Published : 11 Mar 2021 01:30 PM
Last Updated : 11 Mar 2021 01:30 PM

33 - திருப்போரூர்

மாமல்லபுரம்

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:

வேட்பாளர்கள் பெயர் கூட்டணி
திருக்கச்சூர் ஆறுமுகம் (பாமக) அதிமுக
எஸ்.எஸ்.பாலாஜி (விடுதலை சிறுத்தைகள் கட்சி) திமுக
கோதண்டபாணி அமமுக
லாவண்யா மக்கள் நீதி மய்யம்
ச.மோகனசுந்தரி நாம் தமிழர் கட்சி

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் (தொகுதி எண் 33) திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதியும் அடங்கும்.

1952ம் ஆண்டு திருப்போரூர் தொகுதி உருவானது. ஆனால் அடுத்த 1957, 1962 ஆகிய இரண்டு தேர்தல்களில் இந்தத் தொகுதி இல்லை. அதன்பிறகு 1967ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் திருப்போரூர் தொகுதி உருவாகியது.

இத்தொகுதியில், தலித் மக்கள் மற்றும் வன்னியர் சமூதாயத்தினர் சரிசமமான அளவில் உள்ளனர். மேலும், யாதவர், முதலியார் சமுதாயத்தினர் மற்றும் பழங்குடியின சமுதாயத்தினர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இதில், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானப்பது, தலித் மற்றும் வன்னியர் என்ற இரண்டு சமூதாயத்தினரின் வாக்குகளே தீர்மானிக்கின்றன.

தொகுதியில் மீனவ மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது. மீனவர்களின் நீண்ட கால கோரிக்கையான தூண்டில் வளைவு, மீன் இறங்குதளம் உள்ளிட்டவைகள் மற்றும் சர்வதேச சுற்றுலாத்தலமாக விளங்கும் மாமல்லபுரத்தில் பேருந்து நிலையம், சாலை வசதிகள், அரசு விடுதிகள், வெளிநாடு, உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கான 24மணி நேரம் சிகிச்சை அளிக்கக்கூடிய பல்நோக்கு மருத்துவமனை போன்ற வசதிகள் ஏற்படுத்தாதது முக்கிய பிரச்சினையாக உள்ளன.

கடந்த1967 முதல் 2016வரை நடைபெற்ற12 சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக 6 முறையும், அதிமுக 5 முறையும் மற்றும் பாமக ஒருமுறை என வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் கோதண்டபாணி போட்டியிட்டு 70,215 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

எனினும், கடந்த 2018ம் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானது. இதனால், கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தலுடன் திருப்போரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதில், திமுக சார்பில் போட்டியிட்ட இதயவர்மன் 1 லட்சத்து 3 ஆயிரத்து 248. வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் ஆறுமுகம் 82 ஆயிரத்து 235 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

2020-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,39,449

பெண்

1,44,620

மூன்றாம் பாலினத்தவர்

29

மொத்த வாக்காளர்கள்

2,84,098

2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

மு.கோதண்டபாணி

அதிமுக

2

வெ.விஸ்வநாதன்

திமுக

3

சி.ஏ.சத்யா

மதிமுக

4

கி.வாசு

பாமக

5

வ.கோ.ரங்கசாமி

பாஜக

6

இ.எல்லாளன் யூசுப்

நாம் தமிழர்

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள்

ஆண்டு

வெற்றிபெற்றவர்

கட்சி

1952

ராமசந்திரன்

காங்கிரஸ்

1967

முனுஆதி

திமுக

1971

முனுஆதி

திமுக

1977

சொக்கலிங்கம்

திமுக

1980

சொக்கலிங்கம்

திமுக

1984

தமிழ்மணி

அதிமுக

1989

டாக்டர் திருமூர்த்தி

திமுக

1991

தனபால்

அதிமுக

1996

சொக்கலிங்கம்

திமுக

2001

கனிதா சம்பத்

அதிமுக

2006

மூர்த்தி

பாமக

2006 தேர்தல் ஒரு பார்வை (2006-ல் தனி தொகுதியாக இருந்தது)

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

D.மூர்த்தி

பாமக

73328

2

தனபால்

அதிமுக

63164

3

கண்ணப்பன்

தேமுதிக

19227

4

பொன்வரதராஜன்

பிஜேபி

1979

5

ஸ்ரீநிவாசன்

பி எஸ் பி

1177

6

ராணியப்பன்

சி பி ஐ (L)

955

7

ஜெகதீசன்

சுயேச்சை

926

8

பாலு

எல் ஜே பி

602

9

பற்குணன்

சுயேச்சை

536

10

சந்தியப்பன்

சுயேச்சை

448

11

K .S.தனபாலன்

சுயேச்சை

366

162708

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K. மனோகரன்

அதிமுக

84169

2

ஆறுமுகம்

பாமக

65881

3

சிவலிங்கம்

பு பா

1598

4

கோபாலகிருஷ்ணன்

பிஜேபி

1579

5

ராஜமுத்து

சுயேச்சை

1367

6

ஆனந்தபாபு

சுயேச்சை

902

7

சரவணன்

பி எஸ் பி

807

8

செல்வம்

சுயேச்சை

603

9

பக்கிரி அம்பேத்கார்

ஜேஎம்எம்-யு

352

10

பிரபாகரன்

சுயேச்சை

334

11

பாலு

எல்ஜேபி

242

12

தேவராஜ்

சுயேச்சை

230

13

குணசேகரன்

சுயேச்சை

214

14

ராஜேஷ்

சுயேச்சை

202

15

ஹரி

சுயேச்சை

159

158639

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x