

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| பொள்ளாச்சி ஏ. ஜெயராமன் | அதிமுக |
| வரதராஜன் | திமுக |
| கே.சுகுமார் | அமமுக |
| சதீஷ்குமார் | மக்கள் நீதி மய்யம் |
| வி.லோகேஸ்வரி | நாம் தமிழர் கட்சி |
இயற்கை எழில் கொஞ்சும், குளிர்ச்சி மிகுந்த தொகுதிகளில் ஒன்றாக கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி உள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரிசையில் 123-வது இடத்தில் பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதி உள்ளது. தொகுதி உருவாகியதில் இருந்து, கடந்த தேர்தல் வரை 15 சட்டப்பேரவைத் தேர்தல்களை இந்தத் தொகுதி சந்தித்துள்ளது.
கேரளா மாநிலத்தை ஒட்டியுள்ள இந்த தொகுதியில் புகழ் பெற்ற பொள்ளாச்சி மாரியம்மன், சூலக்கல் மாரியம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. இவை பொள்ளாச்சி தொகுதியின் முக்கிய அடையாளமாக உள்ளன. அது தவிர, இத்தொகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தென்னைநார் தொழிற்சாலைகள், நார்கழிவு (பித்) கட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகள், தனியார் கல்லூரிகள் உள்ளிட்டவையும் அமைந்துள்ளன.
வேகமாக வளர்ச்சியடைந்து வரும் தொகுதிகளில் ஒன்றான, பொள்ளாச்சியில் நூறாண்டுகள் பழமை வாய்ந்த கால்நடைச் சந்தை மற்றும் காந்தி காய்கறி சந்தை ஆகியவை அமைந்துள்ளன.
ஏராளமான தனியார் தொழில்நுட்ப கல்லூரிகள், வேளாண்மை கல்லூரி இங்கு உள்ளது. விவசாயிகள், வியாபாரிகள் அதிகளவில் உள்ளனர். கொங்கு வேளாளர், செட்டியார், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வசிக்கும் பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதியில், பல்வேறு சமூகத்தினரும் கணிசமாக வசிக்கின்றனர். கவுண்டர் இனத்தை சேர்ந்தவர்கள் இத்தொகுதியின் பெரும் வாக்கு வங்கியாக கருதப்படுகின்றனர். அதனால் பெரும்பாலும் அந்த இனத்தை சேர்ந்தவர்களே அனைத்து கட்சியாலும் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
பொள்ளாச்சி வட்டத்தில் ஆச்சிபட்டி, அனுப்பர்பாளையம், அய்யம்பாளையம், போடிபாளையம், சிக்கராயபுரம், சின்ன நெகமம், தேவம்பாடி, கிட்டசூராம்பாளையம், கொல்லபட்டி, காபுலிபாளையம், குள்ளக்காபாளையம், குள்ளிசெட்டிபாளையம், குரும்பபாளையம், மண்ணூர், , நல்லூத்துக்குளி, என்.சந்திராபுரம், ஒக்கிலிபாளையம், புரவிபாளையம், புளியம்பட்டி, ராமபட்டிணம், ராசக்காபாளையம், ராசிசெட்டிபாளையம், ஆர்.பொன்னாபுரம், சந்தேகவுண்டன்பாளையம், தாளக்கரை, திம்மங்குத்து, வடக்கிபாளையம், வெள்ளாளபாளையம், அரசம்பாளையம், பணப்பட்டி, மேட்டுபாவி, குளத்தூர், ஜமீன்முத்தூர் மற்றும் சேர்வைகாரன்பாளையம் கிராமங்கள், பெரிய நெகமம் (பேரூராட்சி), ஆச்சிப்பட்டி (சென்சஸ் டவுன்) மற்றும் பொள்ளாச்சி (நகராட்சி) உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.
கடந்த 2016-ம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் விவரம்
கடந்த 2016-ம் ஆண்டு இந்த தொகுதியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் 78,553 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுகவை சேர்ந்த ஆர்.தமிழ்மணி 65,185 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். கொமதேக வேட்பாளர் கே.நித்தியானந்தம் 7,722 வாக்குகளையும், பாஜக வேட்பாளர் ஆர்.சிவக்குமார் 5,363 வாக்குகளையும், தேமுதிக வேட்பாளர் எஸ்.முத்துகுமார் 4,893 வாக்குகளையும் பெற்றனர். நோட்டாவுக்கு 2,254 பேர் வாக்கு அளித்திருந்தனர்.
கோரிக்கைகள்
பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் முழுமையாக முடிக்கப்படாத, பாதாளச் சாக்கடை திட்டப் பணியால், நகர் பகுதியில் தினமும் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசல் நகரின் முதன்மையான பிரச்சினையாக உள்ளது. பொள்ளாச்சி மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ள பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்ட தனி மாவட்டம் ஏற்படுத்த வேண்டும், என்ற கோரிக்கை கடந்த 40 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட இந்த தொகுதியில், தென்னை சாகுபடிக்கு அடுத்தப்படியாக கரும்பு, பந்தல் காய்கறிகள் ஆகியவை அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. தமிழகத்தில் அதிகம் தென்னை சாகுபடி நடைபெறும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் அலுவலகம் அமைக்க வேண்டும் என்ற மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி பகுதியில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் முக்கிய கோரிக்கை ஆகும்.
