Published : 11 Mar 2021 12:54 pm

Updated : 03 Apr 2021 08:49 am

 

Published : 11 Mar 2021 12:54 PM
Last Updated : 03 Apr 2021 08:49 AM

154 - பண்ருட்டி

154
பண்ருடிக்கு பெருமை சேர்க்கும் பலாப்பழம்.

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
சொரத்தூர் ராஜேந்திரன் அதிமுக
டி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) திமுக
பி.சிவகொழுந்து அமமுக
ஜெயலாணி மக்கள் நீதி மய்யம்
இர.சுபாஷினி நாம் தமிழர் கட்சி


பண்ருட்டி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது முக்கனிகளில் ஒன்றான பலாவும், பணப் பயிராக கருத்தப்படும் முந்திரியும் தான். கடலூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிக்குள் அடங்கும் பண்ருட்டி சென்னை-கும்பகோணம் சாலை மார்க்கத்தில் உள்ளது. வளமான செம்மண் பூமி கொண்ட பண்ருட்டி முழுக்க விவசாயம் சார்ந்த தொகுதி.குடிசைத் தொழிலாக மாறியுள்ள முந்திரித் தொழில் இப்பகுதி மக்களுக்கு முக்கிய வருவாயை அளிக்கிறது. அதேநேரத்தில் கோடை காலத்தில் காய்க்கும் பலாவும், இப்பகுதி விவசாயிகளுக்கு கணிசமான வருவாயை ஈட்டித் தருகிறது என்றால் மிகையில்லை.

மிகவும் பின்தங்கிய பகுதியாக கருதப்படும் பண்ருட்டியில் பழமைவாய்ந்த திருவதிகை வீரட்டானஸ்வரர் கோயில் பண்ருட்டி நகருக்கு ஆன்மிக பெருமை சேர்த்துவருகிறது.ஒரு அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது. விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்கான மையமாகவும் பண்ருட்டி திகழ்வதால், மாவட்டத்திலேயே மொத்த வியபாரத்திற்கான சிறப்பு மையமாகவும் திகழ்கிறது.

மண்சார்ந்த விளைபொருள்களின் உற்பத்தியாளர்களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கு இணையாக மரம் சார்ந்த கைவினைப் பொருள் உற்பத்தியில் தனித்துவத்துடன் கூடிய சிற்பக் கலைஞர்கள் மற்றும் இசைக் கருவி உற்பத்தியாளர்கள் உருவாகி வருவது தொழில் அபிவிருத்திக்கு உதாரணமாக கூறலாம்.

இத்தனை சிறப்புகள் கொண்டதாக விளங்கிய போதிலும் மிகவும் பின்தங்கியப் பகுதியாக கருதப்படும் பண்ருட்டியில் அரசு தொழில் பயிற்சி நிறுவனம் மட்டுமே செயல்படுகிறது.அதேநேரத்தில் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது

2011-ல் நடைபெற்ற தொகுதி மறு சீரமைப்பின் பண்ருட்டி ஒன்றியத்தைச் காடாம்புலியூர், பேர்பெரியான்குப்பம், பனிக்கன்குப்பம், மருங்கூர் உள்ளிட்ட ஊராட்சிகள் நெய்வேலித் தொகுதிக்கு இடம்பெயர்ந்ததால், பணிக்கன்குப்பத்தில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி பண்ருட்டி வாசிகளுக்கே அதிகம் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் நெல்லிக்குப்பம் தொகுதியிலிருந்த நகராட்சி, மற்றும் வருவாய் கிராமங்கள் இத்தொகுதியில் இணைக்கப்பட்டதால், இத்தொகுதியில் பண்ருட்டி, அண்ணாகிராமம் என இரு ஒன்றியங்களும், பண்ருட்டி மற்றும்

நெல்லிக்குப்பம் என நகராட்சிகளும் மேல்பட்டாம்பாக்கம் மற்றும் தொரப்பாடி பேரூராட்சியும் உள்ளது.

கிராமப் புறங்களையே உள்ளடக்கிய இத்தொகுதியின் வழியாக செல்லும் தென்பெண்ணையாறு மற்றும் கெடிலம் ஆறு அரசுக்கு வருவாய் ஈட்டித் தந்த போதிலும், பெரு முதலீட்டிலான அரசு சார்ந்தோ அல்லது தனியார் தொழில் நிறுவனங்களோ இல்லாததால் இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் தினக் கூலிகளாகவே தொடர்கின்றனர். 90 சதவிகிதம் பேர் முந்திரி விவசாயத் தொழிலை சார்ந்துள்ளனர்.கட்டுமானத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உள்ளனர்.

தொகுதி பிரச்சினைகள்

கடலோர மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் மையப்பகுதியில் இந்தத் தொகுதி அமைந்துள்ளதால், அடிக்கடி இயற்கை சீற்றத்துக்கு ஆளாகிவருவது தொடர்கிறது. 2011-ல் ஏற்பட்ட தானே புயல், 2015-ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக முந்திரி விவசாயிகள் பெரும் சோகத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். மணல் குவாரிகளால் இப்பகுதியில் நீர்வள ஆதாரம் குறைந்து கொண்டே போவதாக தொகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர். கிராமச் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் அவை சீர்செய்யப்படாமல் உள்ளது,

பண்ருட்டி சட்டப்பேரவை தொகுதியில் 1952 முதல் 2016-ம் ஆண்டு வரை நடந்த 14 தேர்தல்களில் அதிமுக 4 முறையும்,திமுக, பாமக தலா 3 முறையும், காங்கிரஸ், தேமுதிக மற்றும் சுயேட்சை உள்ளிட்டவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2011-ல் நடைபெற்ற தேர்தலில் தேமுதிக சார்பில் பி.சிவக்கொழுந்தும், 2016-ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் சத்யா பன்னீர்செல்வமும் வெற்றிபெற்றனர்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:

