

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| செல்வராஜ் | அதிமுக |
| டி.ஆர்.சண்முகசுந்தரம் | திமுக |
| பி.சரவணன் | அமமுக |
| கா.யாஸ்மின் | நாம் தமிழர் கட்சி |
கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள மற்றொரு முக்கியத் தொகுதிகளில் ஒன்று மேட்டுப்பாளையம். தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரிசையில் 111-வது இடத்தில் இத்தொகுதி உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தின் நுழைவாயிலாக இந்தத் தொகுதி உளளது.
1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த காரமடை அரங்கநாதர் கோயில், மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயில் ஆகியவை இந்தத் தொகுதியின் முக்கிய அடையாளங்களாக உள்ளன.
நூற்றாண்டு பழமை வாய்ந்த, ஊட்டி மலை ரயில், மேட்டுப்பாளையத்தில் இருந்து தான் இயக்கப்படுகின்றது. அடர்ந்த காடுகளும், பவானி நதியும் தொகுதிக்கு மேற்கு, வடமேற்கு, தென்மேற்கு எல்லையாக அமைந்துள்ளன. கோவை, திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய குடிநீர் திட்டங்கள், இந்த தொகுதியில் உள்ள பவானி ஆற்றை மையப்படுத்தித் தான் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தத் தொகுதியில் பெரிய தொழிற்சாலைகள் எதுவும் அதிகளவில் கிடையாது. விவசாயமுயம், நெசவும் தான் இந்தத் தொகுதி மக்களின் முக்கிய தொழிலாக உள்ளது. வாழை மற்றும் கருவேப்பில்லை சாகுபடி இங்கு முக்கியமானதாக உள்ளது.
அதற்கு அடுத்து பாக்கு, தென்னை, மஞ்சள், கரும்பு உற்பத்திகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. சிறுமுகை மற்றும் காரமடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கைத்தறி நெசவாளர்கள் அதிகளவில் உள்ளனர். இங்கு மனித உழைப்பால் உருவாக்கப்படும், கலை நயம் மிக்க பட்டுச் சேலைகள் சர்வதேச அளவில் பிரபலமானவை ஆகும். ஒக்கலிக்க கவுடர் சமுதாய மக்கள் இந்தத் தொகுதியில் 65 சதவீதத்துக்கும் அதிகமாக வசிக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக இதர இனத்தினர், சிறுபான்மை இனத்தினர் வசிக்கின்றனர்.
கோரிக்கைகள்
மேட்டுப்பாளையம் நகரத்தில், கழிவுநீர் செல்ல வசதியாக பாதாள சாக்கடைத் திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும், பணி முடிந்த சாலைகளை விரைவில் அமைத்துத் தர வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர். தவிர, மேட்டுப்பாளையத்தில் உற்பத்தி செய்யப்படும் கருவேப்பிலை, எண்ணெய் பிரித்தல் உள்ளிட்ட அடுத்தடுத்த பணிகளுக்காக , கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.இதைத் தவிர்க்க, மேட்டுப்பாளையத்தில் கருவேப்பிலை தொழிற்கூடம் அமைக்கப்படும் என மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். அது இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. பவானி ஆற்றை மையப்படுத்தி, பல ஆயிரம் கோடி மதிப்பில் அத்திக்கடவு - அவிநாசி கூட்டுக்குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இது பொதுமக்களிடம் வரவேற்பபை பெற்றாலும், இத்திட்டத்தின் தொடக்கப் பகுதியில் உள்ள காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய கிராமங்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. இது தொகுதி மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் மேற்கண்ட பகுதிகள் இணைக்கப்படும் என அரசு அறிவித்தாலும், அது மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இங்குள்ள காகித அட்டை தயாரிப்பு மற்றும் துணி தயாரிப்பு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவுகள் ஆற்றில் கலந்து நீர்நிலையை மாசுபடுத்தி வருகின்றன. இதை தீர்க்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இங்குள்ள பவானி ஆற்றை மையப்படுத்தி, பல குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தினாலும், இந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தட்டுப்பாடு அற்ற, சீரான குடிநீர் விநியோகத்துக்கு தேவையான நடவடிக்கையை எடுக்க அரசுக்கு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தத் தொகுதியின் மற்றொரு முக்கிய பிரச்சினையாக மனித-வன விலங்குகள் மோதல் உள்ளது. அதிகளவில் வனப் பகுதியை உள்ளடக்கிய இந்தப் பகுதியில் மனித – வன விலங்குகள் மோதல் அடிக்கடி நடக்கின்றன. இதனால் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். விளை நிலங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களையும் 40 சதவீதம் அளவுக்கு வனவிலங்குகள் சேதப்படுத்தி விடுகின்றன. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்கண்டப் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். அதேபோல், கைத்தறி நெசவாளர்களின் தொழிலை மேம்படுத்த சலுகை முறையில் மின்சாரம், மூலப் பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பாவு நூல் விலையை குறைக்க வேண்டும், மருத்துவ வசதிகள் செய்து தர வேண்டும் என்பதும் இத்தொகுதியிலெ் நெசவுத் தொழிலை மட்டும் நம்பியுள்ள 10ஆயிரம் முதல் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் முக்கிய கோரிக்கையாகும்.
