Published : 11 Mar 2021 01:25 PM
Last Updated : 11 Mar 2021 01:25 PM

121 - சிங்காநல்லூர்

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
ஜெயராம் அதிமுக
கார்த்திக் திமுக
எஸ்.ஆர்.செல்வா அமமுக
டாக்டர் ஆர்.மகேந்திரன் மக்கள் நீதி மய்யம்
இரா.நர்மதா நாம் தமிழர் கட்சி

கோவை மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் தொகுதி, மாநகராட்சிப் பகுதியை மையப்படுத்தி அமைந்துள்ளது. இந்தத் தொகுதி தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரிசையில் 121-வது இடத்தில் உள்ளது. மாவட்டத்தின் பிரதான சாலைகளில் ஒன்றான அவிநாசி சாலையின் பெரும்பகுதி சிங்காநல்லூர் தொகுதியில் உள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள் என ஏராளமான கல்வி நிலையங்கள், முக்கிய மருத்துவமனைகள், ஜாப் ஆர்டர் அடிப்படையில் இயங்கும் ஏராளமான குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிரைண்டர், மிக்சி, மோட்டார், பம்பு செட் தயாரிப்பு நிறுவனங்கள், பஞ்சாலைகள் ஆகியவை நிறைந்த தொகுதியாக கோவை சிங்காநல்லூர் தொகுதி உள்ளது.

மாவட்டத்தின் முக்கிய பேருந்து நிலையங்களில் ஒன்றான சிங்காநல்லூர் பேருந்து நிலையம் இத்தொகுதியில் தான் அமைந்துள்ளது. டெல்டா பகுதி, தென் மாவட்டங்களை வரும் மக்களை வரவேற்கும் முக்கிய பேருந்து நிலையமாக சிங்காநல்லூர் பேருந்து நிலையம் உள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையும் இந்தத் தொகுதியில் தான் அமைந்துள்ளன. இந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ வாக திமுகவைச் சேர்ந்த நா.கார்த்திக் உள்ளார். ஒரு காலத்தில் சிங்காநல்லூர் தொகுதியின் முக்கிய அடையாளமாக இருந்த பஞ்சாலைகளின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது.

இந்தத் தொகுதிக்குட்பட் ஆவாரம்பாளையம், பீளமேடு, பாப்பநாயக்கன்பாளையம், நவ இந்தியா சாலை, எல்லைத் தோட்டம் சாலை போன்றவற்றில் ஏராளமான குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்கு பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். இத்தொகுதியின் பெரும்பாலான இடங்கள் மாநகராட்சிப் பகுதியில் உள்ளன. நாயக்கர், கவுண்டர், தேவாங்கர், குரும்பர் ஆகிய சமூக மக்கள் பெரும்பான்மையாக இத்தொகுதியில் வசித்தாலும், இதர சமூகத்தைச் சேர்ந்த மக்களும் குறிப்பிட்ட சதவீதம் வசிக்கின்றனர்.

கோரிக்கைகள்

கடந்த 2010-11-ம் ஆண்டு காலத்தில் தொழில்துறையினரின் மின்வெட்டு பிரச்சனை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.தற்போது மின் வெட்டு பிரச்சினை தீர்ந்தாலும், மின்வெட்டு காரணமாக பறிபோன ஜாப் ஆர்டர்கள் இன்னும் மீண்டும் முழுமையாக தொழில்துறையினருக்கு கிடைக்கவில்லை. தொழிற்பேட்டை ஏற்படுத்த வேண்டும். தொழில்துறையினருக்கு தடையின்றி தொழில் செய்ய வங்கிக் கடன் குறைந்த வட்டித் தொகையில் எளிதாக கிடைக்க வேண்டும், உற்பத்திப் பொருட்களுக்கான மூலப் பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இத்தொகுதி தொழில்துறையினரின் முக்கிய கோரிக்கையாகும்.

பிரதான சாலையான அவிநாசி சாலையைத் தவிர, இந்தத் தொகுதியில் உள்ள மற்ற அனைத்து சாலைகளும் வாகன ஓட்டுநர்களை பதம் பார்த்து விடும் அளவுக்கு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. எதிர்க்கட்சி எம்எல்ஏ உள்ள தொகுதி என்பதால் ஆளும் கட்சியினர் தொகுதி மேம்பாட்டில் கவனம் செலுத்தாமல் புறக்கணித்து விட்டனர் என்ற கோபமும் இத்தொகுதி மக்களிடம் உள்ளது. குண்டும், குழிகளாக காணப்படும் சாலைகளை விரைவில் சீரமைக்க வேண்டும், குப்பை அகற்றுதல், சாக்கடைகளை முறையாக தூர் வாரி சுத்தம் செய்தல் போன்ற அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசு முக்கியத்துவம் தர வேண்டும் எனவும், அதிக இடைவெளி நாட்களுடன் உள்ள குடிநீர் விநியோகத்தை குறைந்த இடைவெளியில் சீரானமுறையில் விநியோகிக்க வேண்டும் எனவும் இத்தொகுதி மக்கள் முக்கிய கோரிக்கையாக வைக்கின்றனர்.

