Published : 11 Mar 2021 02:47 PM
Last Updated : 11 Mar 2021 02:47 PM

211 - ராமநாதபுரம்

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
குப்புராம் (பாஜக) அதிமுக
கா.காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் திமுக
முனுசாமி அமமுக
சரவணன் மக்கள் நீதி மய்யம்
க.இளங்கோவன் நாம் தமிழர் கட்சி

ராமநாதபுரம் தொகுதியில் ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை நகராட்சிகள், மண்டபம் பேரூராட்சி மற்றும் திருப்புல்லாணி, ராமநாதபுரம் மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்திய அளவில் பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில், ராமநாதபுரத்தில் சேதுபதி மன்னர்கள் ஆட்சி செய்த ராமலிங்க விலாசம் அரண்மனை ஆகியவை வரலாற்றுச் ன்னங்களாக அமைந்துள்ளன. பாம்பனில்கடலுக்குள் அமைக்கப்பட்ட செஷர்ஸ் ரயில் பாலம் மற்றும் இந்திராகாந்தி ரோடு பாலம் ஆகியவை உலக அளவில் பிரபலமானவை.

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பேய்க்கரும்பு கிராமத்தில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் நினைவிடம் அமைந்துள்ளது. தற்போது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் வரும் இடமாக மாறியுள்ளது.

ராமேசுவரத்தில் இந்திய கடற்படை , மண்டபத்தில் இந்திய கடலோர காவல்படை, உச்சிப்புளியில் கடற்படை பருந்து விமானத்தளம் போன்ற ராணுவ முகாம்களும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளது.

தொகுதி பிரச்சினைகள்

முக்கியத் தொழிலாக மீன்பிடிப்பும், விவசாயமும் அமைந்துள்ளது. முதலிடத்தில் மீன்பிடித் தொழில் இருந்தும், இத்தொகுதி மீனவர் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும்போது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் சர்வதேச பிரச்சினையாக இருந்து வருகிறது. இதுவரை 600 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர்.

இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது. இருந்தபோதும் இதுவரை சரியான தீர்வு எட்டப்படவில்லை. இதனால் மீனவர்கள் தினம் தினம் துயரம் அனுபவிக்கின்றனர். மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், மீன்களை பதப்படுத்த குளிர்பதன கிடங்குகள்,தனியார் சிண்டிகேட் இல்லாமல் அரசே இறால் மீன்களை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

சுற்றுத்தலமான ராமேசுவரம் மற்றும் கீழக்கரை நகராட்சியில் பாதாளச்சாக்கடை அமைக்கப்படாதது நீண்ட நாள் பிரச்சினையாக உள்ளது. வழுதூரைச் சுற்றிலும் எரிவாயு மூலம் 300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் 5 தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் அமைந்துள்ளன.

நான்கு கலைக்கல்லூரிகள், ஒரு பொறியியல் கல்லூரி, 2 பாலிடெக்னிக்கல்லூரிகள், 2 மாலைநேர கலைக்கல்லூரிகள் உள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் இத்தொகுதியில் ஆழ்கடல் மீன்பிடி படகுகளை நிறுத்தும் வகையில் பாம்பன் அருகே குந்துகாலில் ரூ. 70 கோடி செலவில் நவீன மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்ட 2020 நவம்பர் முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் மண்டபம் தெற்கு கடற்கரை, தனுஷ்கோடி உள்ளிட்ட இடங்களில் மீன் இறங்கு தளங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்ட ராமநாதபுரம் சிறப்பு பொருளாதார மண்டலம் போன்றவை இன்னும் அமைக்கப்படவில்லை.

தேர்தல் வரலாறு

1952 முதல் 2016 வரை 15 முறை நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் 3 முறை, சுயேட்சை ஒரு முறை, திமுக 4 முறை, அதிமுக 6 முறை, மனிதநேய மக்கள் கட்சி ஒரு முறை வென்றுள்ளது.

