Published : 11 Mar 2021 12:55 pm

Updated : 03 Apr 2021 08:48 am

 

Published : 11 Mar 2021 12:55 PM
Last Updated : 03 Apr 2021 08:48 AM

151 - திட்டக்குடி (தனி)

151

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
பெரியசாமி (பாஜக) அதிமுக
சி.வி.கணேசன் திமுக
ஆர்.உமாநாத் அமமுக
பிரபாகரன் மக்கள் நீதி மய்யம்
ந.காமாட்சி நாம் தமிழர் கட்சி


கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் தனித்தொகுதியாக திகழும் திட்டக்குடி,கடலூர் மாவட்டத்தில் எல்லைப் பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியப் பகுதியாக அமைந்துள்ளது.

இத்தொகுதி,கடந்த 1952-ல் விருத்தாசலம் தொகுதியிலிருந்து, பின்னர் 1957 மற்றும் 1962 பொதுத் தேர்தல்களில் நல்லூர் தொகுதியாகவும், 1967 முதல் 2006 வரை மங்களூர் (தனி) தொகுதியாக இருந்து வந்தது.2011-ல் தொகுதி மறு சீரமைப்பின் காரணமாக திட்டக்குடி தொகுதியாக மாறியது.

தொகுதியின் பெயர் மாறியதே தவிர மற்றபடி மங்களூர் தொகுதியில் இடம்பெற்றிருந்த கிராமங்கள், ஒன்றியங்கள் அனைத்தும் திட்டக்குடி தொகுதியில் இடம்பெற்றுள்ளது.திட்டக்குடி, பெண்ணாடம் பேரூராட்சிகள், மங்களூர் ஒன்றியத்தில் உள்ள 66 ஊராட்சிகளும், நல்லுார் ஒன்றியத்தில் 35 ஊராட்சிகளை உள்ளடக்கியது.

வறண்ட பூமி

விவசாயமே பிரதானமாக விளங்கும் இப்பகுதி மானாவாரி பகுதியாக இருந்தபோதிலும், திட்டக்குடி-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய கீழ்செருவாய் கிராமத்தில் இத்தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள வெலிங்கடன் ஏரியின் நீராதாரத்தைக் கொண்டு, கரும்பு, உளுந்து, மணிலா உள்ளிட்டவை பயிரிடப்பட்டு வந்தது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஏரிக்கு போதுமான தண்ணீர் வரத்து இல்லாதாதல், அப்பகுதி மக்கள் மாற்று விவசாயத்துக்கு தள்ளப்பட்டு, பருத்தி மற்றும் சோளம் உள்ளிட்டவற்றை பயிரிட்டு வருகின்றனர்.

புலம் பெயர் தொழிலாளர்கள்

விவசாயத் தொழிலாளர்களும், கட்டுமானத் தொழிலாளர்களும் அதிக நிறைந்த இப்பகுதியில் அரசு சார்ந்த மற்றும் தனியார் நிறுவனங்கள் ஏதுமில்லாததால், இப்பகுதி இளைஞர்கள் மட்டுமின்றி தம்பதியினரும் புலம் பெயர்ந்து அயல்நாடுகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கு வேலைதேடிச் செல்லும் நிலை உள்ளது.

இத்தொகுதிக்குட்பட்ட பெண்ணாடத்தில் தனியார் சர்க்கரை ஆலையும், சிமெண்ட் ஆலைகளும் இயங்கிவருகிறது.வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்ட அருள்மிகு அசனாம்பிகை உடனுறை அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில் உள்ளது.ஒரு அரசுக் கலைக் கல்லூரி இயங்கிவருகிறது. 2006 முதல் 2011 வரையிலான திமுக,ஆட்சியில் துவக்கப்பட்ட இறையூர் ரயில்வே மேம்பாலம், வெள்ளாற்றின் குறுக்கே முருகன்குடி, திட்டக்குடி பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டது. நீண்ட காலத்துக்குப் பிறகும் கடந்த ஆண்டு திட்டக்குடியில் அரசு கல்லூரி துவங்கப்பட்டு புதிய கட்டடம் கட்டித் தரப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகமும் கட்டப்பட்டுள்ளது.