பாதாள சாக்கடைத் திட்டப்பணி இத்தொகுதிக்குட்பட்ட தொடங்கப்பட்ட பெரும்பாலான இடங்களில் முடிக்கப்பட்டு விட்டன. இருப்பினும், ஒண்டிப்புதூரில் 3-ம் கட்ட பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக ரூ.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் முறையாக, முழுமையாக பயன்பாட்டுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதும், தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பல லட்சம் மதிப்பீட்டில் ஒண்டிப்புதூரில் கட்டப்பட்ட தெருநாய்களுக்கான கருத்தடை அறுவை மையத்தை விரைவில் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டதும் இத்தொகுதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

தவிர, நீண்ட காலகமாக கிடப்பில் போடப்பட்ட எஸ்.ஐ.எச்.எஸ் காலனி ரயில்வே மேம்பாலம், தண்ணீர் பந்தல் சாலை ரயில்வே மேம்பாலம் போன்றவற்றை விரைவில் முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். அதேசமயம், இத்தொகுதிக்குட்பட்ட திருச்சி சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் கட்டப்பட்டு வருவது, இழுபறியாக இருந்த பீளமேடு- காந்திமாநகர் சாலையை இணைக்கும் ரயில்வே மேம்பாலம் கட்டி முடித்தது, ஆவாரம்பாளையம் சாலை - கணபதி இணைப்பு ரயில்வே மேம்பாலம், நவ இந்தியா சாலை - காந்திபுரம் இணைப்பு உயர்மட்டப் பாலம் ஆகியவை தொகுதி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.

பல லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட , திருச்சி சாலை சிங்காநல்லூரில் உள்ள படகு இல்லம் தற்போது பயன்படுத்தமுடியாமல் உள்ளது. சிங்காநல்லூர் குளம் கழிவுநீர் கலப்பாலும், ஆகாயத் தாமரைகள் பரவலாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவிநாசி சாலையில் நவ இந்தியா, எஸ்.ஓ.பங்க், பீளமேடு பயனீர் மில் சாலை, ஹோப்காலேஜ் ஆகிய இடங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டுநர்களை பாடாய் படுத்தி விடுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.1,300 கோடி மதிப்பில் இந்த தொகுதிக்குட்பட்ட அவிநாசி சாலையில் உயர்மட்டப் பாலம் கட்டப்படுவது மக்களிடம் வரவேற்பு உள்ளது. இப்பணியை விரைவில் முடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பம்புசெட், மோட்டார் உற்பத்தியாளர்களுக்கு பயன்படும் வகையில் இலவச பம்புசெட் பரிசோதனைக் கூடம் அமைத்துத் தர வேண்டும், ஏராளமான தனியார் கல்லூரிகள் உருவாகி வரும் இத்தொகுதியில் அரசுக் கலைக்கல்லூரி ஏற்படுத்தித் தர வேண்டும், அவிநாசி சாலையில் முக்கிய இடங்களில் சாலைகளை கடக்க சுரங்க நடைபாதைகளை ஏற்படுத்தித் தர வேண்டும், சிங்காநல்லூர் உழவர் சந்தை வளாகத்தை மேம்படுத்த வேண்டும், பயனீர் மில் சாலையில் உள்ள சிஎம்சி காலனியில் உள்ள குடியிருப்புகளை மேம்படுத்தித் தர வேண்டும். பீளமேடு - காந்திமாநகர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தண்டவாளத்தை கடக்க சுரங்க நடைபாதை ஏற்படுத்தித் தர வேண்டும், விமான நிலைய வரிவாக்கப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும், விமான நிலைய விரிவாக்கத்துக்காக நிலத்தை அளித்தவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை விரைவில் தர வேண்டும் பஞ்சாலைகளின் கட்டமைப்பை மேம்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்றவை இத்தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் நா.கார்த்திக் போட்டியிட்டு 75,459 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட சிங்கை என். முத்து 70,279 வாக்குகளும், பாஜக வேட்பாளர் சி.ஆர்.நந்தகுமார் 16,605 வாக்குகளும், மதிமுக வேட்பாளர் அர்ஜூன் ராஜ் 4,354 வாக்குகளும் பெற்றனர்.

