Published : 11 Mar 2021 02:32 PM
Last Updated : 11 Mar 2021 02:32 PM

165 - வேதாரண்யம்

வேதாரண்யத்தில் முக்கியத்துவம் வாய்ந்த உப்பளத் தொழில்.

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
மணியன் நாகப்பட்டினம் அதிமுக
வேதரத்தினம் திமுக
பி.எஸ்.ஆறுமுகம் அமமுக
முகமது அலி மக்கள் நீதி மய்யம்
கு.இராசேந்திரன் நாம் தமிழர் கட்சி

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில், 94,275 ஆண் வாக்காளர்களும், 98,067 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 53 பேரும் ஆக மொத்தம் 1,92,395 வாக்காளர்கள் உள்ளனர்.

வேதாரண்யம் அடுத்த கோவில்பத்து கிராமத்தில் ஆசியாவிலேயே மிகப் பெரிய நெல் சேமிப்பு கிடங்கு ரூ.164 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த கிடங்கு கஜா புயலில் சின்னாமின்னமாகி விட்டது. அதை சீரமைத்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் சீரமைப்பு பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

வேதாரண்யத்தில், 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மா விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு ஆண்டு ஒன்றுக்கு 10 ஆயிரம் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே மாங்கூழ் தொழிற்சாலை தொடங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல் 5 ஆயிரம் ஏக்கரில் முல்லைப்பூ சாகுபடி நடைபெற்று வருகிறது. முல்லை பூ சாகுபடியை நம்பி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறார்கள். எனவே முல்லைப் பூவை மூலப்பொருளாக வைத்து செண்ட் நறுமண தைல தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வேதாரண்யம் தாலுகாவில் மட்டும் 9 ஆயிரம் ஹெக்டரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. வேதாரண்யத்தில் உப்பை மூலப்பொருளாக கொண்டு காஸ்டிக் சோடா தொழிற்சாலை தொடங்கப்படும் என்ற மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்தார். ஆனால் அத்திட்டம் இன்றளவும் நிறைவேற்றப்படவில்லை.

தலைஞாயிறு ஒன்றியத்தை தனி தாலுகாவாக அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் வெகுநாள் கோரிக்கை ஆட்சியாளர்களால் இன்று வரை கண்டு கொள்ளாமல் உள்ளது.

கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியில் ஓ.எஸ். மணியன் 60,836 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று அமைச்சராக உள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் பி.வி. ராஜேந்திரன் 37,838 வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளர் எஸ்.கே. வேதரத்தினம் 37,086 வாக்குகள் பெற்றார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

88,869

பெண்

91,369

மூன்றாம் பாலினத்தவர்

-

மொத்த வாக்காளர்கள்

1,80,238

2016 தேர்தலில் கலம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ஓ.எஸ்.மணியன்

அதிமுக

2

பி.வி.ராஜேந்திரன்

காங்கிரஸ்

3

தா.வைரவநாதன்

தேமுதிக

4

எஸ்.கே. வேதரத்தினம்

பா.ஜ.க

5

உஷா கண்ணன்

பாமக

6

கு.ராஜேந்திரன்

நாம் தமிழர்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1962 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

1962

என். எஸ். ராமலிங்கம்

காங்கிரஸ்

27200

1967

பி. வி. தேவர்

காங்கிரஸ்

25942

1971

எம். மீனாட்சி சுந்தரம்

திமுக

41787

1977

எம். மீனாட்சி சுந்தரம்

திமுக

29601

1980

எம். எஸ். மாணிக்கம்

அதிமுக

52311

1984

மீனாட்சி சுந்தரம்

திமுக

49922

1989

பி. வி. இராசேந்திரன்

காங்கிரஸ்

42060

1991

பி. வி. இராசேந்திரன்

காங்கிரஸ்

55957

1996

எஸ். கே. வேதரத்தினம்

திமுக

54185

2001

எஸ். கே. வேதரத்தினம்

திமுக

63568

2006

எஸ். கே. வேதரத்தினம்

திமுக

66401

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

1962

என். தர்மலிங்கம்

திமுக

17764

1967

எம். மீனாட்சி சுந்தரம்

திமுக

25678

1971

பி. சி. வேலாயுதம்

நிறுவன காங்கிரஸ்

17478

1977

எஸ். தேவராசன்

காங்கிரஸ்

28009

1980

எம். மீனாட்சி சுந்தரம்

திமுக

32656

1984

பி. வி. இராசேந்திரன்

காங்கிரஸ்

48646

1989

எம். மீனாட்சி சுந்தரம்

திமுக

36836

1991

எம். மீனாட்சி சுந்தரம்

திமுக

39089

1996

பி. சி. வி. பாலசுப்பரமணியம்

காங்கிரஸ்

31393

2001

ஆர். முத்தரசன்

இந்திய பொதுவுடமைக் கட்சி

48568

2006

ஒ. எஸ். மணியன்

அதிமுக

59870

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

எஸ்.கே வேதரத்தினம்

திமுக

66401

2

ஓ.எஸ் .மணியன்

அதிமுக

59870

3

வீரவினயகம்.B

தேமுதிக

1708

4

உதயகுமார்.M

பாஜக

1267

5

மகேந்திரன்.G

சமாஜ்வாதி கட்சி

1049

6

வேதரத்தினம்.G

சுயேச்சை

817

7

சூர்யா.T

பகுஜன் சமாஜ் கட்சி

631

8

கதிரேசன்.G

சுயேச்சை

444

9

ஸ்ரீனிவாசன்.M

சுயேச்சை

429

10

ராமமூர்த்தி.R

சுயேச்சை

368

132984

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

காமராஜ்.N.V

அதிமுக

53799

2

வேதரத்தினம்.S.K

சுயேச்சை

42871

3

சின்னதுரை.R

பாமக

22925

4

ஜெகன்.K

சுயேச்சை

2270

5

சண்முகவேல்.G

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா

2041

6

ராணி.M

சுயேச்சை

1991

7

ராம்சிங்.D

சுயேச்சை

1826

8

கார்த்திகேயன்.S

பாஜக

1260

9

வீரமணி.T.V.R

சுயேச்சை

838

10

சுப்ரமணியன்.P

சுயேச்சை

257

11

ராமமூர்த்தி.R

சுயேச்சை

246

12

சுப்ரமணியன்.V

சுயேச்சை

227

13

சந்திரமோகன்.V

சுயேச்சை

157

130708

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x