

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| ஜெயக்குமார் | அதிமுக |
| ஐட்ரீம் இரா. மூரத்தி | திமுக |
| சி.பி.ராமஜெயம் | அமமுக |
| குணசேகரன் | மக்கள் நீதி மய்யம் |
| சு.கமலி | நாம் தமிழர் கட்சி |
தென்னிந்தியாவில் முதல் ரயில் நிலையம் அமைக்கப்பட்ட இடம் என்ற பெருமையைப் பெற்ற தொகுதி ராயபுரம் தொகுதி.
இதன் எல்லைகளாக வடக்கில் ஆர்.கே.நகர் தொகுதி, தெற்கில் துறைமுகம் தொகுதி, மேற்கில் திரு.வி.க.நகர் தொகுதி ஆகியவை அமைந்துள்ளன.
150 ஆண்டுகால பழமை வாய்ந்த ராயபுரம் ரயில் நிலையம், பல்வேறு மாவட்ட மருத்துவமனைகளின் பரிந்துரை மருத்துவமனையாக திகழும் ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை, புனித பீட்டர்ஸ் தேவாலயம் ஆகியவை இத்தொகுதியில் அமைந்துள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தோர் நினைவிடம், இத்தொகுதியில் உள்ள மூலகொத்தலத்தில் அமைந்துள்ளது.
இத்தொகுதியில், கடந்த நவம்பர் (2020) 16-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் விவரங்களின்படி, 90 ஆயிரத்து 265 ஆண் வாக்காளர்கள், 93 ஆயிரத்து 985 பெண் வாக்காளர்கள், 49 இதர வாக்காளர்கள் என மொத்தம் 1 லட்சத்து 84 ஆயிரத்து 299 வாக்காளர்கள் உள்ளனர்.
இங்கு முஸ்லிம்கள் அதிக அளவிலும், அடுத்தபடியாக மீனவர்களும், தலித்துகளும் வசிக்கின்றனர். குறிப்பிட்ட அளவு ஆங்கிலோ இந்தியனும் இங்கு வசிக்கின்றனர். இங்கு ஜவுளி, அப்பளம், ஊறுகாய் மற்றும் பல்வேறு பொருட்கள் மொத்த விற்பனை முக்கிய தொழிலாக உள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்ட நிலையில், ராயபுரத்தில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதனால் மழை வெள்ளத்துக்கு தப்பிய பகுதியாக இத்தொகுதி விளங்குகிறது.
சுத்தமான குடிநீர் விநியோகம் இல்லாதது, குப்பை மேலாண்மையை முறையாக கடைபிடிக்காதது, ஸ்டான்லி மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளை முறையாக அழிக்காமல், கழிவுநீர் வாய்க்காலில் விட்டு வருவது, போக்குவரத்து நெரிசல் போன்றவை இத்தொகுதியின் முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. ராயபுரத்தை 3-வது ரயில் முனையமாக மாற்ற வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.
இத்தொகுதியில் திமுக 5 முறையும், அதிமுக 5 முறையும் வெற்றிபெற்றுள்ளன. அதிமுகவில் 5 முறையும் தற்போது மீன்வளத்துறை அமைச்சராக உள்ள டி.ஜெயக்குமாரே வெற்றிபெற்று வந்துள்ளார். இவர் 1991, 2001, 2006, 2011,2016 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்று வந்துள்ளார்.
2016 தேர்தலில் இவர் 55 ஆயிரத்து 205 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.மனோகர் 47 ஆயிரத்து 174 வாக்குகளை பெற்றார்.
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 90,265 |
| பெண் | 93,967 |
| மூன்றாம் பாலினத்தவர் | 49 |
| மொத்த வாக்காளர்கள் | 1,84,299 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
ராயபுரம் தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )
| சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
| 2011 | டி.ஜெயகுமார் | அதிமுக | |
| 2006 | டி.ஜெயகுமார் | அதிமுக | 53.26 |
| 2001 | டி.ஜெயகுமார் | அதிமுக | 56.76 |
| 1996 | இரா. மதிவாணன் | திமுக | 57.78 |
| 1991 | டி.ஜெயகுமார் | அதிமுக | 59.04 |
| 1989 | இரா. மதிவாணன் | திமுக | 45.95 |
| 1984 | பொன்னுரங்கம் | திமுக | 50.26 |
| 1980 | பொன்னுரங்கம் | திமுக | 50.31 |
| 1977 | பொன்னுரங்கம் | திமுக | 33.54 |
2006 தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | டி.ஜெயகுமார் | அதிமுக | 50647 |
| 2 | சற்குணப்பாண்டியன் | திமுக | 37144 |
| 3 | ராயபுரம்V பாபு | தேமுதிக | 5033 |
| 4 | குமார் | பிஜேபி | 735 |
| 5 | ஸ்ரீனிவாசலு | பிஎஸ்பி | 425 |
| 6 | அலெக்சாண்டர் | எல்ஜேபி | 332 |
| 7 | சொர்ணராஜ் | சுயேச்சை | 266 |
| 8 | அறிவுநிதி . | சுயேச்சை | 187 |
| 9 | சரவணன் | சுயேச்சை | 116 |
| 10 | செல்வராஜ் | சுயேச்சை | 91 |
| 11 | அன்பரசு | சுயேச்சை | 70 |
| 12 | சுதாகர் | சுயேச்சை | 44 |
| 95090 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்வேட்பாளர்கள் கட்சி பதிவான வாக்குகள் 1ஜெயகுமார்.டிஅதிமுக65099 2மனோகர்காங்கிரஸ்43727 3சந்துரு பிஜேபி1683 4ஜெபராஜ் இம்மானுவேல் சுயேச்சை 520 5அசோக் சுயேச்சை 340 6முருகன்சுயேச்சை 241 7தாஸ் பி எஸ் பி 235 8மோகன்சுயேச்சை 201 9ஜெகநாதன் சுயேச்சை 97 10சுப்ரமணியன் சுயேச்சை 89 11கோபிநாதன்சுயேச்சை 87 12ராஜாராமன்சுயேச்சை 74 13சிவகுமார்சுயேச்சை 68 112461