வானம் பார்த்த பூமியான இத்தொகுதியில் குறைகளுக்கு குறைவில்லை.தொகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாதது, விவசாயமே வாழ்வாதாரமாக கொண்ட இத்தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான வெலிங்டன் ஏரி தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். பாசன மற்றும் ஏரிகளை துார் வாரி சீரமைக்க வேண்டும்.கரும்பு சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கும் ஆலை துவங்க வேண்டும், தேசிய நெடுஞ்சாலையில் நவீன வசதிகளுடன் அவசர சிகிச்சை மையம் துவங்க வேண்டும். ஆவட்டி - கல்லூர் கூட்டுரோடு பகுதியில் மேம்பாலம், நிதிநத்தம், மேலூர், புலிவலம் கிராமங்கள் மழைக் காலங்களில் தீவாக மாறி துண்டிக்கப்படுவதைத் தடுக்க மேம்பாலங்கள், பெண்ணாடத்தில் தீயணைப்பு நிலையம், வேப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி போன்ற கோரிக்கைகளை இப்பகுதி மக்கள் முன்வைக்கின்றனர்.

2011-ம் ஆண்டு உருவான திட்டக்குடி தனி சட்டப்பேரவை தொகுதியில் முதன்முறையாக தேமுதிகவைச் சேர்ந்த தமிழழகன் தேர்வு செய்யப்பட்டார். அவரும் தேர்வு செய்யப்பட்டு ஓராண்டிலேயே தேமுதிக மீது அதிருப்தி ஏற்பட்டதையடுத்து ஆளும் அதிமுக ஆட்சிக்கு ஆதரவாக மாறினார். தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் ஐக்கியமாகியமானர் தமிழழகன்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

திட்டக்குடி தாலுகா

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,01,900

பெண்

1,04,160

மூன்றாம் பாலினத்தவர்

1

மொத்த வாக்காளர்கள்

2,06,061

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

பி.அய்யாசாமி

அதிமுக

2

வி.கணேசன்

திமுக

3

எஸ்.சசிக்குமார்

தேமுதிக

4

இ.அர்ச்சுணன்

பாமக

5

ஜே.கலையரசன்

ஐஜேகே

6

டி.ஊமைத்துரை

நாம் தமிழர்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

தமிழழகன்.K

தேமுதிக

61897

2

சிந்தனைசெல்வன்.M

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

49255

3

பழனி அம்மாள்.P

சுயேச்சை

8577

4

உலகநாதன்.C

சுயேச்சை

5637

5

இளங்கோ.T

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா

4312

6

கலைஅரசன்.J

இந்திய ஜனநாயக கட்சி

3486

7

முத்துகுமரன்.K

சுயேச்சை

2131

8

சுமன்.A

சுயேச்சை

1885

9

தங்கமணி.M

பகுஜன் சமாஜ் கட்சி

1245

10

தனசேகர்.V

சுயேச்சை

836

139261சட்டப்பேரவைத் தேர்தல்தமிழக தேர்தல் களம்திட்டக்குடி தனி தொகுதிElection 2021தேர்தல் 2021TN Assembly Election 2021TN Assembly Elections 2021Assembly Elections 2021Assembly Election 2021Tamilnadu Assembly Election 2021Tamilnadu Assembly Elections 2021தமிழக சட்டமன்றம்சட்டப்பேரவைத் தேர்தல் 2021தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021சட்டமன்றத் தேர்தல் 2021தமிழக முதல்வர்திமுகஅதிமுகமக்கள் நீதி மய்யம்தேமுதிகசமத்துவ மக்கள் கட்சிமதிமுகஅமமுகமு.க.ஸ்டாலின்எடப்பாடி பழனிசாமிதினகரன்வைகோகமல்கமல்ஹாசன்DmkAdmkMNMMakkal needhi maiamDMDKMkstalin

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x