95 - பரமத்தி-வேலூர்

ஜடார்பாளையம்
ஜடார்பாளையம்
Updated on
2 min read

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
சேகர் அதிமுக
மூர்த்தி திமுக
பிபி சாமிநாதன் அமமுக
கே.நட்ராஜ் மக்கள் நீதி மய்யம்
சு.யுவராணி நாம் தமிழர் கட்சி

கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பின்போது, கபிலர்மலை தொகுதி பரமத்தி வேலூர் என பெயர் மாற்றம் பெற்றது. மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இத்தொகுதியில் விவசாயம், கால்நடை வளர்ப்பும் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், லாரி, கோழிப்பண்ணைத் தொழில் உள்ளது. விவசாயத்தில் வெற்றிலை, வாழை மற்றும் கரும்பு உள்ளிட்ட பணப் பயிர்கள் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

பெரும்பான்மை சமுதாயம்:

கொங்குவேளாள கவுண்டர் பிரிவினர் கணிசமான அளவில் உள்ளனர். இதற்கடுத்தாற்போல் வன்னியர், பட்டியல் பிரிவு மக்கள் உள்ளனர்.

தொகுதியின் பிரச்சினைகள்:

வெற்றிலை விவசாயத்தை மையப்படுத்தி வெற்றிலை ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வந்தது. இந்த ஆராய்ச்சி மையம் திருச்சி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. பின், அங்கேயும் மூடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி மையம் மீண்டும் பரமத்தி வேலூருக்கு கொண்டு வரவேண்டும்.

அப்போது தான் வெற்றிலை சாகுபடியை அதிகரிப்பது, மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது, நோய் தாக்கம் கட்டுப்படுத்துவது உள்ளிட்டவற்றை அறிய முடியும் என, தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், இக்கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிக‌ள்:

பரமத்தி வேலூர் வட்டம் மற்றும் திருச்செங்கோடு வட்டத்துக்கு உட்பட்ட அகரம், கொன்னையார், பெரியமணலி, கோக்கலை, இலுப்பிலி, புஞ்சைபுதுப்பாளையம், கூத்தம்பூண்டி அக்ரஹாரம், புள்ளாகவுண்டம்பட்டி, கூத்தம்பூண்டி, லத்திவாடி, மானத்தி, மாவுரெட்டிபட்டி, தொண்டிபட்டி, முசிறி, புத்தூர் கிழக்கு மற்றும் பொம்மன்பட்டி கிராமங்கள் வருகின்றன. இதுபோல் நாமக்கல் வட்டத்தில், இளையபுரம் கிராமமும் பரமத்தி வேலுார் தொகுதியில் வருகின்றன.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,06,802

பெண்

1,13,009

மூன்றாம் பாலினத்தவர்

6

மொத்த வாக்காளர்கள்

2,19,097

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ரா. ராஜேந்திரன்

அதிமுக

2

கே. எஸ். மூர்த்தி

திமுக

3

க. முத்துக்குமார்

தேமுதிக

4

பொன். ரமேஷ்

பாமக

5

ச. ராஜ்குமார்

பாஜக

6

கோ. தெய்வசிகாமணி

நாம் தமிழர்

7

சி. பூபதி

கொமதேக

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

U. தனியரசு

அ.தி.மு.க

82682

2

C. வடிவேல்

பாமகே

51664

3

V. வைத்தியநாதன்

சுயேச்சை

6233

4

K. மனோகரன்

பி.ஜே.பி

2140

5

A. சிவசங்கர்

சுயேச்சை

2012

6

P. கோபால்

சுயேச்சை

1527

7

M. தங்கதுரை

ஐ.ஜே.கே

1447

8

S.R. பாலசுப்பிரமணியம்

சுயேச்சை

911

9

S. ரவிகுமார்

சுயேச்சை

712

10

N. ராமசாமி

சுயேச்சை

566

11

N. சுந்தரம்

சுயேச்சை

534

12

P. தங்கராஜ்

சுயேச்சை

452

13

R. முருகேசன்

சுயேச்சை

423

14

P. சீனிவாசன்

சுயேச்சை

402

151705

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in