Published : 11 Mar 2021 02:43 PM
Last Updated : 11 Mar 2021 02:43 PM

194 - மதுரை (மேற்கு)

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
செல்லூர் ராஜூ அதிமுக
சி. சின்னம்மாள் திமுக
ஆர்.பாலச்சந்தர் அமமுக
முனியசாமி மக்கள் நீதி மய்யம்
செ.வெற்றிக்குமரன் நாம் தமிழர் கட்சி

கடந்த 1980-ம் ஆண்டில் எம்.ஜி.ஆரை வெற்றி பெற செய்த தொகுதி. பொன்.முத்துராமலிங்கம், செல்லூர் கே. ராஜூ, வளர்மதி ஜெபராஜ் ஆகிய 3 அமைச்சர் களையும், பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனை சபா நாயகராகவும் தேர்வு செய்த தொகுதி. 1967-ல் உருவான இத்தொகுதி மறுசீரமைப்பில் பெரும்பாலான பகுதிகள் வேறு தொகுதிக்கு மாற்றப்பட்டன. தற்போது மதுரை வடக்கு தாலுகாவுக்குட்பட்ட கோவில் பாப்பாக்குடி, பரவை, விளாங்குடி, மதுரை மேற்கு தாலு காவுக்குட்பட்ட கொடிமங்களம், மேலமாத்தூர், கீழ மாத்தூர், துவரிமான், அச்சம்பத்து உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் மதுரை மாநகராட்சிகுட்பட்ட 60 முதல் 72 வரை 13 வார்டுகள் இத்தொகுதிக்குள் இடம் பெறுகின்றன.

விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், நெசவாளர்கள் பரவலாக வசிக்கின்றனர். வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பது, ஆரப்பாளையம் பேருந்து நிலையம் மாற்றம், உத்தங்குடி-சமயநல்லூர் சுற்றுச்சாலை அமைப்பது உள்ளிட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

1967 முதல் 12 தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்துள்ளது. இ.கம்யூ, மா.கம்யூ, ஐக்கிய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சி தலா ஒருமுறையும், திமுக 3 முறையும், அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

2006-ம் ஆண்டு தேர்தலில் எஸ்.வி.சண்முகம்(அதிமுக) வெற்றி பெற்றார். 2007-ம் ஆண்டு இடைத்தேர்தலில் கே.எஸ்.கே.ராஜேந்திரன் (காங்கிரஸ்) வெற்றி பெற்றார். 2011-ம் ஆண்டு தேர்தலில் செல்லூர் கே.ராஜூ (அதிமுக) வெற்றி பெற்று தற்போது அமைச்சராக உள்ளார்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

மதுரை வடக்கு தாலுகா (பகுதி); கோயில்பாப்பகுடி கிராமம். பரவை (பேரூராட்சி) மற்றும் விளாங்குடி (பேரூராட்சி). புதிதாக உருவாக்கப்பட்ட மேற்கு தாலுகாவில் கொடி மங்கலம், மேலமாத்தூர், கீழமாத்தூர், கீழ்மதிகாட்டினான், துவரிமான், அச்சம்பத்து, ஏற்குடி, சம்பக்குடி மற்றும் புதுக்குளம் கிராமங்கள். மதுரை மாநகராட்சிவார்டு எண். 60 முதல் 72 வரை.

2016 தேர்தலில் களம் கண்ட வேட்பாளர்கள் விவரம்:

வேட்பாளர்கள்- 20 பேர்

வெற்றி- அதிமுக

1. அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அதிமுக-82,529

2. கோ.தளபதி திமுக- 66,131

3. யூ. வாசுகி கம்யூனிஸ்ட்- 19,991

4. சிசிகுமார் பாஜக-5,705

5. திருநாவுக்கரசு என்டிகே- 3454

சுயேட்சை, மற்றவர்கள்-15

வாக்குவித்தியாசம்; 16,398.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,46,162

பெண்

1,49,793

மூன்றாம் பாலினத்தவர்

5

மொத்த வாக்காளர்கள்

2,95,960

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு (%)

2011

ராஜு.K

அதிமுக

59.64

2006

S.V.ஷண்முகம்

அதிமுக

43.66

2001

வளர்மதி ஜெபராஜ்

அதிமுக

48.06

1996

பி. டி. ஆர். பழனிவேல்ராசன்

திமுக

62.42

1991

S.V.ஷண்முகம்

இ.தே.கா

63.35

1989

பொன். முத்துராமலிங்கம்

திமுக

44.29

1984

பொன். முத்துராமலிங்கம்

திமுக

51.24

1980

M.G.இராமச்சந்திரன்

அதிமுக

59.61

1977

T.P.M.பெரியசாமி

அதிமுக

43.06

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

சண்முகம்.S.V

அதிமுக

57208

2

பெருமாள்.N

காங்கிரஸ்

53741

3

மணிமாறன்.S

தேமுதிக

14527

4

பகவதி.P

பாஜக

1851

5

ராமகிருஷ்ணன்.B

சுயேச்சை

1261

6

சரவணன்.L.K

அனைத்திந்திய பார்வார்டு பிளாக்

814

7

கல்யாணசுந்தரம்.T

ஐக்கிய ஜனதா தளம்

422

8

செந்தூர்பன்டியன்.S

சுயேச்சை

288

9

பெருமாள்.D

சுயேச்சை

243

10

முத்துசாமி.P

சுயேச்சை

212

11

சக்கணன்.V

சுயேச்சை

162

12

தமிழ்மாறன்.R

சக்தி பாரத தேசம்

158

13

ராமதாஸ்.M

ஹிந்து மகாசபா

143

131030

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

ராஜு.K

அதிமுக

94798

2

தளபதி.G

திமுக

56037

3

ராஜரத்தினம்.M

பாஜக

3149

4

பால்பாண்டி.M

சுயேச்சை

2959

5

மூர்த்தி.P

இந்திய ஜனநாயக கட்சி

897

6

வெங்கடேசன்.M

சுயேச்சை

407

7

முருகன்.M

சுயேச்சை

247

8

வீரதுரை.S

சுயேச்சை

234

9

பூமிநாதன்.M

சுயேச்சை

222

158950

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x