இத்தொகுதியில் உள்ள பகுதிகள்

மாநகராட்சியின் 37, 38, 39 40, 53, 55, 56, 57, 58, 59 , 60, 61, 62, 63, 64, 65, 66, 74, 75 ஆகிய 19 வார்டுகள் இத்தொகுதியில் வருகின்றன. பீளமேடு, விளாங்குறிச்சி சாலை, எல்லைத் தோட்டம் சாலை, பாப்பநாய்கன்பாளையம், நவ இந்தியா, உடையாம்பாளையம், சிங்காநல்லூர் உப்பிலிபாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, .உக்கடத்தின் குறிப்பிட்ட பகுதிகள், ஒண்டிப்புதூர், இஎஸ்ஐ,ஹோப்காலேஜ், மசக்காளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகள் இத்தொகுதியில் உள்ளன.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,60,790

பெண்

1,62,799

மூன்றாம் பாலினத்தவர்

25

மொத்த வாக்காளர்கள்

3,23,614

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

சிங்கை என்.முத்து

அதிமுக

2

என்.கார்த்திக்

திமுக

3

ஆடிட்டர் அர்ஜூன்ராஜ்

மதிமுக

4

அசோக் ஜெயேந்தர்

பாமக

5

சி.ஆர்.நந்தகுமார்

பாஜக

6

எஸ். கல்யாணசுந்தரம்

நாம் தமிழர்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1967 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

1967

பி. வேலுச்சாமி

பிரஜா சோசலிஸ்டு கட்சி

38378

1971

எ. சுப்ரமணியன்

பிரஜா சோசலிஸ்டு கட்சி

35888

1977

ஆர். வெங்குடுசாமி என்ற வெங்குடு

இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

25820

1980

எ. டி. குலசேகர்

திமுக

44523

1984

ஆர். செங்காளியப்பன்

ஜனதா கட்சி

54787

1989

இரா. மோகன்

திமுக

63827

1991

பி. கோவிந்தராசு

அதிமுக

68069

1996

என். பழனிசாமி

திமுக

92379

2001

கே. சி. கருணாகரன்

இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

82773

2006

ஆர். சின்னசாமி

அதிமுக

100283

2011

ஆர். சின்னசாமி

அதிமுக

89487

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

1967

வி. கே. எல். கவுண்டர்

காங்கிரஸ்

25115

1971

பி. எல். சுப்பையன்

காங்கிரஸ் (ஸ்தாபன)

20848

1977

ஆர். செங்காளியப்பன்

ஜனதா கட்சி

24024

1980

ஆர். வெங்குடுசாமி என்ற வெங்குடு

இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

41302

1984

எ. சுப்பரமணியம்

காங்கிரஸ்

49856

1989

பி. எல். சுப்பையா

காங்கிரஸ்

25589

1991

ஆர். செங்காளியப்பன்

ஜனதா கட்சி

46099

1996

ஆர். துரைசாமி

அதிமுக

33967

2001

என். பழனிசாமி

திமுக

62772

2006

எ. சௌந்தரராஜன்

இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

100269

2011

மயூரா ஜெயகுமார்

காங்கிரஸ்

55161

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

சின்னசாமி.R

அதிமுக

100283

2

சௌந்தரராஜன்.A

மார்க்சிய கம்யூனிஸ்ட்

100269

3

பொன்னுசாமி.M

தேமுதிக

31268

4

வேலுசாமி.V

பாஜக

5057

5

ராஜ்குமார்.S

சுயேச்சை

2019

6

நக்கீரன்.N

பகுஜன் சமாஜ் கட்சி

1371

240267

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

சின்னசாமி.R

அதிமுக

89487

2

மயூரா S ஜெயகுமார்

காங்கிரஸ்

55161

3

ராஜேந்திரன்.R

பாஜக

8142

4

தண்டபாணி.P

லோக் சட்டா கட்சி

1983

5

வாசன்.V.V

சுயேச்சை

1663

6

தேவராஜ்.R

உழைப்பாளி மக்கள் கட்சி

663

7

அய்யாசாமி.S.P

பகுஜன் சமாஜ் கட்சி

660

8

கனகராஜன்.N

சுயேச்சை

350

9

சரவணன்.K

சுயேச்சை

319

10

ராஜா.S.M

சுயேச்சை

299

11

சுந்தரராஜன்K

சுயேச்சை

176

158903

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x