மேட்டுப்பாளையம் தொகுதியில் தொடர்ந்து 3-வது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக ஓ.கே.சின்னராஜ் உள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.கே.சின்னராஜ் 93,595 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட சுரேந்திரன் 77,481 வாக்குகள் பெற்றார். தமாகா சார்பில் போட்டியிட்ட டி.ஆர்.சண்முகசுந்தரம் 13,324 வாக்குகள், பாஜக சார்பில் போட்டியிட்ட ஜெகந்நாதன் 11,036 வாக்குகள் பெற்றார்.
இத்தொகுதியில் உள்ள பகுதிகள்
மேட்டுப்பாளையம் நகராட்சி, சிறுமுகை, காரமடை, வீரபாண்டி, கூடலூர் ஆகிய நான்கு பேரூராட்சிகள் மற்றும் நூற்றுக் கணக்கான கிராமங்களை உள்ளடக்கிய 17 ஊராட்சிகள் இந்தத் தொகுதியில் உள்ளன.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,43,198 |
| பெண் | 1,52,566 |
| மூன்றாம் பாலினத்தவர் | 38 |
| மொத்த வாக்காளர்கள் | 2,95,802 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | ஒ.கே.சின்னராஜ் | அதிமுக |
| 2 | எஸ்.சுரேந்திரன் | திமுக |
| 3 | டி.ஆர்.சண்முகசுந்தரம் | தமாகா |
| 4 | கே.மூர்த்தி | பாமக |
| 5. | பி.ஜெகந்நாதன் | பாஜக |
| 6. | ஏ.அப்துல் வகாப் | நாம் தமிழர் |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
| 1951 | கெம்பி கவுண்டர் | சுயேச்சை | 30687 | 58.09 |
| 1957 | டி. இரகுபதி தேவி | காங்கிரஸ் | 20690 | 49.37 |
| 1962 | என். சண்முகசுந்தரம் | காங்கிரஸ் | 25398 | 46.9 |
| 1967 | டி. டி. எஸ். திப்பையா | காங்கிரஸ் | 29709 | 45.42 |
| 1971 | எம். சி. தூயமணி | திமுக | 39013 | 56.08 |
| 1977 | எஸ். பழனிசாமி | அதிமுக | 26029 | 32.37 |
| 1980 | எஸ். பழனிசாமி | அதிமுக | 48266 | 58.96 |
| 1984 | எம். சின்னராசு | அதிமுக | 61951 | 59.6 |
| 1989 | வி. கோபாலகிருஷ்ணன் | காங்கிரஸ் | 34194 | 28.21 |
| 1991 | எல். சுலோச்சனா | அதிமுக | 72912 | 60.82 |
| 1996 | பி. அருண்குமார் | திமுக | 71954 | 55.6 |
| 2001 | எ. கே. செல்வராசு | அதிமுக | 85578 | 60.02 |
| 2006 | ஒ. கே. சின்னராசு | அதிமுக | 67445 | --- |
| 2011 | ஒ. கே. சின்னராசு | அதிமுக | 93700 | --- |
| ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
| 1951 | அப்துல் சலாம் ஆசாத் | காங்கிரஸ் | 17946 | 33.97 |
| 1957 | மாதண்ணன் | சுயேச்சை | 19587 | 46.74 |
| 1962 | கே. வெள்ளியங்கிரி | திமுக | 19145 | 35.36 |
| 1967 | தூயமணி | திமுக | 26736 | 40.87 |
| 1971 | இராமசாமி | சுயேச்சை | 30553 | 43.92 |
| 1977 | டி. டி. எஸ். திப்பையா | ஜனதா கட்சி | 20717 | 25.76 |
| 1980 | கே. விஜயன் | காங்கிரஸ் | 32311 | 39.47 |
| 1984 | எம். மாதையன் | திமுக | 41527 | 39.95 |
| 1989 | பொள்ளாச்சி ஜெயராமன் | அதிமுக (ஜெ) | 27034 | 22.3 |
| 1991 | பி. அருண்குமார் | திமுக | 31173 | 26.01 |
| 1996 | கே. துரைசாமி | அதிமுக | 41202 | 31.84 |
| 2001 | பி. அருண்குமார் | திமுக | 44500 | 31.21 |
| 2006 | பி. அருண்குமார் | திமுக | 67303 | --- |
| 2011 | பி. அருண்குமார் | திமுக | 67925 | --- |
2006 தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | சின்னராசு.O.K | அதிமுக | 67445 |
| 2 | அருண்குமார்.B | திமுக | 67303 |
| 3 | சரஸ்வதி.V | தேமுதிக | 10877 |
| 4 | ஜெகநாதன்.P | பிஜேபி | 3187 |
| 5 | பிரேம்நாத்.R | சுயேச்சை | 1346 |
| 6 | பாப்பண்ணன்.T.K | சுயேச்சை | 692 |
| 7 | வீரகுமார்.N | ஐக்கிய ஜனதா தளம் | 369 |
| 8 | சின்னராஜ்.P.S | சுயேச்சை | 327 |
| 151546 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | சின்னராஜ்.O.K | அதிமுக | 93700 |
| 2 | அருண்குமார்.B | திமுக | 67925 |
| 3 | நந்தகுமார்.K.R | பிஜேபி | 5647 |
| 4 | ஜானகி ராமன்.R | கம்யூனிஸ்ட் (மார்க்சிய ) | 1433 |
| 5 | ரவிச்சந்திரன்.B | சுயேச்சை | 1382 |
| 6 | குமார்.P | சுயேச்சை | 708 |
| 7 | காந்தி குமார்.S | யுஎம்கெ (உழைப்பாளி மக்கள் கட்சி) | 647 |
| 8 | ராஜேந்திரன்.S | ஐஜேகே | 394 |
| 171836 |