

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| சத்திய நாராயணன் (எ) தி.நகர் சத்தியா | அதிமுக |
| ஜெ.கருணாநிதி | திமுக |
| பரமேஸ்வரன் | அமமுக |
| பரணீஸ்வரன் | மக்கள் நீதி மய்யம் |
| பா.சிவசங்கரி | நாம் தமிழர் கட்சி |
சிவா-விஷ்னு கோயில், பாண்டி பஜார், பனகல் பூங்கா உள்ளிட்டவை தியாகராய நகர் தொகுதியின் முக்கியமான அடையாளங்கள் ஆகும். தியாகராய நகர் தொகுதியில் பிராமணர்கள், வன்னியர்கள், தலித் சமூகத்தினர் அதிகம் வசித்து வருகின்றனர்.
சென்னையின் முக்கிய வணிக பகுதியான தி.நகரில் ஆயிரக்கணக்கான கடைகள் இயங்கி வருகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. குப்பை அதிகமாக வெளியாகிறது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் வந்து போவதால் காற்று மாசுப் பிரச்சனை பெரியளவில் உள்ளது.
தி.நகர் பேருந்து நிலையம் பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இன்றி உள்ளது. இதனால், பயணிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
கோடம்பாக்கம் புதூரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடியிருப்பு சிதிலமடைந்துள்ளதால் சீரமைத்து தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
தி.நகர் கண்ணம்மாபேட்டை, ரங்கராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாதாரண மழைக்கே சாலைகளில் தண்ணீர் தேங்குவது தொடர் கதையாக உள்ளது. முத்து ரெட்டி தோட்டம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. எனவே, மழைநீர் தேங்குவது, குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சென்னையின் இதயப்பகுதி என்று சொல்லப்படும் தியாகராய நகர் சட்டப்பேரவைத் தொகுதி 1957 முதல் தேர்தல்களை சந்தித்து வருகிறது. இந்திய தேசிய காங்கிரஸின் வேட்பாளர் கே.விநாயகம் அந்த தொகுதியின் முதல் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ம.பொ.சிவஞானம் 1967-ல் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.
தியாகராய நகர் தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த பி.சத்தியநாராயணன் உள்ளார். இவர், 2016-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக வேட்பாளர் என்.எஸ்.கனிமொழியை தோற்கடித்தார்.
2016 தேர்தலில் பி.சத்தியநாராயணன்- அதிமுக-பெற்ற வாக்குகள்-53,207
என்.எஸ்.கனிமொழி-திமுக- பெற்ற வாக்குகள்-50,052
2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,16,332 |
| பெண் | 1,19,122 |
| மூன்றாம் பாலினத்தவர் | 43 |
| மொத்த வாக்காளர்கள் | 2,35,497 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
தியாகராயா நகர் - தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 -2006 )
| சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
| 2006 | V.P.கலைராஜன் | அதிமுக | 48.57 |
| 2001 | J. அன்பழகன் | திமுக | 48.55 |
| 1996 | A. செல்லகுமார் | த.மா.கா | 67.16 |
| 1991 | S. ஜெயகுமார் | அதிமுக | 61.19 |
| 1989 | S. A. கணேசன் | திமுக | 43.03 |
| 1984 | K. சௌரிராஜன் | இ.தே.காங்கிரசு | 49.26 |
| 1980 | K. சௌரிராஜன் | கா.கா.காங்கிரசு | 50.58 |
| 1977 | R.E. சந்திரன் ஜெயபால் | திமுக | 30.91 |
2006 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | கலைராஜன் | அதிமுக | 74131 |
| 2 | J.அன்பழகன் | திமுக | 57654 |
| 3 | T .பாண்டியன் | தேமுதிக | 8824 |
| 4 | அரவிந்த் | எல்கேபிடி | 6323 |
| 5 | முக்தா V ஸ்ரீநிவாசன் | பிஜேபி | 4234 |
| 6 | விஸ்வநாதன் | சுயேச்சை | 402 |
| 7 | ராஜேந்திர பிரசாத் | பி எஸ் பி | 200 |
| 8 | ராஜன் | சுயேச்சை | 181 |
| 9 | அன்பழகன் J . | சுயேச்சை | 161 |
| 10 | தேவேந்திரன் | எஸ் பி | 159 |
| 11 | ஹாசன் பைசல் | சுயேச்சை | 76 |
| 12 | நடராஜன் | சுயேச்சை | 70 |
| 13 | அப்புவிமல் | சுயேச்சை | 63 |
| 14 | மகாலிங்கம் | சுயேச்சை | 59 |
| 15 | பாண்டுரங்கம் | சுயேச்சை | 53 |
| 16 | தண்டபாணி | சுயேச்சை | 41 |
| 152632 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | கலைராஜன் | அதிமுக | 75883 |
| 2 | செல்லகுமார் | காங்கிரஸ் | 43421 |
| 3 | ரவிச்சந்திரன் | பிஜேபி | 4575 |
| 4 | ராமசாமி (அ ) டிராபிக் ராமசாமி | சுயேச்சை | 1305 |
| 5 | சாரதா ஜி | ஐஜேகே | 958 |
| 6 | சரத்பாபு | சுயேச்சை | 830 |
| 7 | நாகதாஸ் | பி எஸ் பி | 587 |
| 8 | நரசிம்மன் | சுயேச்சை | 387 |
| 9 | தேவராஜ் | ஐ என்டி | 283 |
| 10 | புருஷோத்தமன் | எஸ் யு சி ஐ | 266 |
| 11 | பிரபாகரன் | ஜே எம் எம் | 235 |
| 12 | சுரேஷ் | சுயேச்சை | 178 |
| 13 | செல்வகுமார் | சுயேச்சை | 178 |
| 14 | ஹரிகிருஷ்ணன் | சுயேச்சை | 142 |
| 15 | குமார் | சுயேச்சை | 126 |
| 16 | சின்னதுரை | சுயேச்சை | 118 |
| 17 | செல்வகுமார் | சுயேச்சை | 109 |
| 18 | ஸ்ரீநிவாசன் | சுயேச்சை | 108 |
| 19 | சுபாஷ் பாபு | சுயேச்சை | 62 |
| 129751 |