கடந்த 1952 முதல் 2016 வரை நடந்த 15 சட்டப்பேரவைத் தேர்தல்களில், 9 முறை அதிமுகவும், 3 முறை திமுகவும், 3 முறை காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. இதில், கடந்த 2016-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி வி. ஜெயராமன் 78,553 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர். தமிழ்மணி 65,185 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு வெற்றி பெற்ற, பொள்ளாச்சி வி.ஜெயராமன் தமிழக சட்டப்பேரவைத் துணைத் தலைவராக உள்ளார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,05,643 |
| பெண் | 1,11,317 |
| மூன்றாம் பாலினத்தவர் | 12 |
| மொத்த வாக்காளர்கள் | 2,16,972 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | வி.ஜெயராமன் | அதிமுக |
| 2 | ஆர்.தமிழ்மணி | திமுக |
| 3 | எஸ்.முத்துகுமார் | தேமுதிக |
| 4 | வி.சு.கண்ணப்பன் | பாமக |
| 5 | ஆர்.சிவக்குமார் | பாஜக |
| 6. | கி.உமா மகேஸ்வரி | நாம் தமிழர் |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
| 1952 | நா. மகாலிங்கம் | காங்கிரஸ் | 35148 |
| 1957 | நா. மகாலிங்கம் | காங்கிரஸ் | 520763 |
| 1962 | நா. மகாலிங்கம் | காங்கிரஸ் | 38929 |
| 1967 | எ. பி. எஸ். கவுண்டர் | திமுக | 37480 |
| 1971 | எ. பி. சண்முகசுந்தர கவுண்டர் | திமுக | 41654 |
| 1977 | ஓ . பி. சண்முகசுந்தரம் | அதிமுக | 34896 |
| 1980 | எம். வி. இரத்தினம் | அதிமுக | 52833 |
| 1984 | எம். வி. இரத்தினம் | அதிமுக | 54337 |
| 1989 | வி. பி. சந்திரசேகர் | அதிமுக (ஜெ) | 41749 |
| 1991 | வி. பி. சந்திரசேகர் | அதிமுக | 72736 |
| 1996 | எசு. இராசு | திமுக | 58709 |
| 2001 | பொள்ளாச்சி ஜெயராமன் | அதிமுக | 64648 |
| 2006 | பொள்ளாச்சி ஜெயராமன் | அதிமுக | 62455 |
| ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் |
| 1952 | பி. கே. திருமூர்த்தி | காங்கிரஸ் | 27151 |
| 1957 | கே. பொன்னையா | காங்கிரஸ் | 49309 |
| 1962 | இரங்கசாமி | திமுக | 28780 |
| 1967 | ஈ. கவுண்டர் | காங்கிரஸ் | 25688 |
| 1971 | எ. ஈசுவரசாமி கவுண்டர் | சுயேச்சை | 23396 |
| 1977 | எஸ். இராசு | திமுக | 17952 |
| 1980 | மு. கண்ணப்பன் | திமுக | 39797 |
| 1984 | எஸ். இராசு | திமுக | 47527 |
| 1989 | பி. டி. பாலு | திமுக | 37975 |
| 1991 | அண்டு என்கிற நாச்சிமுத்து | திமுக | 40195 |
| 1996 | பொள்ளாச்சி ஜெயராமன் | அதிமுக | 36895 |
| 2001 | தமிழ் மணி | திமுக | 32244 |
| 2006 | டி. சாந்தி தேவி | திமுக | 59509 |
2006 தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | பொள்ளாச்சி ஜெயராமன்.V | அதிமுக | 62455 |
| 2 | சாந்திதேவி.D | திமுக | 59509 |
| 3 | மீனாக்ஷி சுந்தரம்..S | தேமுதிக | 7543 |
| 4 | ரகுநாதன்.V.K | பாஜக | 2039 |
| 5 | ஜெயராமன்.V.M | சுயேச்சை | 1291 |
| 6 | கோகுல்ராஜ்.G.S | சுயேச்சை | 1003 |
| 7 | மணிகண்டன்..B | சுயேச்சை | 838 |
| 8 | ஜோஸ் தாமஸ்.T | பகுஜன் சமாஜ் கட்சி | 415 |
| 9 | சாந்தி.G | சுயேச்சை | 230 |
| 10 | நடராஜ்.K | சுயேச்சை | 225 |
| 11 | ஆறுமுகம்.P.K | சுயேச்சை | 174 |
| 135722 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | முத்துகருபன்ணசாமி.M.K | அதிமுக | 81446 |
| 2 | நித்யநாதன்.K | கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் | 51138 |
| 3 | ரகுநாதன்.V.K | பாஜக | 3909 |
| 4 | காளிமுத்து.M | பகுஜன் சமாஜ் கட்சி | 1528 |
| 5 | பிரவீன்குமார்.N | சுயேச்சை | 1449 |
| 6 | ஆறுமுகம்.P.K | சுயேச்சை | 1221 |
| 7 | மணிமாறன்.K | இந்திய ஜனநாயக கட்சி | 1056 |
| 141747 |