Published : 04 Mar 2021 05:51 AM
Last Updated : 04 Mar 2021 05:51 AM

அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் நிறைவு: கடைசி நாளில் ஆயிரக்கணக்கில் குவிந்த நிர்வாகிகள்

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து அளிக்க நேற்று கடைசி நாள் என்பதால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளேயும், வெளியேயும் கூடியிருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டம். படங்கள்: ம.பிரபு

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிப்பதற்கான கடைசிநாள் நேற்று என்பதால், ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் தலைமை அலுவலகத்தில் குவிந்தனர்.

நேற்று மாலை 5 மணியுடன் விருப்ப மனு விநியோகம் மற்றும் திரும்ப பெறுவதற்கான காலக்கெடு முடிவடைந்தது.

கடைசிநாள் என்பதால், நேற்று காலை முதலே நிர்வாகிகள் கூட்டம் அலை மோதியது. விருப்ப மனு அளித்தவர்களை வரவேற்க அவர்களின் ஆதரவாளர்கள் மேள, தாளங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

தலைமை அலுவலகத்தில் அவ்வபோது அமைச்சர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் வந்து, நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களை பெற்றனர். குறிப்பாக நேற்று காலை அமைச்சர் டி.ஜெயக்குமார் நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டார்.

நேற்று முன்தினம் மாநிலங்களவை முன்னாள் எம்பி வி.மைத்ரேயன், திருநங்கை அப்சரா, செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி உள்ளிட்டோர் விருப்ப மனு அளித்தனர். நேற்று, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் 2-வது மகன் ஜெயிபிரதீப் வில்லிவாக்கம், கொளத்தூர், கம்பம் உட்பட தேனி மாவட்டத்தின் 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என 50-க்கும் மேற்பட்டோர் என 120-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனுக்களை அளித்தனர். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திருமங்கலம் தொகுதிக்கு விருப்ப மனு அளித்தார். அமைச்சர் செல்லூர் கே.ராஜு, தற்போது எம்எல்ஏவாக உள்ள மதுரை மேற்கு தொகுதியையும் சேர்த்து மேலும் 3 தொகுதிகளுக்கு போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார். நேற்று மாலை நிலவரப்படி அதிமுகவில் 8,241 மனுக்கள் விநியோகிக்கப்ரட்டிருந்தன. விருப்ப மனு அளித்தவர்களிடம் மாவட்ட வாரியாக நேர்காணல் இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x