36314 | 48.84 |
| 1984 | வி. கே. இராசு | திமுக | 52657 | 52.24 |
| 1989 | வி. கே. இராசு | திமுக | 42511 | 46.78 |
| 1991 | லதா பெரியகுமார் | காங்கிரஸ் | 61314 | 55.24 |
| 1996 | ஆர். தமிழ்ச்செல்வன் | திமுக | 70550 | 58.13 |
| 2001 | பவானி கருணாகரன் | அதிமுக | 67034 | 55.09 |
| 2006 | எம். ஜெகன்மூர்த்தி | திமுக | 66338 | --- |
| 2011 | சு.ரவி | அதிமுக | 79409 |
| ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
| 1951 | வேதாச்சலம் | காங்கிரஸ் | 19165 | 41.85 |
| 1957 | தாமசு | சுயேச்சை | 10527 | 22.16 |
| 1962 | பி. பக்கதவத்சலு நாயுடு | காங்கிரஸ் | 25152 | 36.87 |
| 1967 | பி. நாயுடு | காங்கிரஸ் | 30870 | 42.35 |
| 1971 | எசு. கே. சுப்பரமணிய முதலி | நிறுவன காங்கிரஸ் | 26878 | 38.24 |
| 1977 | எ. கண்ணாயிரம் | திமுக | 17041 | 23.18 |
| 1980 | ஜி. செயராசு | காங்கிரஸ் | 35393 | 47.6 |
| 1984 | எம். விசயசாரதி | அதிமுக | 46344 | 45.98 |
| 1989 | பி. இராசுகுமார் | காங்கிரஸ் | 20538 | 22.6 |
| 1991 | ஜி. மணி | திமுக | 30332 | 27.33 |
| 1996 | ஆர். ஏழுமலை | பாமக | 23730 | 19.55 |
| 2001 | ஆர். இரவிசங்கர் | திமுக | 46778 | 38.44 |
| 2006 | எசு.இரவி | அதிமுக | 58782 | --- |
| 2011 | செல்லப்பாண்டியன் | விசி | 53172 |
2006 தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | M. ஜெகன்மூர்த்தி | தி.மு.க | 66338 |
| 2 | S. ரவி | அ.தி.மு.க | 58782 |
| 3 | உஷா ராணி.R | தே.மு.தி.க | 9185 |
| 4 | ரவி.V | சுயேட்சை | 2092 |
| 5 | C.விஜயன் | பிஜேபி | 1561 |
| 6 | M.அமுதா | எஸ்.பி | 1143 |
| 7 | C.பாபு | சுயேச்சை | 472 |
| 8 | S.மோகன் | சுயேச்சை | 306 |
| 9 | M.தனபால் | சுயேச்சை | 218 |
| 10 | P.அண்ணாதுரை | சுயேச்சை | 159 |
| 11 | K.சம்பத் | சுயேச்சை | 139 |
| 12 | S.கோதண்டம் | சுயேச்சை | 132 |
| 13 | S.அன்பு | சுயேச்சை | 119 |
| மொத்தம் | 140646 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | S. ரவி | அ.தி.மு.க | 79409 |
| 2 | S. செல்லபாண்டியன் | வி.சி.க | 53172 |
| 3 | G. மகாலிங்கம் | பு.பா | 3007 |
| 4 | P. சுதாகர் | பிஎஸ்பி | 2030 |
| 5 | S. செந்தில்குமார் | ஐ.ஜே,கே | 1755 |
| 6 | டைடஸ் தியாகராஜன் | எ.ஐ.ஜே,எம்.கே | 1483 |
| 7 | D. ரவி | சுயேட்சை | 1103 |
