Published : 11 Mar 2021 13:23 pm

Updated : 03 Apr 2021 09:02 am

 

Published : 11 Mar 2021 01:23 PM
Last Updated : 03 Apr 2021 09:02 AM

51 - ஊத்தங்கரை (தனி)

51
ஊத்தங்கரை தொகுதி பாம்பாறு அணை.

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
தமிழ்செல்வம் அதிமுக
ஜே.எஸ்.ஆறுமுகம் (காங்கிரஸ்) திமுக
ஆர்.பாக்யராஜ் அமமுக
கே.முருகேஷ் மக்கள் நீதி மய்யம்
க.இளங்கோவன் நாம் தமிழர் கட்சி


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 1977-ம் ஆண்டுக்கு முன்பு ஊத்தங்கரை தொகுதியாக இருந்தது. பின்னர் 1977-ம் ஆண்டு தொகுதி நீக்கப்பட்டு, புதிதாக பர்கூர் சட்டப்பேரவை தொகுதி உருவாக்கப்பட்டது. ஊத்தங்கரை தொகுதியில் இருந்த பகுதிகள் 2 ஆக பிரிக்கப்பட்டு ஒரு பகுதி பர்கூர் சட்டமன்ற தொகுதியிலும், மற்றொரு பகுதி அரூர் (தனி) தொகுதியிலும் சேர்க்கப்பட்டது. 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஊத்தங்கரை (தனி) தொகுதி கடந்த 2011-ம் ஆண்டு உதயமானது. விவசாயம் முக்கிய தொழில்.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்:

ஊத்தங்கரை தொகுதியில் ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளும் சேர்க்கப்பட்டுள்ளது. போச்சம்பள்ளி தாலுகாவின் சில பகுதிகளும் தொகுதியில் இணைந்துள்ளது. மேலும் ஊத்தங்கரை மற்றும் மத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகள் இந்த தொகுதியில் இணைந்துள்ளன.

பெரும்பான்மை சமுதாயம்:

தொகுதியில் அதிக அளவில் தாழ்த்தப்பட்ட இனத்தவரும், அதற்கு அடுத்தபடியாக வன்னியர்கள், முஸ்லீம்கள், கொங்கு வேளாளர்கள் என பல்வேறு இனத்தினர் வசித்து வருகின்றனர்.

தொகுதியின் பிரச்சினைகள்:

இந்த தொகுதியில் சர்க்கரை ஆலை நிறுவ வேண்டும். பரசுன் ஏரியை சீர்படுத்த வேண்டும். கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை பல ஆண்டுகளாக சாலை சீர் செய்யப்படாமல் மோசமான நிலையில் உள்ளது.

ஊத்தங்கரையை அடுத்துள்ள பாம்பாறு அணை அருகே பழுதடைந்த மேம்பாலத்தில் அடிக்கடி வாகனங்கள் கீழே விழுந்து, உயிரிழப்பு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. புதிய பாலம் கட்டும் பணி முடிந்தும், பயன்பாட்டிற்கு வரவில்லை. ஜவ்வாது மலை அடிவாரத்தில், கடப்பாறை ஆற்றின் குறுக்கே அணையைக் கட்டி, பாசன வசதியை மேம்படுத்தப்படுத்திட வேண்டும் என்பது கோரிக்கையாகவே உள்ளது.

கல்லூரி வசதி இல்லாததால், பெண்களின் கல்லூரி படிப்பு, கனவாகவே உள்ளது. எனவே ஊத்தங்கரையில் அரசு கலைக்கல்லூரி ஒன்றை துவக்க வேண்டும் என்ற நெடுங்கால கோரிக்கை உள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததால், அவர்கள் அண்டை மாவட்டங்களுக்கும், அண்டைய மாநிலங்களுக்கும் வேலைதேடி செல்கின்றனர். இங்கு தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

அறுவை சிகிச்சை அரங்குடன் விரிவாக்கம் செய்யப்பட்ட 24 மணி நேர மருத்துவமனை வசதி, போன்றவறை அமைக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது.

தென்பெண்ணை ஆற்றில் இருந்து 33 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டம் அறிவிக்கப்பட்டு நிலம் கையகப்படுத்த ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், பணிகள் தொடங்கப்படவில்லை.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

116792

பெண்

115020

மூன்றாம் பாலினத்தவர்

56

மொத்த வாக்காளர்கள்

231868

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

நா. மனோரஞ்சிதம்

அதிமுக

2

எஸ். மாலதி

தி.மு.க

3

சி.கனியமுதன்

விசிக

4

த.நா.அங்குத்தி

பாமக

5

எஸ்.ஏ.பாண்டு

பாஜக

6

தி.வெங்கடேசன்

நாம் தமிழர்

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்ற தேர்தல்

51. ஊத்தங்கரை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

மனோரஞ்சிதம்

அ.தி.மு.க

90381

2

முனியம்மாள்

வி.சி.கே

51223

3

S. வேடியப்பன்

சுயேட்சை

4134

4

C.K. சங்கர்

பி.ஜே.பி

2549

5

V. தேவராஜன்

சுயேட்சை

2138

6

P. வினோத்குமார்

சுயேட்சை

1584

7

முருகன்

சுயேட்சை

1382

மொத்தம்

153391



சட்டப்பேரவை தேர்தல்தமிழக தேர்தல் களம்ஊத்தங்கரை தொகுதிதேர்தல் 2021TN Assembly Election 2021Assembly Election 2021Tamilnadu Assembly Election 2021தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021சட்டமன்றத் தேர்தல் 2021திமுகஅதிமுகமக்கள் நீதி மய்யம்தேமுதிகமதிமுகஅமமுகமு.க.ஸ்டாலின்எடப்பாடி பழனிசாமிகமல்கமல்ஹாசன்DmkAdmkMNMMakkal needhi maiamDMDKMkstalinEdapadi palanisamyDhinakaranVaikoKamalKamal haasanKhushbooGautamiLmuruganகுஷ்புகவுதமிஎல்.முருகன்நாம் தமிழர் கட்சிSeemanசீமான்TN ElectionTN Election 2021#tnelection2021

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x