

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| அமுல்கந்தசாமி | அதிமுக |
| ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) | திமுக |
| எம்.எஸ்.முருகராஜ் | அமமுக |
| டி. செந்தில்ராஜ் | மக்கள் நீதி மய்யம் |
| சி.கோகிலா | நாம் தமிழர் கட்சி |
மலைப் பகுதியையும், சமவெளிப் பகுதியையும் இணைத்து கொண்டுள்ள வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதி கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தனித்தொகுதியான வால்பாறைத் தொகுதி, தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரிசையில் 124-வது இடத்தில் உள்ளது. இதுவரை 12 சட்டப்பேரவை தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்துள்ளது. கேரளா மாநிலத்தை ஒட்டியுள்ள இந்தத் தொகுதியில் புகழ் பெற்ற மாசணியம்மன் கோயில் அமைந்துள்ளது இத்தொகுதியின் முக்கிய அடையாளமாக உள்ளது. கோவையின் டெல்டா பகுதியாக கருதப்படும் ஆனைமலை பழைய ஆயக்கட்டுபகுதி, நூற்றுக்கும் மேற்பட்ட தென்னைநார் தொழிற்சாலைகள், நார்கழிவு (பித்) கட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகள், கல்லூரிகள் உள்ளிட்டவை இத்தொகுதியில் உள்ளன.
வால்பாறை தாலுக்கா, மேற்குத் தொடர்ச்சி மலையில், 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. சிறிதும், பெரிதுமாக 54 எஸ்டேட்களையும் அவற்றில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களையும் கொண்டுள்ளது. இங்கு வசிப்பவர்களில் நூற்றுக்கு 70 சதவீதம் பேர் தோட்டத் தொழிலாளர்களாக உள்ளனர். வால்பாறையின் மேல்தொகுதியான மலைப்பகுதியில் தேயிலை உற்பத்தியும், கீழ்தொகுதியான சமவெளிப்பகுதியில் விவசாயம், தென்னைநார் தொழிற்சாலைகளும், கொப்பரை உற்பத்தி ஆகியவை முக்கிய தொழில்களாக உள்ளன.
தொகுதிகள் அடங்கிய பகுதிகள் :
வால்பாறை வட்டத்தில் மலைகிராமங்கள், வால்பாறை நகராட்சி வார்டுகள், ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்கள், பொள்ளாச்சி தாலுக்காவின் சில கிராமங்கள், கோட்டூர், ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம் பேரூராட்சிகள் ஆகியவை வால்பாறைத் தொகுதியில் அடங்கியுள்ளன.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இத்தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த கஸ்தூரி வாசு வெற்றி பெற்றார். கடந்த ஜனவரி மாதம் மாவட்ட நிர்வாத்தினர் வெளியிட்ட பட்டியலின் அடிப்படையில், இத்தொகுதியில் உள்ள வாக்காளர்களின் விவரம்,
வால்பாறை தொகுதி மக்களின் கோரிக்கைகள்
வால்பாறை தோட்டத் தொழிலாளர்களுக்கு, கேரளாவுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது நீண்ட நாட்களாக தொழிலாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வரும் முக்கிய கோரிக்கையாகும். வால்பாறை பகுதி மக்களின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது வன விலங்குகள். அருகேயுள்ள வனப்பகுதிகளில் இருந்து பகல், இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் நுழைந்து உடைமைகளை சேதப்படுத்துவதும், மனிதர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதும் தொடர்கிறது.