பண்ருட்டி தாலுகா (பகுதி) பைத்தாம்பாடி, காவனூர், உளுந்தமாபட்டு, எனாதிரிமங்கலம், குறத்தி, அக்கடவல்லி, கண்டரக்கோட்டை (வடக்கு), புலவனூர், மேல்குமாரமங்கலம் (தெற்கு), பகண்டை, கொங்கராயனூர். கோழிப்பாக்கம், மாளிகைமேடு, திராசு, பூண்டி, திருத்துறையூர், கயப்பாக்கம், கரும்பூர், அவியனூர், அழகுபெருமாள்குப்பம், உறையூர், விரிஞ்சிப்பாக்கம், பனப்பாக்கம், பூங்குணம். மேல்கவரப்பட்டு, கீழ்கவரப்பட்டு, பெருமாள்நாயக்கன்பாளையம், சித்தரசூர், பாலூர், எழுமேடு, லஷ்மிநாராயணபுரம், கணிசப்பாக்கம், கோட்டம்பாக்கம். பண்டரக்கோட்டை, மணப்பாக்கம், அங்குச்செட்டியாளையம், சன்னியாசிபேட்டை, எய்தனூர், அரியிருந்தமங்கலம். கந்தரவாண்டி, கீழருங்குணம், கீழ்க்குப்பம், பல்லவராயநத்தம்.

பலாப்பட்டு, சிறுநங்கைவாடி, சாத்டிப்பட்டும் சேமக்கோட்டை, கொளப்பாக்கம், மற்றும் வீரப்பெருமாநல்லூர் கிராமங்கள், மேல்பட்டாம்பாக்கம் (பேரூராட்சி) நெல்லிக்குப்பம் (நகராட்சி) பண்ருட்டி (நகராட்சி) மற்றும் தொரப்பாடி (பேரூராட்சி)

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,11,406

பெண்

1,14,841

மூன்றாம் பாலினத்தவர்

10

மொத்த வாக்காளர்கள்

2,26,257

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

பி.சத்யா

அதிமுக

2

பொன்.குமார்

விவசாய தொழிலாளர்கள் கட்சி- திமுக

3

பி.சிவக்கொழுந்து

தேமுதிக

4

ஏ.தர்மலிங்கம்

பாமக

5

எஸ்.ஆர்.சரவணன்

ஐஜேகே

6

எஸ்.மெகபூபாஷா

நாம் தமிழர்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )

ஆண்டு

வெற்றிபெற்றவர்

கட்சி

1952

ராதாகிருஷ்ணன்

தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி

1967

பண்ருட்டி இராமச்சந்திரன்

இந்திய தேசிய காங்கிரஸ்

1971

பண்ருட்டி இராமச்சந்திரன்

திமுக

1977

பண்ருட்டி இராமச்சந்திரன்

அதிமுக

1980

பண்ருட்டி இராமச்சந்திரன்

அதிமுக

1984

பண்ருட்டி இராமச்சந்திரன்

அதிமுக

1989

நந்தகோபால கிருஷ்ணன்

திமுக

1991

பண்ருட்டி இராமச்சந்திரன்

பாட்டாளி மக்கள் கட்சி

1996

ராமசாமி

திமுக

2001

வேல்முருகன்

பாட்டாளி மக்கள் கட்சி

2006

வேல்முருகன்

பாட்டாளி மக்கள் கட்சி

2011

சிவகொழுந்து

தேமுதிக

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

வேல்முருகன்.T

பாமக

54653

2

ராஜேந்திரன்.R

அதிமுக

54505

3

ராமச்சந்திரன்.S

தேமுதிக

30133

4

பாலு.S

சுயேச்சை

1366

5

குமரகுரு.V.J

சுயேச்சை

793

6

செல்வகுமார்.R.M

பாஜக

713

7

ராமமூர்த்தி.G

பகுஜன் சமாஜ் கட்சி

494

8

கமலகண்ணன்.C

சுயேச்சை

491

143148

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

சிவகொழுந்து.P

தேமுதிக

82187

2

சபா ராஜேந்திரன்

திமுக

71471

3

சங்கர்.R

இந்திய ஜனநாயக கட்சி

1570

4

தெய்விகதாஸ்.M

புரட்சி பாரதம்

1155

5

செல்வகுமார்.R.M

பாஜக

1064

6

வேல்முருகன்.N.S

சுயேச்சை

943

7

ஐய்யப்பன்.K

பகுஜன் சமாஜ் கட்சி

859

8

குப்புசுவாமி.K

சுயேச்சை

761

9

கங்காதரன்.D

சுயேச்சை

711

10

குமார்.T

சுயேச்சை

458

11

வெங்கடேசன்.G.K

சுயேச்சை

264

161443சட்டப்பேரவைத் தேர்தல்தமிழக தேர்தல் களம்பண்ருட்டி தொகுதிElection 2021தேர்தல் 2021TN Assembly Election 2021TN Assembly Elections 2021Assembly Elections 2021Assembly Election 2021Tamilnadu Assembly Election 2021Tamilnadu Assembly Elections 2021தமிழக சட்டமன்றம்சட்டப்பேரவைத் தேர்தல் 2021தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021சட்டமன்றத் தேர்தல் 2021தமிழக முதல்வர்திமுகஅதிமுகமக்கள் நீதி மய்யம்தேமுதிகசமத்துவ மக்கள் கட்சிமதிமுகஅமமுகமு.க.ஸ்டாலின்எடப்பாடி பழனிசாமிதினகரன்வைகோகமல்கமல்ஹாசன்DmkAdmkMNMMakkal needhi maiamDMDKMkstalin

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x