கடந்த 2011 தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லாவும், கடைசியாக 2016-ல் அதிமுகவின் டாக்டர் எம்.மணிகண்டனும் வெற்றி பெற்றனர். இந்த தேர்தலில் டாக்டர் எம்.மணிகண்டன் 89365 வாக்குகளும், மனிதநேய மக்கள் கட்சியின் ஹெச்.ஜவாஹிருல்லா 56143 வாக்குகளும், தேமுதிகவின் சிங்கை ஜின்னா 16353 வாக்குகளும், பாஜகவின் துரை கண்ணன் 15029 வாக்குகளும் பெற்றனர்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,41,900

பெண்

1,42,412

மூன்றாம் பாலினத்தவர்

18

மொத்த வாக்காளர்கள்

2,84,330

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

டாக்டர் எம்.மணிகண்டன்

அதிமுக

2

எம்.எச்.ஜவாஹிருல்லா

மமக

3

சிங்கை ஜின்னா

தேமுதிக

4

துரை.கண்ணன்

பாஜக

5

டாக்டர் க.சிவக்குமார்

நாம் தமிழர்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு

2011

ஜவாஹிருல்லா

மமக

2006

K.அசன் அலி

இ.தே.கா

46.43

2001

A.அன்வர் ராசா

அதிமுக

50.21

1996

ரஹ்மான்கான்

திமுக

51.22

1991

M.தென்னவன்

அதிமுக

59

1989

M.S.K.இராஜேந்திரன்

திமுக

36.21

1984

T.இராமசாமி

அதிமுக

59.91

1980

T.இராமசாமி

அதிமுக

57.63

1977

T.இராமசாமி

அதிமுக

46.86

1971

சத்தியேந்திரன்

திமுக

1967

தங்கப்பன்

திமுக

1962

சண்முக ராஜேஸ்வர சேதுபதி

இந்திய தேசிய காங்கிரசு

1957

சண்முக ராஜேஸ்வர சேதுபதி

சுயேச்சை

1952

சண்முக ராஜேஸ்வர சேதுபதி

இந்திய தேசிய காங்கிரசு

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K. அசன் அலி

ஐ.என்.சி

66922

2

M. பழனிசாமி

எம்.டி.எம்.கே

53555

3

S. தர்மராஜ்

தே.மு.தி.க

12070

4

A. சத்யா

பி.ஜே.பி

5624

5

C. ராஜேந்திரன்

சுயேச்சை

1012

6

S. விஸ்வநாதன்

சுயேச்சை

974

7

R. முத்துக்குமார்

ஏ.ஐ.எப்.பி

628

8

R. வீரச்சேகரன்

ஜே.டி

590

9

V. மாணிக்கம்

சுயேச்சை

572

10

A.M. முருகேசன்

சுயேச்சை

558

11

K. ஜோதிபாலன்

டி.என்.ஜே.சி

517

12

E. அல்லாபிச்சை

சுயேச்சை

290

13

A. மணி

சுயேச்சை

281

14

B. சுரேஷ் குமார்

சுயேச்சை

200

15

S. கணேசன்

சுயேச்சை

192

16

K. இளங்கோவன்

சுயேச்சை

164

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

ஜவாஹிருல்லா

எம்.எ.எம்.எ.கே

65831

2

K. ஹாசன் அலி

காங்கிரஸ்

50074

3

D. கண்ணன்

பாஜக

28060

4

K. ராஜா உசேன்

ஐ.என்.எல்

3606

5

N. நம்புகுமார்

சுயேச்சை

3001

6

S. பெய்ரூஸ் கான்

சுயேச்சை

2731

7

KEP. உதயசூரியன்

சுயேச்சை

1682

8

M. மூர்த்தி

சுயேச்சை

1138

9

P. கருப்பையா

சுயேச்சை

1021

10

M. சேது

பகுஜன்

876

11

P. செல்வம்

சுயேச்சை

595

12

A. மணி

சுயேச்சை

532

13

R. செந்தில்குமார்

சுயேச்சை

437

14

A. கலையரசன்

சுயேச்சை

397

15

G. முருகேந்திரன்

சுயேச்சை

382

16

S. காளிதாஸ்

சுயேச்சை

340

160703

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x