மனித - வனவிலங்கினங்கள் மோதல் சம்பவங்களை தடுக்க கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்த வேண்டும், வனவிலங்குகளிடம் இருந்து தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும். அது தவிர, சுற்றுலாவை பிரதானமாக நம்பியுள்ள இப்பகுதியில் சுற்றுலா மேம்பாடு தொடர்பான திட்டங்களுக்கு, அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்பதும் இத்தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சமவெளிப் பகுதியான ஆனைமலையில், அரசு தொழில் பயிற்சி கல்லூரி, ஆனைமலை வட்டார விவசாயிகள் பயனடையும் வகையில் தினசரி காய்கறி மார்க்கெட் . ஆனைமலைப்பகுதிக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம், நிரந்தர நெல் கொள்முதல் நிலையம், தீயணைப்பு நிலையம் ஆகியவை ஏற்படுத்த வேண்டும் என சமமெளிப் பகுதியில் வசிக்கும் தொகுதி மக்கள் கோரிக்கைகளாக தெரிவிக்கின்றனர்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 95,926 |
| பெண் | 1,00,769 |
| மூன்றாம் பாலினத்தவர் | 10 |
| மொத்த வாக்காளர்கள் | 1,96,705 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | வி.கஸ்தூரி வாசு | அதிமுக |
| 2 | த.பால்பாண்டி | திமுக |
| 3 | பி. மணிபாரதி | இ.கம்யூ |
| 4 | உ. சிங்காரவேல் | பாமக |
| 5 | பி. முருகேசன் | பாஜக |
| 6. | எம்.சரளாதேவி | நாம் தமிழர் |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1967 - 2011 )
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
| 1967 | ஈ. இராமசாமி | திமுக | 40945 |
| 1971 | ஈ. இராமசாமி | திமுக | 38779 |
| 1977 | ஆர். எஸ். தங்கவேலு | அதிமுக | 20926 |
| 1980 | எ. டி. கருப்பையா | இந்திய பொதுவுடமைக் கட்சி | 46406 |
| 1984 | வி. தங்கவேலு | காங்கிரஸ் | 48779 |
| 1989 | பி. லட்சுமி | அதிமுக (ஜெ) | 38296 |
| 1991 | எ. சிறீதரன் | அதிமுக | 55284 |
| 1996 | வி. பி. சிங்காரவேலு | திமுக | 55284 |
| 2001 | கோவை தங்கம் | தமாகா | 47428 |
| 2006 | கோவை தங்கம் | காங்கிரஸ் | 46561 |
| ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் |
| 1967 | என். நாச்சிமுத்து | காங்கிரஸ் | 20868 |
| 1971 | எம். குப்புசாமி | காங்கிரசு (ஸ்தாபன) | 14728 |
| 1977 | எ. டி. கருப்பையா | இந்திய பொதுவுடமைக் கட்சி | 16241 |
| 1980 | கோவைதங்கம் | காங்கிரஸ் | 33354 |
| 1984 | எ. டி. கருப்பையா | இந்திய பொதுவுடமைக் கட்சி | 26109 |
| 1989 | டி. எம். சண்முகம் | திமுக | 31624 |
| 1991 | எ. டி. கருப்பையா | இந்திய பொதுவுடமைக் கட்சி | 34100 |
| 1996 | குறிச்சிமணிமாறன் | அதிமுக | 30012 |
| 2001 | கே. கிருட்டிணசாமி | புதிய தமிழகம் | 29513 |
| 2006 | எசு. கலையரன் சுசி | விடுதலை சிறுத்தைகள் கட்சி | 25582 |
2006 தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | கோவைதங்கம்.N | காங்கிரஸ் | 46561 |
| 2 | கலைஅரசன் சுசி.S | விடுதலைச் சிறுத்தைகள் கட்சி | 25582 |
| 3 | முருகராஜ்.S | தேமுதிக | 6845 |
| 4 | தங்கவேல்.M | பாஜக | 2861 |
| 5 | ஸ்ரீதரன்.A | சுயேச்சை | 1696 |
| 6 | தேவகி.S | பகுஜன் சமாஜ் கட்சி | 823 |
| 7 | திலகவதி.S | ஐக்கிய ஜனதா தளம் | 521 |
| 8 | ரவிச்சந்திரன்.S | சுயேச்சை | 447 |
| 9 | பாலசுப்ரமணியன்.V | சுயேச்சை | 390 |
| 10 | கனகராஜ்.K | சுயேச்சை | 372 |
| 11 | மனோகரன்.S | சுயேச்சை | 223 |
| 86321 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | ஆறுமுகம்.M | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | 61171 |
| 2 | கோவைதங்கம்.N | காங்கிரஸ் | 57750 |
| 3 | முருகேசன்.P | பாஜக | 2273 |
| 4 | ரங்கசாமி.M | சுயேச்சை | 1912 |
| 5 | ஆறுமுகம்.M | சுயேச்சை | 787 |
| 6 | ராமச்சந்திரன்M | பகுஜன் சமாஜ் கட்சி | 547 |
| 124440 |